இந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை?

டிக்டாக் மொபைல் ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டார், ஆப்பிள் ஆப் ஸ்டாரிலிருந்து நீக்குமாறு இந்தியாவின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டிக்டாக் என்பது ByteDance என்னும் சீன நிறுவனத்தின் உதட்டு ஒத்திசைவு செயலி (Lip Sync app) ஆகும். பாடல் அல்லது சினிமா வசனங்களுக்கு உதடுகளை அசைத்து நடித்து காட்ட  பயன்படுகிறது. உலகமெங்கும் பிரபலமான இந்த ஆப் இந்தியாவிலும் பிரபலமானது.

டிக்டாக்

டிக்டாக் ஆப் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் இந்த ஆப்பில் ஆபாசமான வீடியோக்கள் அதிகமாகி வருகிறது. இந்த ஆப் சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்தில்  தொடரப்பட்டது.

டிக்டாக் ஆப்பை நீக்க மத்திய அரசை வலியுறுத்தியது மதுரை நீதிமன்றம். இதனை தொடர்ந்து டிக்டாக் மொபைல் ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டார், ஆப்பிள் ஆப் ஸ்டாரிலிருந்து நீக்குமாறு இந்தியாவின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற டிக்டாக் நிறுவனம் “இந்தியாவில் நீதித்துறை முறையை நம்புகிறோம்” என்று கூறியது.

இந்நிலையில் மதுரை நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதையும் படிங்க:  தேடுவது எப்படி? பாடம் நடத்தும் கூகுள்