ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி?

ப்ளாக்கர் தளங்களின் மேலே Default ஆக Navigation Bar இருப்பதை பார்த்திருப்பீர்கள். அது நமது டெம்ப்ளேட்டின் அழகுக்கு இடைஞ்சலாக இருக்கும். அதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
 


அதனை நீக்குவதற்கு இன்னொரு காரணம், அதில் Next Blog என்று இருப்பது. அதனை க்ளிக் செய்தால் சில நேரங்களில் தேவையில்லாத தளங்கள் (Spam blogs) அல்லது ஆபாச தளங்கள் (Adult Blogs) வரும். இதற்காகவும் நாம் அவசியம் நீக்க வேண்டும்.

 முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.
 


]]></b:skin>

என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.


#navbar-iframe {height:0px;visibility:hidden;display:none}

பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான்… இனி உங்கள் தளத்தில் Navbar தெரியாது.

Update:

ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..

42 thoughts on “ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி?”

  1. @NIZAMUDEEN
    @சரவணன்.D
    @மனசாட்சியே நண்பன்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே!

    Reply
  2. "#navbar-iframe {height:0px;visibility:hidden;display:none}"
    என்ற code வும் சேர்ந்து தெரிகிறது. pls உதவுங்கள் நண்பர்

    Reply
  3. @Reddiyur

    நீங்கள் ரெட்டியூர் தளத்தை தானே சொல்கிறீர்கள்? ஆனால் அந்த தளத்தில் Navbar தெரியவில்லையே? அத்துடன் அந்த Code-ம் தெரியவில்லை.

    Reply
  4. Hi Abdul – This tip is very helpful. However, I think my blog will look good, if I have a customized image as a header, rather than the default text. Can you post blog to set an image as a header?

    I will add both to my blogs 🙂

    Thanks.

    Reply
  5. @Premkumar Masilamani

    //I think my blog will look good, if I have a customized image as a header, rather than the default text.//

    நீங்கள் blogger dashboard=>settings=>page elements சென்றால், அங்கு உங்கள் ப்ளாக்கின் தலைப்பு(Header) என்று இருக்கும். அதில் edit பட்டனை அழுத்தினால் header image சேர்ப்பதற்கான option வரும். உங்களுக்கு ஏற்ற படத்தை மாற்றிக் கொள்ளவும்.

    Reply
  6. //ஆமினா said… 13

    பயனுள்ள பகிர்வு !
    வாழ்த்துக்கள்!
    //

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி..!

    Reply
  7. //Speed Master said…

    Hello mr.Basith its not working for me shows error in saving the template//

    தற்போது அதை நீக்கிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா!

    Reply
  8. //Assouma Belhaj said…

    நல்ல தகவல் நன்பர்
    //

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி..!

    Reply
  9. சகோதரர் பாசித் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
    நான் இப்போதுதான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்திரிப்பவள்.
    தங்களுடைய பக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
    இப்படி உங்கள் ப்ளாக்கை எனது தோழி தெரிவித்ததால் தான் தெரிந்தது.
    இன்னும் முழுவதும் படித்தால் நிறைய விஷயங்களை நான் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    அப்சரா.

    Reply
  10. அன்புள்ள
    நண்பர் அவர்களே வணக்கம் உங்களின் பதிவு என் போன்ற புதியவர்களுக்கு வரப்பிரசாதம் மிகவும் பயன் தரகூடிய தகவல்கள் ஒரு சிறிய விளக்கம் தேவை பிளக்கரில் பக்க எண்கள் என்ற பதிவில் குறிப்பிட்ட படி செய்த போது NAVBARக்கு மேல் கோடு தெரிகின்றது அதை நீக்குவது எப்படி? என்று தெரியவில்லை பதிவில் விளக்கம் அளிக்கவும் நேரம் இருக்கும் போது நன்றி

    Reply
  11. ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்கிய‌ பின் எப்ப‌டி log in ப‌ண்ணுவ‌து? உங‌க‌ள் ப‌திலுக்காக‌ காத்திருக்கிறேன்…

    Reply
  12. //veedu said…

    அன்புள்ள
    நண்பர் அவர்களே வணக்கம் உங்களின் பதிவு என் போன்ற புதியவர்களுக்கு வரப்பிரசாதம் மிகவும் பயன் தரகூடிய தகவல்கள் ஒரு சிறிய விளக்கம் தேவை பிளக்கரில் பக்க எண்கள் என்ற பதிவில் குறிப்பிட்ட படி செய்த போது NAVBARக்கு மேல் கோடு தெரிகின்றது அதை நீக்குவது எப்படி? என்று தெரியவில்லை பதிவில் விளக்கம் அளிக்கவும் நேரம் இருக்கும் போது நன்றி
    //

    நண்பா..! .showpageArea என தொடங்கும் code-ஐ நீங்கள் எங்கு paste செய்துள்ளீர்கள் என சரி பார்க்கவும்.

    ]]>

    என்ற Code-ஐத் தேடி அதற்கு முன்னால் Paste செய்யவும்.

    நீங்கள் அதனை சரியாக paste செய்துள்ளீர்களா என சரி பார்க்கவும்.

    Reply
  13. //ந‌ண்ப‌ன் said…

    ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்கிய‌ பின் எப்ப‌டி log in ப‌ண்ணுவ‌து? உங‌க‌ள் ப‌திலுக்காக‌ காத்திருக்கிறேன்…
    //

    ப்ளாக்கர் தளத்தை புக்மார்க் செய்துக் கொள்ளுங்கள் நண்பா!

    Reply
  14. வணக்கம் தோழரே

    ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்கிய‌ பின் எப்ப‌டி log in ப‌ண்ணுவ‌து? உங‌க‌ள் ப‌திலுக்காக‌ காத்திருக்கிறேன்…
    //

    ப்ளாக்கர் தளத்தை புக்மார்க் செய்துக் கொள்ளுங்கள் நண்பா!

    சரி ஒரு பிளாகின் ஆதர் எப்படி புதிய இடுகைகளை இடுவது ? திருத்துவது போன்ற வேலைகளை செய்வது ?
    http://sivaayasivaa.blogspot.com/

    Reply
  15. //சிவ.சி.மா. ஜானகிராமன் said…

    வணக்கம் தோழரே

    ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்கிய‌ பின் எப்ப‌டி log in ப‌ண்ணுவ‌து? உங‌க‌ள் ப‌திலுக்காக‌ காத்திருக்கிறேன்…
    //

    ப்ளாக்கர் தளத்தை புக்மார்க் செய்துக் கொள்ளுங்கள் நண்பா!

    சரி ஒரு பிளாகின் ஆதர் எப்படி புதிய இடுகைகளை இடுவது ? திருத்துவது போன்ற வேலைகளை செய்வது ?
    http://sivaayasivaa.blogspot.com/
    //

    தோழரே!
    நீங்கள் ப்ளாக்கர் தளத்தில் உள்நுழைந்தவுடன் Dashboard பக்கம் வரும். அதில் உங்கள் ப்ளாக்கின் பெயருக்கு கீழ்,
    New Post–Edit Posts –Comments–Settings–Design–Monetize–Stats என்று இருக்கும். அதில் க்ளிக் செய்து புதிய இடுகைகளை இடுவதையோ, அல்லது திருத்துவதோ செய்துக்கொள்ளலாம்.

    Reply
  16. வணக்கம் தோழரே,

    உடனடியாக தாங்கள் பதில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி..

    இதை அமுல்படுத்தி பார்த்தேன் ஆனால்
    உள்நுழைந்தவுடன் Dashboard பக்கம் வரவில்லையே ? அதற்கு என்ன செய்யவேண்டும் ?
    http://sivaayasivaa.blogspot.com/

    Reply
  17. // சிவ.சி.மா. ஜானகிராமன் said…

    வணக்கம் தோழரே,

    உடனடியாக தாங்கள் பதில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி..

    இதை அமுல்படுத்தி பார்த்தேன் ஆனால்
    உள்நுழைந்தவுடன் Dashboard பக்கம் வரவில்லையே ? அதற்கு என்ன செய்யவேண்டும் ?
    http://sivaayasivaa.blogspot.com/
    //

    தோழரே! வேறு என்ன பக்கம் உங்களுக்கு வருகிறது?

    Reply
  18. வணக்கம் தோழரே,

    எனது சிவயசிவ என்ற வலைத்தளத்திற்கான பக்கம் வருகிறது..
    ஆனால் டாஷ்போர்டு இல்லையே ?

    எனவே எப்படி உள்ளே நுழைவது என்ற சந்தேகம் …
    தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

    Reply
  19. //சிவ.சி.மா. ஜானகிராமன் said…

    வணக்கம் தோழரே,

    எனது சிவயசிவ என்ற வலைத்தளத்திற்கான பக்கம் வருகிறது..
    ஆனால் டாஷ்போர்டு இல்லையே ?

    எனவே எப்படி உள்ளே நுழைவது என்ற சந்தேகம் …

    //

    தோழரே! நீங்கள் எந்த பக்கத்தை புக்மார்க் செய்தீர்கள்? http://draft.blogger.com என்பதை பயன்படுத்தி பாருங்கள்.

    //தொந்தரவுக்கு மன்னிக்கவும்.//

    தொந்தரவு இல்லை தோழரே!

    Reply
  20. // சிவ.சி.மா. ஜானகிராமன் said… 32

    நன்றி தோழரே புரிந்து கொண்டேன்..
    பயன்படுத்திக் கொள்கிறேன்..

    மிக்க மகிழ்ச்சி.
    //

    மிக்க மகிழ்ச்சி.. தங்கள் வருகைக்கு நன்றி, தோழரே!

    Reply
  21. //Namadevan. said… 34

    மிக்க நன்றி.navbar ய் எடுத்துவிட்டால் sign in எவ்வாறு செய்வது.//

    இந்த பதிவு மூலம் ஒரு வழி இருக்கிறது நண்பா!
    http://bloggernanban.blogspot.com/2010/10/admin-gadget.html

    அப்படி இல்லையென்றால்,
    http://draft.blogger.com என்ற முகவரியை புக்மார்க் செய்து, அதன் மூலம் உள்நுழையலாம்.

    Reply
  22. //Namadevan. said… 36

    Thank you very much friend, i have successfully removed Navbar.More over i m free to sign in as you guided.//

    You are welcome sir!

    Reply
  23. இப்பொழுது பிளாகர் இதற்கு மிக எளிதான ஒரு தீர்வை வழங்குகிறது. டேஷ்போர்டில் லேஅவுட் பகுதிக்குச் சென்றால் வலது மேல் ஓரத்தில் Navbar என இருக்கும். அதில் Edit பொத்தானும் இருக்கும். அதை அழுத்தினால் விதவிதமான வண்ணங்களில் Navbar-ஐ மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கும். அதன் இறுதியில் off எனும் ஒரு வசதி இருக்கிறது. அதைச் சொடுக்கி விட்டால் அதன் பிறகு Navbar தெரியாது.

    Reply
  24. இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். தற்போது அதன் சுட்டியை இணைத்துள்ளேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

    Reply

Leave a Reply