Youtube Shorts மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Youtube-ல் பணம் சம்பாதிக்க, உங்கள் சேனல் 1000 Subscribers மற்றும் 4000 மணி நேர Watch Hours பெற்றிருக்க வேண்டும். அதன்பின் தான் உங்கள் சேனலுக்கு Monetization கிடைத்து, விளம்பரம் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும். புதிதாக சேனல் தொடங்குபவர்களுக்கு இரண்டு பின்னடைவுகள் இருக்கின்றன. ஒன்று, புது சேனல் என்பதால் உங்கள் சேனல் அதிகம் பேருக்கு சென்றடைய (Reach) அதிக நாட்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். இரண்டு, 1000 Subscribers மற்றும் 4000 மணி நேர Watch Hours பெற சில/பல மாதங்கள் ஆகலாம். 

 

இதற்கு மாற்று வழியாக, Youtube நிறுவனம் Shorts என்னும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. எளிதாக சொல்ல வேண்டுமென்றால், TikTok-கிற்கு போட்டியாக, அதே போல் ஒரு சேவை தான் இது. கடந்த வருடம் முதல் இந்தியாவில் மட்டும் சோதனை முறையில் இயங்கி வந்த Shorts வசதி தற்போது உலகமெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகமான பார்வைகளைப் பெறும் Shorts சேனல்களுக்கு மாதம்தோறும் Shorts Fund என்ற பெயரில் 100$ முதல் 10,000$ வரை பணமும் வழங்குகிறது.

Shorts பற்றி பெரிய கட்டுரையே எழுதலாம். முக்கியமான சிலவற்றை மற்றும் இங்கே பகிர்கிறேன்.

Youtube Shorts என்றால் என்ன? 

1. Video Resolution – மொபைலில் நாம் எடுக்கும் வீடியோயோக்கள் போல செங்குத்தான (Vertical) அளவில் இருக்க வேண்டும். 

 2. வீடியோவின் நேரம் ஒரு நிமிடத்திற்குள் (60 நொடிகள்) இருக்க வேண்டும். 61 நொடிகள் இருந்தாலும் அது Shorts வீடியோவாக கணக்கில் வராது.

Youtube Shorts எப்படி உருவாக்குவது? 

 1. Youtube Mobile Appல் + (Create) Symbolஐ அழுத்தினால் “Create a Short” என்று இருக்கும். அதன் மூலம் உருவாக்கலாம். ஆனால் இதன் மூலம் 15 நொடிகள் மட்டுமே உருவாக்க முடியும். 

2. மேலே சொன்ன Video Resolution-ல் ஒரு நிமிட வீடியோவை, எப்போதும் வீடியோ Upload செய்யும் முறையில் Upload செய்தால் அது தானாக Shorts வீடியோவாக எடுத்துக்கொள்ளும். Title & Description-ல் #shorts என்பதை சேர்த்துக் கொள்வது நல்லது.

ஏன் Youtube Shorts? 

1000 Subscribers மற்றும் 4000 மணி நேர Watch Hours இல்லாத புது சேனல்கள் இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் – இதை முக்கிய காரணமாக நான் சொல்ல மாட்டேன். காரணம் இதில் பணம் பெறுவதற்கு உங்கள் சேனல் லட்சக்கணக்கில் Views பெற்றிருக்க வேண்டும். 

 எனக்கு தெரிந்த நபர், கடந்தமாதம் அவர் பெற்ற 12 மில்லியன் பார்வைகளுக்கு அவர் பெற்ற பணம் 120$. 

இதையும் படிங்க:  யூட்யூப் Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைக்க

இவ்வளவு Views வேண்டுமென்றால் பிறகு இதை ஏன் முயற்சி செய்ய வேண்டும்? 

மேலே சொன்னது போல புதிய சேனல்கள் அதிகம் பேருக்கு சென்றடைய (Reach) அதிக நாட்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். ஆனால் Shorts மூலம் உங்கள் Channel Reach விரைவில் நடக்கும். 

இந்த வருடம் ஏப்ரலில் நான் தொடங்கிய ஒரு சேனல் 665,000 பார்வைகளையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட Subscribersகளையும் பெற்றிருக்கிறது. 

இந்த வருடம் மார்ச் மாதம் நான் தொடங்கிய ஒரு சேனல் 493,000 பார்வைகளையும், நாலாயிரத்திற்கும் மேற்பட்ட Subscribersகளையும் பெற்றிருக்கிறது.

இடையில் இந்த இரண்டு சேனல்களில் வீடியோக்கள் Upload செய்யவில்ல. அதனால் views குறைந்துள்ளது. 

இப்படி Subscribers அதிகமான பிறகு அதே சேனலில் Long வீடியோக்கள் Upload செய்து, Watch Hours அதிகப்படுத்தலாம். இந்த Long வீடியோக்களுக்கு Shorts வீடியோக்கள் போல Reach இருக்காது. ஆனால், புதிய சேனல்களில் பெறும் Reach-ஐ விட கொஞ்சம் கூடுதல் Reach இருக்கும். 

 Youtube Shorts Fund எப்படி பெறுவது? 

உங்கள் சேனல் இந்த மாதம் அதிகமான பார்வைகளைப்பெற்று, Shorts Fundக்கு தகுதிப் பெற்றால், அடுத்த மாதம் முதல் சில தேதிகளில் உங்களுக்கு Email வரும். அதன் மூலம் உங்கள் பணத்தை Email-ல் குறிப்பிட்ட தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த பணம் உங்களுக்கு கிடைக்காது.