ப்ளாக்கர் பாஸ்வோர்ட் மறந்துவிட்டதா?

ஆறு மாதம் கழித்து புதியதொரு பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே! இந்த இடைவெளியில் பதிவெதுவும் எழுதாவிட்டாலும் தினமும் வருகை தரும் வாசக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!இது "நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா?" பதிவின் தொடர்ச்சி ஆகும். அந்த பதிவில் பாஸ்வோர்ட் மறந்துவிட்டால் திரும்பப் பெற வழி ஒன்றினை சொல்லியிருந்தேன். தற்போது அது வேலை செய்யவில்லை (என்று நினைக்கிறேன்). கூகுள் பல்வேறு மாற்றங்களை செய்துவிட்டது.

மறந்த பாஸ்வோர்டை திரும்பப் பெற

https://admin.google.com/blogname.com/ForgotAdminAccountInfo

என்ற முகவரிக்கு செல்லவும்.

blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும்.

அங்கே காட்டும் Word Verification-ஐ சரியாக கொடுத்தால், உங்கள் பாஸ்வோர்டை மாற்றுவதற்கு இணைப்பு ஒன்று நீங்கள் முன்னர் கொடுத்த மின்னஞ்சலுக்கு வரும். அதன் மூலம் கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.

ப்ளாக்கரில் மால்வேர், எச்சரிக்கை!


ப்ளாக்கர் நண்பன் தளத்தில் வெளிவந்த ஒரு நிரலை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் உங்கள் தளத்தில் மால்வேர் இருக்கும் அபாயம் இருக்கிறது.

பதிவுகளை பட்டியலிடுவது எப்படி? என்ற பதிவில் இருந்த நிரலை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், கூகுள் க்ரோமில் அந்த பக்கத்தை பார்க்கும்போது மேலே படத்தில் உள்ளது போல மால்வேர் எச்சரிக்கை வரும்.

காரணம், அந்த பதிவில் குறிப்பிடப்பட்ட நிரல் abu-farhan.com தளத்திலிருந்த எடுக்கப்பட்ட நிரல் ஆகும். அபு ஃபர்ஹான் தளம் மால்வேறினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த தளத்தில் உள்ள நிரலை பயன்படுத்தினாலும் இந்த எச்சரிக்கை வருகிறது.

இதனை தவிர்க்க, அந்த நிரலை உங்கள் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கவும். அதற்கு பதிலாக வேறொரு நிரலையும் அந்த பதிவில் கொடுத்துள்ளேன்.

நான் பகிர்ந்த இந்த நிரலினால் உங்கள் ப்ளாக் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!


2013-ல் சிறந்த 10 பதிவுகள்


2013-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் தனது பயணத்தை முடிக்கவிருக்கிறது. தற்போதைய உலக கலாசாரத்தின்படி டாப் டென் 2013 என்று எதையாவது பட்டியலிட்டாக வேண்டும். அதன்படி 2013-ல் சிறந்த பத்து பதிவுகளை பட்டியலிடுகிறேன்.

தமிழ் நுட்பம் - தொழில்நுட்ப இணையதளம்


புதிய தொழில்நுட்ப செய்திகளை பகிர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் நுட்பம் இணையதளம். இந்த தளத்தில் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், ஆண்ட்ராய்ட், ஆப்பிள், ஐஒஎஸ், புதிய மொபைல், டேப்லட்  என்று அனைத்துவிதமான தொழில்நுட்ப செய்திகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ் ப்ளாக் மூலம் சம்பாதிக்க...


வலைப்பதிவர்கள் பலருக்கு தங்கள் ப்ளாக் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ப்ளாக் மூலம் சம்பாதிக்க கூகுளின் ஆட்சென்ஸ் (Google Adsense) நமக்கு உதவுகிறது. ஆனால் தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் வைக்க அனுமதி இல்லை.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers

About Me

My Photo

I am living present by dreaming Future...!