ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..

change favicon in blogger

Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon). ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை  Favicon-ஆக  மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது  ஏற்றிவிடுங்கள்.

உங்கள் படம் .ico, .png, .gif, .jpeg போன்ற Format-ல் இருக்க வேண்டும். நீங்கள் .ico Format-ஐ பயன்படுத்தினால் ஒபேரா மினி போன்ற மொபைல் ப்ரவுஸரிலும் (Mobile Browsers) Favicon தெரியும். படத்தின் அளவு 16×16 அல்லது 32×32 ஆக இருக்க வேண்டும்.

2. பிறகு


</head>

என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.


<link href='http://example.com/myicon.png' rel='shortcut icon' type='image/x-icon'/>

<link href='http://example.com/myicon.png' rel='icon' type='image/x-icon'/>

மேலுள்ள Code-ல் http://www.example.com/myicon.png என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் முகவரியை கொடுக்கவும்.

3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்..

பிறகு உங்கள் தளத்தில் Favicon வந்துவிடும்.

Updated:

அனைத்து உலவிகளிலும் Favicon வருமாறு Code மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  வலைத்தளங்களில் Alexa Widget-ஐ சேர்ப்பது எப்படி?

18 thoughts on “ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..”

  1. உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா

    faizu101010@gmail.com

  2. @Anonymous
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நண்பா…!
    //மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது//
    நாம் எதுவும் செய்ய வேண்டாம். நமது ப்ளாக் google serch engine ல் வந்துவிட்டாலே மறுமொழிகளும் வந்துவிடும். உதாரணத்திற்கு இங்கு க்ளிக் செய்யவும்.

    @சரவணன்.D

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நண்பா…!

  3. @முஹம்மத் ஆஷிக்

    நம்முடைய புகைப்படம், வீடியோ போன்ற கோப்புகளை(Files) பதிவேற்றம் (Upload) செய்து பகிர்ந்துக் கொள்ள(Share) அனுமதிக்கும் தளங்கள் Hosting Sites எனப்படும்.

    உதாரணத்திற்கு,

    sites.google.com
    rapidshare.com
    4shared.com
    box.net

  4. //Premkumar Masilamani said…

    Hi Abdul – It works like charm…. thanks 🙂
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..!