பிட்.. பைட்.. மெகாபைட்..! (30/10/13)

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் (30/10/13) நடந்த முக்கிய மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.

கூகுள் ப்ளஸ் புதிய வசதிகள்:

நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கூகுள் ப்ளஸ் தளம் பல்வேறு புது வசதிகளை அறிமுகப்படுத்தியது. 
  • Google+ Custom URL – கூகுள் ப்ளஸ் கணக்கின் சுயவிவர பக்கத்தின் முகவரி நீண்டதாக இருக்கும். அதற்கு பதிலாக பயனாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள Custom URL என்ற வசதியை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது கூகுள். ஏதோ காரணங்களுக்காக அதனை நிறுத்திவிட்டது. தற்போது மீண்டும் அந்த வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுபற்றி உங்களுக்கு மின்னஞ்சல் வரும். (உ.ம் google.com/+AbdulBasith )
  • Full Size Backup – உங்களது கூகுள் ப்ளஸ் படங்களை பேக்கப் எடுக்கும் வசதியை கூகுள் ப்ளஸ் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் அறிமுகப்படுத்தியது. ஐஒஎஸ் சாதனங்களுக்கு விரைவில் வரும்.
  • Auto  Enhancement – புகைப்படங்களை தானாக மேம்படுத்த உதவும் Auto-Enhancement வசதியை மேம்படுத்தியுள்ளது.
  • Auto Awesome – ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களை அனிமேசனாக, பனோரமா புகைப்படமாக மாற்றும் வசதி.
ஸ்டீவ் ஜாப் வீடு வரலாற்று சின்னமாகிறது
மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் தனது சிறுவயதில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஆல்டோஸ்  நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அங்கு தான் Steve Wozniak என்பவருடன் இணைந்து முதல் ஆப்பிள் கணினியை உருவாக்கினார். அந்த வீடு தற்போது லாஸ் ஆல்டோஸ் வரலாற்று ஆணையத்தால் வரலாற்று சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


Google Wi-Fi Passport:
கூகுள் நிறுவனம் இந்தோனேசியாவில் Wi-Fi Passport என்ற புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் Wi-Fi மூலம் இணைய இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்
ஹேக் செய்யப்பட அடோப் பயனாளர் கணக்குகள்
29 லட்ச அடோப் பயனாளர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. க்ரெடிட் கார்ட் விவரங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் திருடப்பட்டதாகவும், அந்த பயனாளர்களுக்கு இதுபற்றி மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் அடோப் தெரிவித்துள்ளது.
Ara – திறந்த வன்பொருள் திட்டம்
கூகுளால் வாங்கப்பட்ட மோட்டோரோலா நிறுவனம் Ara என்னும் திறந்த வன்பொருள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. Assembled கணினி போன்றதொரு திட்டம். இது மட்டும் வெற்றியடைந்தால் மொபைல் வரலாற்றில் இதுவொரு முக்கிய மைல்கல்லாக அமையும். இதுபற்றி இறைவன் நாடினால் தனி பதிவாக எழுதுகிறேன்.
நாளை  ஆண்ட்ராய்ட் கிட்காட்?
ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான கிட்காட் நாளை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளாக்கர் நண்பன் – The Next Step

ப்ளாக்கர் நண்பன் தளத்தின் அடுத்த பரிமாணமாக “தொழில்நுட்ப இணையதளம்” உருவாக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்.... (17/10/12)

தளத்தின் பெயர் உள்பட உங்கள் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

Log Out!

7 thoughts on “பிட்.. பைட்.. மெகாபைட்..! (30/10/13)”

  1. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! – மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு