Google Play Books – தற்போது இந்தியாவிலும்

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் சந்தையான கூகுள் ப்ளே தளத்தில் ஆண்ட்ராய்ட் போன்கள், டேப்லட்களுக்கான அப்ளிகேசன்கள், விளையாட்டுகள், பாடல்கள், படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன. இதுபற்றி கூகிளின் புதிய வசதி: Google Play என்ற பதிவில் முன்னரே பார்த்தோம். ஆனால் அப்ளிகேசன், விளையாட்டுக்களை தவிர மற்றவைகள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உள்ளது. தற்போது கூகுள் ப்ளே புக்ஸ் (Google Play Books) இந்தியாவிற்கு வந்துவிட்டது.

இந்தியாவில் உள்ளவர்கள் இனி கூகுள் ப்ளே மூலம் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்,



Google Play Store-ல் நீங்கள் இலவச புத்தகங்களையோ, விலையுள்ள புத்தகங்களை வாங்கியோ பதிவிறக்கம் செய்து படிக்கலாம். நீங்கள் எந்த ஜிமெயில் மூலம் வாங்குகிறீர்களோ அந்த ஜிமெயிலை இணைத்துள்ள எந்த  ஆண்ட்ராய்ட் மொபைல், டேப்லட்களிலும் படிக்கலாம்.

இந்த புத்தகங்களைப் பயன்படுத்த நீங்கள் Google Play Books அப்ளிகேஷனை நிறுவ வேண்டும்.

இதையும் படிங்க:  ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் - Android 4.1 Jelly Bean

5 thoughts on “Google Play Books – தற்போது இந்தியாவிலும்”