பிட்.. பைட்… மெகாபைட்….! (27/02/2013)

இந்த வாரம் (27/02/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.


மார்ச் 14-ல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4:

கடந்த வாரம் “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில் “சாம்சங்கின் அடுத்த முதன்மை மொபைல் S4 வரும் மார்ச் 14-ஆம் தேதி வெளியிடப்போவதாக செய்தி நிலவுகிறது” என்று பார்த்தோம் அல்லவா? அதை உறுதி செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் மார்ச் 14 அன்று வெளியீட்டு நிகழ்ச்சியை http://www.youtube.com/samsungmobile என்னும் சாம்சங்கின் யூட்யூப் சேனலில் நேரலை செய்யவிருக்கிறது.

கூகுள் ப்ளஸ் Sign- In:



பல இணையதளங்களிலும், அப்ளிகேசன்களிலும் பேஸ்புக் (Facebook Connect), ட்விட்டர் கணக்கு மூலம் இணையும் வசதி இருக்கிறதல்லவா? அதற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் தளமும் Google+ Sign-In என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் மற்றும் இணைய  அப்ளிகேசன்களில் இதனை பயன்படுத்தலாம். பயனாலர்களாகிய நாம் அவ்வசதி உள்ள தளங்கள், அப்ளிகேசன்களில் கூகுள்+ கணக்கு மூலம் உள்நுழையலாம்.


இது பற்றி மேலும் அறிய: Introducing Google+ Sign-In


Angry Birds கார்டூன் தொடர்:

பிரபலமான ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாட்டை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த விளையாட்டை தயாரித்த ரோவியோ நிறுவனம் வரும் மார்ச் 16/17 தேதிகளில் புதிய ஆங்க்ரி பேர்ட்ஸ் கார்டூன் தொடரை இணையத்தில் வெளியிடவுள்ளது. இந்த தொடர் ஒவ்வொரு வாரமும் ஒரு பகுதி வெளியாகும். 2016-ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் ஆங்க்ரி பேர்ட்ஸ் திரைப்படத்திற்கு முன்னோட்டமாக இந்த தொடர் அமையும்.


HP Slate 7: 

HP நிறுவனம் HP Slate 7 என்ற பெயரில் தனது முதல் ஆண்ட்ராய்ட் டேப்லட்டைஅறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் விலை 169$ (கிட்டத்தட்ட 9100ரூபாய்) மட்டுமே! 

பயர்பாக்ஸ் ஓஎஸ்:

பிரபல இணைய  உலவியான ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் மொபைல்களுக்கான இயங்குதளத்தை உருவாக்கியுள்ளதாக முன்பு பார்த்தோம் அல்லவா? தற்போது பயர்பாக்ஸ் நிறுவனம் TCL, ZTE, LG மற்றும் Huawei நிறுவனங்களுடன் இணைந்து பயர்பாக்ஸ் இயங்குதளம் கொண்ட மொபைல்களை இந்த வருடம் மத்தியில் வெளியிடவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஆண்ட்ராய்ட் கூகுள் ப்ளே, ஆப்பிள் App Store போன்று Firefox Marketplace என்னும் அப்ளிகேசன் சந்தையை திறந்துள்ளது. இதில் மொபைல்களுக்கு மட்டுமின்றி கணினிகளுக்கான அப்ளிகேசன்கள், விளையாட்டுகளும் கிடைக்கின்றன.

மொபைல் அப்ளிகேசன்களை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் Firefox Beta ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை நிறுவியிருக்க வேண்டும்.

பார்க்க: Firefox Marketplace

 க்ரோம்புக் பிக்ஸல்:

கூகுள் நிறுவனம் Chromebook Pixel என்னும் பெயரில் தொடுதிரை வசதிக் கொண்ட புதிய மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூகுளின் க்ரோம் இயங்குதளத்தைக் கொண்டது. ஆப்பிளின் Macbook மடிக்கணினிகளுக்கு போட்டியாக வந்திருக்கும் இதன் ஆரம்ப விலை $1,299.

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (06/03/2013)

இந்த வார “சிரிப்பு” படம்:

Log Out!

4 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (27/02/2013)”