பிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். பல தொலைக்காட்சி சேனல்களில் நடைபெற்று வரும் பிக்பாஸ் ரியாலிட்டி (?) நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். நடிகை ஓவியா மூலம் மிகப்பெரிய ஹிட் ஆனது தமிழ் பிக் பாஸ். தற்போது அந்நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடைபெறுகிறது.

பிக்பாஸ் 2

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நாம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம்.

பிக்பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று பிக் பாஸ் பற்றி பிளாக்கில் எழுதி, அந்த ப்ளாக்கில் ஆட்சென்ஸ் விளம்பரம் வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது. இரண்டாவது பிக் பாஸ் பற்றி யூட்யூப் வீடியோ உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது.

பிக் பாஸ் ப்ளாக்கிங்:

பிக்பாஸ் ப்ளாக் மூலம் சம்பாதிப்பதற்கு நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் தான் அதிகம் சம்பாதிக்க முடியும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும்போது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு தினமும் ஓட்டு போடுவார்கள் அல்லவா? அவ்வாறு ஓட்டு போடும் முறையில் ஒன்று, கூகுளில் “Bigg Boss Vote”, “Bigg Boss Voting” என்று தேடினால் உங்களுக்கு ஓட்டு போடும் வசதி கூகுளில் இருக்கும். ஆனால் கூகுள் இந்தியா (google.co.in) தளத்தில் இல்லாமல் வேறொரு நாட்டு பதிப்பில் (உதாரணத்திற்கு google.ae) நீங்கள் தேடினால் கூகுளில் ஓட்டு போடும் வசதி தெரியாது. மாறாக bigg boss voting பற்றிய இணையப்பக்கங்களை காட்டும்.

இவ்வாறு கடந்த வருடம் பிக் பாஸ் மூலம் அதிகமான பார்வையாளர்களை scooptimes.com என்ற இணையத்தளம் பெற்றது.

big boss tamil

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதிகமானோர் இந்த தளத்தில் உள்ள வோட்டிங் முறை அதிகாரப்பூர்வமானது என நம்பி ஓட்டு போட்டார்கள். பலர் இந்த ஓட்டு முடிவை வைத்தே யூட்யூப் வீடியோக்கள் வெளியிட்டனர்.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றி எழுதி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு Event Blogging என்று சொல்வார்கள். இது பிக் பாஸ் நிகழ்ச்சி என்றில்லை, ஐபிஎல், வேர்ல்ட் கப் கிரிக்கெட், உலக கோப்பை கால்பந்து, தீபாவளி, புத்தாண்டு என்று எந்த நிகழ்ச்சியை பற்றி வேண்டுமானாலும் எழுதி சம்பாதிக்கலாம். ஆனால் என்ன எழுதுவது என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பொறுத்து மாறுபடும்.

பிக் பாஸ் மூலம் (ஆங்கிலத்தில்) எழுதி அதிகம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருந்தாலும் இதில் போட்டி அதிகம் என்பதால் பலருக்கு Traffic வருவதற்கு கடினமாக இருக்கும். அடுத்து சொல்லப்போகும் முறையில் அதிகமான பார்வையாளர்களை பெறுவது கொஞ்சம் எளிது.

இதையும் படிங்க:  பதிவில் நண்பர்களை குறிப்பிட புது வசதி

பிக்பாஸ் யூட்யூப்:

யூட்யூபில் Bigg Boss Tamil என்று தேடிப்பார்த்தாலே ஓரளவு உங்களுக்கு ஐடியாக்கள் கிடைக்கும்.

பிக் பாஸ் ஓவியா

நீங்கள் பிக் பாஸ் பற்றி இரண்டு விதமாக வீடியோக்கள் உருவாக்கலாம். ஒன்று, ஒவ்வொரு எபிசோட் முடிந்த பிறகும் அந்த எபிசொட் பற்றி சுருக்கமாக பேசி, Background-ல் அந்த எபிசோட் போட்டோக்களை போட்டு வீடியோவாக உருவாக்கலாம்.

இரண்டு, அந்தந்த எபிசோடில் நடைபெறும் சம்பவங்களை ரிவீவ் போலபேசி வீடியோ உருவாக்கலாம். இப்படி உருவாக்குவதற்கு உங்களுக்கு பேச்சு திறமை அவசியம். பார்ப்பவர்கள் தினமும் உங்கள் சேனலுக்கு வருமாறு உங்கள் பேச்சு இருக்க வேண்டும். கவர்ச்சியான முறையில் Thumbnail உருவாக்கும் திறமை இருந்தால் இன்னும் அதிக பார்வையாளர்களை பெறலாம். ஏனெனில் யூட்யூப் trending பக்கத்தில் இடம்பெறும் பல வீடியோக்கள் கவர்ச்சியான டைட்டில் மற்றும் Thumbnail-காகவே அதிகம் பார்க்கப்படுகிறது.

யூட்யூப் வீடியோக்கள் மூலம் அதிகம் பார்வையாளர்களை பெறலாம் என்றி சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. யூட்யூப் Algorithmபடி ட்ரெண்டிங் தலைப்பில் வெளியிடப்படும் வீடியோக்கள் அதிகமான பார்வைகளை பெரும். பெரும்பாலான சேனல்களுக்கு கிடைக்கும் பார்வைகள் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், அவைகள் Youtube Suggestion மற்றும் Youtube Homepage மூலம் தான் கிடைக்கிறது. இதனால் உங்கள் சேனலில் Subscribers கம்மியாக இருந்தாலும் அதிகமான பார்வைகள் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மேலும்,ஒன்றிரண்டு வீடியோக்கள் போட்டுவிட்டு யாரும் பார்க்கவில்லை என்று நிறுத்திவிடக்கூடாது. தொடர்ந்து வீடியோக்களை நீங்கள் அப்லோட் செய்வது அவசியமானதாகும்.

எந்தக்காரணத்தைக் கொண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரிஜினல் வீடியோவை/ஆடியோவை உங்கள் வீடியோவில் சேர்த்துவிடாதீர்கள். காப்பிரைட் பிரச்சனை வந்து உங்கள் சேனல் முடக்கப்படலாம்.

தற்போது ஒரு பிரச்சனை இருக்கிறது. சமீபத்திய யூட்யூப் விதிப்படி உங்கள் யூட்யூப் சேனலில் விளம்பரம் வைத்து சம்பாதிக்க “ஆயிரம் Subscribers இருக்க வேண்டும் மற்றும் உங்கள் வீடியோக்கள் நாலாயிரம் மணி நேரம் பார்க்கப்பட்டிருக்க வேண்டும்”. அப்போது தான் உங்கள் யூட்யூப் சேனலில் விளம்பரம் தெரியும்.

யூட்யூப் மூலம் பணம் சம்பாதிக்க பிக் பாஸ் தவிர்த்து பல்வேறு வழிகள் இருக்கிறது. இறைவன் நாடினால் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பிறகு பார்க்கலாம்.

நீங்கள் யூட்யூப் முறையை கையாள்வதாக இருந்தால் பின்வரும் வீடியோக்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.