ஆட்சென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

குக்கி அனுமதி அறிவிப்பை வைக்காத தளங்களில் உள்ள ஆட்சென்ஸ் கணக்கை தற்போது ஆட்சென்ஸ் நிறுவனம் நீக்கி வருகிறது. அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

குக்கீஸ் (Cookies) என்றால் என்ன?
ஒரு இணையதளத்தில் நீங்கள் செய்யும் நடவடிக்கைகளை அந்த இணையதளம் நினைவில் வைத்திருப்பதற்கு பயன்படும் தரவு தான் குக்கி (Cookie).

cookie consent

உதாரணத்திற்கு ஜிமெயில் தளத்தில் நீங்கள் பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து உள்நுழையும்போது அந்த தகவல்களை உலவியில் குக்கி மூலம் ஜிமெயில் சேமித்து வைக்கிறது. 
Log Out செய்யாமல் நீங்கள் வெளியேறி, அடுத்த முறை நீங்கள் ஜிமெயில் தளத்திற்கு வரும்போது பயனர் பெயர், கடவுச்சொல் கேட்காது. காரணம் உங்கள் தரவு ஏற்கனேவே ஜிமெயில் குக்கியில் சேமிக்கப்பட்டுள்ளது. 
இப்படி ஒவ்வொரு தளமும் பல்வேறு காரணங்களுக்காக குக்கீகளை பயன்படுத்துகிறது. அதில் ஒன்று தான் Target Advertising. உதாரணத்திற்கு கூகுள் தேடலில் நீங்கள் மொபைல் போன்கள் பற்றி தேடினால், பிறகு நீங்கள் செல்லும் அனைத்து தளங்களிலும் மொபைல் போன்கள் தொடர்பான விளம்பரங்கள் வரும். இப்படி ஒருவரின் விருப்பங்களை கண்டறிந்து அது தொடர்பான விளம்பரங்களை அவருக்கு காட்டுவது தான் Target Advertising. 
குக்கி தொடர்பான ஐரோப்பிய நாட்டு சட்டம்:
இதுபோன்ற குக்கி மூலம் ஒரு பயனரின் தகவல்களை சேகரிப்பதற்கு முன்பு நீங்கள் எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறீர்கள் என்ற விவரத்தை உங்கள் தளத்தில் வெளியிட வேண்டும், அந்த பயனரின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது தான் ஐரோப்பிய நாட்டு சட்டம். 
அப்படி செய்யாத தளங்கள் மீது ஐரோப்பிய நீதிமன்றம் அபராதம் விதிக்கும். இந்த காரணத்துக்காக மட்டும் கூகுள் நிறுவனம் ஐம்பது மில்லியன் ஈரோக்களை அபராதமாக கட்டியுள்ளது.
இதன் காரணமாக இணையதளங்களில் குக்கி ஒப்புதல் அறிவிப்பை வைக்காத ஆட்சென்ஸ் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கி வருகிறது. அதனை தவிர்ப்பதற்கு உங்கள் தளத்தில் குக்கி ஒப்புதல் அறிவிப்பை நீங்கள் வைக்க வேண்டும்.

ப்ளாக்கரில் குக்கி ஒப்புதல் அறிவிப்பை வைக்க:

முதலில் https://cookieconsent.insites.com/download/ என்ற பக்கத்திற்கு செல்லவும்.

அதில் உள்ள அமைவுகளை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றுங்கள்.

1. Position – அறிவிப்பு எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது. Bottom பகுதியில் வைப்பது சிறந்தது.


2. Layout – உங்களுக்கு பிடித்த வடிவமைப்பை தேர்வு செய்யுங்கள். கீழே preview காட்டும்.


3. Palette – உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்யுங்கள்


4. Learn More Link – உங்கள் தளத்தில் உள்ள குக்கி மற்றும் பிரைவசி பாலிசி பக்கத்தின் முகவரியை கொடுங்கள். பிரைவசி பாலிசி பக்கம் உருவாக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.


5. Compliance Type – Just tell users that we use cookies என்பதை தேர்வு செய்யுங்கள்


6. Custom Text – எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை

இதையும் படிங்க:  தமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்

பிறகு வலது புறத்தில் உள்ள நிரலை Copy செய்து கொள்ளுங்கள்.

பிறகு ப்ளாக்கர் Layout பகுதிக்கு சென்று Add a Gadget-ஐ சொடுக்கி, HTMLJavascript என்பதை சொடுக்குங்கள்.

அங்கே நீங்கள் ஏற்கனவே Copy செய்த நிரலை Paste செய்து Save கொடுங்கள்.

பிறகு மேலே உள்ளது போல குக்கி அனுமதி காட்டும். உங்கள் தளத்தின் வருகையாளர்கள் ஒரு முறை அதனை சொடுக்கினால் சேமிக்கப்படட குக்கி உலவியில் இருக்கும்வரை மீண்டும் வராது.

வேர்ட்பிரஸ் தளத்தில் குக்கி ஒப்புதலை வைக்க மேலுள்ளதையே பின்பற்றலாம். ஒருவேளை நீங்கள் Jetpack Plugin பயன்படுத்தினால், Widget பகுதியில் Cookie Consent என்னும் widget-ஐ பயன்படுத்தலாம்.

2 thoughts on “ஆட்சென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை”

  1. அடடா! அடடா! இப்படிப்பட்ட முக்கிய வழிகாட்டுதல்களையெல்லாம் உங்களைத் தவிர வேறு யார் எங்களுக்கு அளிக்க முடியும்! இதற்காகத்தான் நண்பரே நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது. மிக்க நன்றி!