பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்!


நான் பார்த்த வரையில், தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிளாகர் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில்தான் இயங்குகின்றன. அதாவது, தளத்தில் எல்லாமே தமிழிலேயே இருந்தாலும் தளத்தின் மொழி அமைப்பு மட்டும் ‘ஆங்கிலம்’ என வைக்கப்பட்டிருக்கும். பதிவு எழுதப்பட்ட நாள், கருத்துகளின் எண்ணிக்கை ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம்.

தமிழில் எழுத வேண்டும் என விரும்பி முன்வந்திருக்கும் நம் பதிவுலகத் தோழர்கள் தங்கள் வலைப்பூ மொழியை மட்டும் ஆங்கிலத்தில் வைத்திருக்க முதற்பெரும் காரணம் பிளாகரின் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி (Blogger Follower widget).

சமூக வலைத்தளங்கள் வழியாகவும், திரட்டிகள் வாயிலாகவும் எத்தனை பேர் நம் வலைப்பூவைப் பின்தொடர்ந்தாலும் வலைப்பூவைப் பின்தொடர்வதற்கெனவே பிளாகர் வழங்கும் இந்தச் செயலி மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைதான் ஒரு வலைப்பூவின் அதிகாரப்பூர்வமான நேயர் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது இன்றளவும்.

இதனால் இது பிளாகர் வலைப்பூக்களின் ஒரு மதிப்புக்குரிய அடையாளமாகிவிட்டது. மேலும், குறிப்பிட்ட வலைப்பூவை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தல், தான் தொடர்ந்து படிக்கும் மற்ற வலைப்பூக்களைப் பட்டியலிட்டுக் காட்ட இயலுதல் என மற்ற பின்தொடர்ச் செயலிகளில் இல்லாத சில வசதிகளும் இதில் இருக்கின்றன. இப்படிப் பல வகைகளிலும் முதன்மை பெறுகிற, பிளாகர் வலைப்பூக்களின் அதிகாரப்பூர்வப் பின்தொடர்ச் செயலியான இதை நம் வலைப்பூவின் மொழி அமைப்பை ஆங்கிலத்தில் வைத்திருந்தால்தான் வலைப்பூவில் இணைக்க முடியும் என்ற நிலை இருந்ததால் தான் மிகப் பெரும்பான்மையானோர் தங்கள் வலைப்பூ மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கக் காரணம்.

கூகுள் நிறுவனம்  பதிவர்களுக்காக கூகுள்+ Followers Gadget கொண்டு வந்ததால் ஏற்கனவே இருந்த Blogger Follower widget-ஐ நீக்கிவிட்டது. நீங்கள் ஏற்கனவே ப்ளாக்கில் வைத்திருந்தால் அது செயல்படும். ஆனால் அதை நீக்கிவிட்டால் மீண்டும் வைக்க முடியாது. அதேபோல புது தளங்களிலும் அந்த widget-ஐ வைக்க முடியாது.

UPDATE: FOLLOWER கேட்ஜட்டும் இருக்கிறது. more gadget என்பதை க்ளிக் செய்தால் அதில் கடைசியாக இருக்கும்.

ஆனால் FOLLOWER கேட்ஜட் போன்ற மற்றதொரு கேட்ஜட்டான Google Friend Connect widget தமிழிலும் கிடைக்கிறது! அண்மையில், ஓரிரு பிளாகர் வலைப்பூக்களில் இந்தச் செயலி தமிழில் காட்சியளித்ததைக் கண்டு வியந்தேன். பிளாகருக்குள் தேடிப் பார்த்தேன். பெருவியப்புக்குரிய வகையில் கிடைத்தே விட்டது! 

இதோ இனி, எப்படி நம் வலைப்பூவில் இந்தச் செயலியைத் தமிழில் நிறுவலாம் எனப் பார்க்கலாம். [பெரும்பாலானோர், பிளாகரை ஆங்கிலத்தில்தான் பயன்படுத்துகிறார்கள் . ஆனால் அதற்காக, அனைவருமே பிளாகர் உதவிக் குறிப்புகளில் பொத்தான்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடுவது, பிளாகரைத் தமிழில் பயன்படுத்தும் சிலரையும் ஊக்கமிழக்கச் செய்யும் என்பதால், கீழே வரும் வழிமுறைகள் பிளாகரைத் தமிழில் பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் முழுக்கத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. 
அதே நேரம், பிளாகர் பயனர்கள் அனைவரின் வசதிக்காக அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப் பதங்களும் தரப்பட்டுள்ளன]. 
௧] முதலில், உங்கள் பிளாகர் கணக்குக்குள் நுழைந்து உங்கள் வலைப்பூவின் மொழியைத் ‘தமிழ்’ என மாற்றிக்கொள்ளுங்கள். (எப்படி எனத் தெரியாவிட்டால் சொடுக்குங்கள் இங்கே). 
௨] பிளாகரின் ‘தளவமைப்பு’ (Layout) பிரிவுக்குள் செல்லுங்கள்.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் புதிய கூகுள் ப்ளஸ் வசதி

௩] வலைப்பூவின் எந்தப் பகுதியில் ‘பின்பற்றுபவர்கள்’ செயலியை வைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பகுதியில் இருக்கும் ‘கேஜெட்டைச் சேர்’ (Add Gadget) பொத்தானை அழுத்துங்கள். 

௪] இப்பொழுது திறந்திருக்கும் சாளரத்துக்குள் ‘மேலும் கேஜெட்கள்’ (More Gadgets) எனும் பிரிவைத் திறவுங்கள். 
௫] இப்பொழுது, அந்தப் பக்கத்தின் மேற்புறத்தில் ஒரு தேடல் பெட்டி வந்திருக்கிறதா? அதில் google friend connect எனத் தட்டெழுதித் தேடுங்கள். 
௬] இப்பொழுது மூன்று செயலிகள் உங்களுக்குக் காட்டப்படும். அவற்றுள் ‘உறுப்பினர்கள்’ (Members) எனும் செயலியைச் சொடுக்குங்கள். 
௭] இப்பொழுது செயலியின் தோற்ற விவரங்கள் காட்டப்படும். உயரத்தையோ, செயலியின் பெயரையோ மாற்ற விரும்பினால் மாற்றிக் கொண்டு ‘சேமி’ (Save) பொத்தானை அழுத்துங்கள். 
அவ்வளவுதான். இப்பொழுது உங்கள் வலைப்பூவுக்குச் சென்று பாருங்கள்! உங்கள் பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி தாய்மொழியாம் செந்தமிழில் அழகாக மிளிரும்! 
தமிழில் மட்டுமில்லை, நீங்கள் உங்கள் வலைப்பூவை எந்த மொழியில் வைத்தாலும் அந்த மொழியில் இனி உங்கள் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி காட்சி தரும். இது மொத்தம் 47 மொழிகளில் மாறக்கூடியது என்று பதிவர் மயூரேசன் அவர்கள் எப்பொழுதோ எழுதி வைத்திருக்கிறார். 
நம் வலைப்பூக்கள் இனி முழுக்க முழுக்க நம் தாய்மொழியிலேயே மலரட்டும்!

எச்சரிக்கை! கூகுள் ஆட்சென்சு மூலமோ இன்ன பிற விளம்பரச் சேவைகள் மூலமோ நீங்கள் உங்கள் வலைப்பூவில் விளம்பரம் வெளியிடுகிறீர்கள் எனில், வலைப்பூவின் மொழியை ஆங்கிலத்திலிருந்து வேறு மொழிக்கு மாற்றுவது சிக்கலை ஏற்படுத்தலாம்!

*********************************************************************************

படைப்பு: இ.பு.ஞானப்பிரகாசன்

மின்னஞ்சல் முகவரி: e.bhu.gnaanapragaasan@gmail.com

வலைப்பூ: http://agasivapputhamizh.blogspot.com.

ஒரு சிறு அறிமுகம்: இ.பு.ஞானப்பிரகாசன் – பதிவுலகுக்குப் புதியவன். ‘எழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி’ எனும் முழக்கத்தோடு இணைய உலகில் புகுந்திருக்கும் தீவிரத் தமிழ்ப் பற்றாளன்! அகச் சிவப்புத் தமிழ் – கடந்த ஏப்பிரல் முதல் இயங்கி வரும் வலைப்பூ. ‘அகத்தின் சிவப்பு இங்கே தமிழில் தெரியும்!’ எனும் முழக்கத்துடன் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய தனியொருவரின் எழுத்துக்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இத்தளத்தில் அவ்வப்பொழுது தொழில்நுட்பப் பதிவுகளும் பார்க்கலாம்.

*********************************************************************************

உங்கள் தொழில்நுட்ப பதிவுகள் ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இடம்பெற basith27@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

20 thoughts on “பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்!”

  1. வெரிகுட் நண்பா, என் தளத்தில் இருந்த பிரச்சினையை தீர்க்க இந்த பதிவு உதவியது…

    அது சரி இந்த பீட்பர்னர் என்னாச்சு?என் தளத்தில் தானகவே காணமல் போச்சு இதுக்கும் கூகுள் ஏதாவது வில்லங்கம் பண்ணியிருக்கா? ஏதாவது வழிமுறை இருந்த சொல்லுங்க….

    பிளாக்ர்ல இப்ப எவ்வளவு மாற்றம் வந்திருக்கு!!!! எனக்குத்தான் எல்லாமே புதுசா இருக்கு..அதிக இடைவெளி தான் காரணமோ என்னவோ?!!

  2. @திண்டுக்கல் தனபாலன்

    தகவலுக்கு நன்றி சார்! தற்போது மாற்றிவிட்டேன். ஏற்கனவே இருந்த இடத்தில் இல்லாததால் நீக்கிவிட்டது என்று நினைத்துவிட்டேன்.

  3. @தமிழ்வாசி பிரகாஷ்

    உங்கள் பதிவை பார்த்தபிறகு தான் ப்ளாக்கர் அந்த விட்ஜட்டை ஒழித்து வைத்திருந்ததை அறிந்தேன். நன்றி அண்ணே!

    🙂

  4. boss வேலை செய்யவில்லை தமிழில் மாற்றினால் தெரியவில்லை ஆங்கிலத்தில் இருந்தால் கேட்ஜெட் தெரிகிறது

  5. நண்பரே நன்றாக தான் உள்ளது! ப்ளாக் மூலம் பணம் சம்பார்ப்பது என சொன்னால் நன்றாக இருக்குமே Blog In Tamil

  6. நன்றி! ஆனால், உங்கள் பீட்பர்னர் சிக்கலுக்கு எனக்குக் காரணம் புரியவில்லை. சொல்லப்போனால், எனக்குப் பீட்பர்னர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதில் நிறை…ய வசதிகள் உள்ளன. சிலவற்றைப் பற்றித்தான் நம் தொழில்நுட்பப் பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். பலவற்றை இன்னும் தொடவேயில்லை. அப்துல் பாசித் அவர்களே! வலைப்பூ தொடங்க வழிகாட்டித் தொடர் எழுதிய நீங்கள் இது பற்றியும் குட்டித் தொடர் -ஆனால் முழுமையாக!- எழுதினால் நாங்களெல்லாரும் பயனடைவோம்!

  7. அன்புக்குரிய ஆசாத் அவர்களே! நான் கூறியுள்ளபடி, வலைப்பூவின் மொழியை முதலில் தமிழுக்கு மாற்றுங்கள். உங்கள் Followers செயலி மறைந்துவிடும். பிறகு, மேலே குறிப்பிட்டுள்ளபடி, Members செயலியை இணைத்துப் பாருங்கள். கண்டிப்பாக வேலை செய்யும். அதன் பிறகு Followers செயலியை நீக்கிவிடலாம். அப்படியும் தெரியவில்லையெனில் 9043585723 எனும் எண்ணில் என்னை அழைக்கலாம்.

    இந்தப் பதிவை இன்னும் கொஞ்சம் புரியும்படியாக எழுத வேண்டுமோ! நிறையப் பேரைக் குழப்பிவிட்டேன்!

  8. தமிழ்வாசி அவர்களே! உங்களுடைய அந்தப் பதிவை நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன். இந்தப் பதிவை நான் எழுதியவுடன் இப்படியொரு செயலி இருப்பது இத்தனை நாட்களாக நம் பதிவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? யாராவது கண்டிப்பாக இது பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைத்துக் கூகுளில் தேடிப் பார்த்தேன். அப்பொழுதுதான் உங்கள் பதிவு படிக்கக் கிடைத்தது. நான் கூறியபடி, வலைப்பூவின் மொழியை மாற்றிவிட்டு, Followers செயலிக்குப் பதில் Members செயலியை இணைத்துப் பாருங்கள். கண்டிப்பாக வேலை செய்யும். அதன் பிறகு Followers செயலியை நீக்கிவிடலாம்.

  9. பாராட்டிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி! நான் முதல் நாள் இங்கு வந்ததோடு சரி. அப்புறம் வரவில்லை. அதனால்தான் உங்களெல்லாருக்கும் உடனடியாகப் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. அதற்காக வருந்துகிறேன்!