வாசகர்களை அதிகரிக்க Meta Tags

தமிழ், படம், படங்கள்
ப்லாக்கர் தளத்தில் Meta Tags-ஐ சேர்த்தால், கூகிள், யாஹூ, பிங் போன்ற தேடுபொறிகளின் மூலம் வரும் வாசகர்களை அதிகரிக்க செய்யலாம். அதனை நமது வலைப்பூவில் எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.

Meta Tags மூலம் உங்கள் தளத்தை பற்றிய தகவல்களை தேடுபொறிகளுக்கு நீங்கள் சொல்கிறீர்கள், அவ்வளவு தான்..

நாம் இப்பொழுது மூன்று விபரங்களை சேர்க்க போகிறோம்.

1. நமது தளத்திற்கான குறிச்சொற்கள் (Keywords)

2. நமது தளத்தை பற்றிய குறிப்பு (Description)

3. பதிவரின் (நமது) பெயர் (Author’s Name)

வலைப்பூவில் Meta Tags-ஐ சேர்க்கும் முறை:

1. முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
2. பிறகு 


<b:include data='blog' name='all-head-content'/>
என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யவும். 


<meta content='DESCRIPTION' name='description'/>

<meta content='KEYWORDS' name='keywords'/>

<meta content='AUTHOR' name='author'/>

 மேலுள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றை பின்வருமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.

‘DESCRIPTION’ என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவை பற்றிய சிறிய தகவல். வெறும் குறிச்சொற்களை (Keywords) மட்டும் இதற்கு பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் தேடுபொறிகள் (Search Engines) உங்கள் தளத்தை தடை செய்துவிடும்.
 ‘KEYWORDS’ என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு ஏற்ற குறிச்சொற்களை கொடுங்கள். குறிச்சொற்களை அதிகம் கொடுக்காதீர்கள். அதிகபட்சம் இருபது வார்த்தைகளாக இருக்கட்டும். அதே சமயம், ஒரே வார்த்தையை மூன்றுக்கு அதிகமாக உபயோகப்படுத்தாதீர்கள்
‘AUTHOR’ என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுங்கள்.

உதாரணத்திற்கு ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு நான் கொடுத்துள்ள tags:


<meta content='வலைப்பதிவர்களுக்காக எளிய தமிழில் தொழில்நுட்ப உதவிக்குறிப்புகள்' name='description'/>

<meta content='ப்ளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்பம், கணிப்பொறி, வலைப்பூ, blogger tips in tamil, எப்படி, பதிவுகள், படங்கள், ப்லாக்கர்' name='keywords'/>

<meta content='நூ.ஹ. அப்துல் பாஸித்' name='author'/>


3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்துவிடுங்கள்.

அவ்வளவு தான்…
இதையும் படிங்க:  ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி?

32 thoughts on “வாசகர்களை அதிகரிக்க Meta Tags”

  1. @Praveen-Mani

    //அலக்சா ரேங்கில் பத்து இலச்சதிற்குள் வந்து விட்டீர்கள் போல….நல்லதொரு வளர்ச்சி…//

    புகழனைத்தும் இறைவனுக்கே!

    தங்கள் போன்ற நண்பர்களின் வாழ்த்துக்களும், ஊக்கங்களும் இதற்கு முக்கிய காரணம்.

    Reply
  2. நண்பரே ஒரு உதவி
    bX-2myth2
    ADDITIONAL INFORMATION
    blogID: 1415515148884907372
    host: http://www.blogger.com
    uri: /rearrange என்னுடைய பிளாக்கில் டிசைன் பேலட்டில் உள்ள பேஜ் எலிமென்டில் உள்ள பக்கங்கள் தெரியவில்லை. பிரிவுயூவை அழுத்தினால் மேற்கண்ட எர்ரர் மெஸ்சேஜ் வருகிறது.. சரி செய்ய வழி சொல்லுங்களேன்

    Reply
  3. @Mr.Rain

    உங்கள் Browser-ல் Cookies-ஐ delete செய்து பாருங்கள். இல்லையென்றால் சிறிது நேரம் காத்திருந்து பிறகு பாருங்கள். ஏனெனில் இது போன்ற பிரச்சனைகள் எப்போதாவது ஏற்படக் கூடியது தான். தானாகவே சரியாகி விடும்.

    Reply
  4. நண்பா! உங்களுடைய பதிவில் உள்ளது போல் ஸ்பை, விஸிட்டர்ஸ், அலெக்ஸா ரேங்க் இவைகளை எப்படி இணைப்பது?

    Reply
  5. @எம்.ஞானசேகரன்

    மிகவும் எளிது. அந்தந்த தளங்களுக்கு சென்று உங்கள் ப்ளாக்கை பதிவு செய்தால், உங்கள் ப்ளாக்கிர்க்கென்று பிரத்யேகமான Code தரப்படும். அந்த Code-ஐ உங்கள் ப்ளாக்கின் sidebar-ல் சேர்க்க வேண்டும்.

    தளங்களின் முகவரி:
    http://alexa.com
    http://histats.com
    http://geovisite.com

    Reply
  6. @சரவணன்.D
    @Jaleela Kamal
    @Premkumar Masilamani

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி…!

    Reply
  7. ஹா ஹா…. என்னுடைய பெயரும் googleஇல் வருகிறது. எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுங்க‌ளா… Thank you soooooo much sir…
    எனக்கு ஒரு சந்தேகம். post a commentஇல் தமிழிலும் ஆங்கிலதிலும் தேவைக்கேற்றவாறு மாறி மாறி டைப் அடிக்க வேண்டும் என்றால் எப்படி அதை செய்வது?
    இப்போது தனி வின்டோவில் Bible uncle's tamil unicode writer உபயோகித்து டைப் செய்கிறேன். சிரமமாக உள்ளது.எளிய வழி எதேனும் உள்ளதா?

    Reply
  8. @சாதாரணமானவள்

    //என்னுடைய பெயரும் googleஇல் வருகிறது.//

    மிக்க மகிழ்ச்சி..

    //post a commentஇல் தமிழிலும் ஆங்கிலதிலும் தேவைக்கேற்றவாறு மாறி மாறி டைப் அடிக்க வேண்டும் என்றால் எப்படி அதை செய்வது? //

    நான் எனது கணினியில் Google Transliteration IME நிறுவியுள்ளேன். அதன் மூலம் நீங்கள் தமிழ் ஆங்கிலம் என்று மாறி, மாறி டைப் செய்யலாம். இணையதளத்தில் மட்டுமல்லாமல் word, notepad போன்று அனைத்து இடங்களிலும் தமிழில் டைப் செய்யலாம்.

    அதனை நிறுவ கீழுள்ள முகவரிக்கு செல்லவும்.
    http://www.google.com/ime/transliteration/

    நிறுவுவதற்கு முன் Installation Instructions-ஐ படிக்கவும்.

    Reply
  9. //கவிக்குயில்கள் said…
    நண்பா நானும் META டக்ஸ் இணைத்து உள்ளேன், மிக்க நன்றி//

    மிக்க மகிழ்ச்சி, நண்பா..!

    Reply
  10. //ஆமினா said…

    நான் இணைத்து விட்டேன் 🙂
    மிக்க நன்றி பாஸித்!
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி..!

    Reply
  11. //Akber Hassan said…

    நன்றி ப்ளாகர் நண்பா
    //

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

    Reply
  12. salamun alaika
    sagothara ?
    naan ithai murai padi seithu paarthaen aanaal google search il en thalam vara maattinguthu enna piratchanai ?
    plz vilakkavum..
    by anwar ali

    Reply
  13. //anwar ali said…

    salamun alaika
    sagothara ?
    naan ithai murai padi seithu paarthaen aanaal google search il en thalam vara maattinguthu enna piratchanai ?
    plz vilakkavum..
    by anwar ali
    //

    தங்கள் ப்ளாக் கூகிள் தேடுபொறியில் வருகிறது சகோ.!

    Reply
  14. நண்பா நானும் META டக்ஸ் இணைத்து உள்ளேன், but blog-இல் இணைத்த
    அடையாளம்(BOX) கண்டு கொள்ள (BOX) ஏதாவது இருக்குமா?
    pls

    Reply
  15. //மாய உலகம் said… 23

    நண்பா நானும் META டக்ஸ் இணைத்து உள்ளேன், but blog-இல் இணைத்த
    அடையாளம்(BOX) கண்டு கொள்ள (BOX) ஏதாவது இருக்குமா?
    pls//

    இல்லை நண்பா.. நீங்கள் உங்கள் ப்ளாக்கின் Page Source-ல் தான் பார்க்க முடியும்..

    Reply
  16. உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நானும் Meta Tags இணைத்துவிட்டேன்

    Reply
  17. //valaipathivu said… 25

    உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நானும் Meta Tags இணைத்துவிட்டேன்
    //

    மிக்க மகிழ்ச்சி நண்பரே!

    Reply
  18. உங்களின் இந்த பதிவு பார்த்துதான் நானும் meta tag இன்று இணைத்தேன்.

    விளக்கம் புரியும்படி இருந்ததால், எளிதாக வேலை முடிந்தது.

    நன்றி.

    Reply
  19. இந்த மெட்டா டாக்ஸ் தமிழில் இணைத்தலை விட ஆங்கிலத்தில் இணைத்தல் நலம் என நான் எண்ணுகிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?

    இன்றுதான் மெட்டா டாக்ஸ் இணைக்க போகிறேன், பயனுள்ள பதிவு நன்றி.

    Reply
  20. //மென்பொருள் பிரபு said… 27

    உங்களின் இந்த பதிவு பார்த்துதான் நானும் meta tag இன்று இணைத்தேன்.

    விளக்கம் புரியும்படி இருந்ததால், எளிதாக வேலை முடிந்தது.

    நன்றி.//

    மிக்க மகிழ்ச்சி நண்பரே!

    Reply
  21. //Heart Rider said… 28

    இந்த மெட்டா டாக்ஸ் தமிழில் இணைத்தலை விட ஆங்கிலத்தில் இணைத்தல் நலம் என நான் எண்ணுகிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?
    //

    இல்லை நண்பா! தமிழ் தளங்களுக்கு தமிழில் சேர்ப்பது தான் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    // இன்றுதான் மெட்டா டாக்ஸ் இணைக்க போகிறேன், பயனுள்ள பதிவு நன்றி.//

    நன்றி நண்பா!

    Reply
  22. சகோ பாஸித் இறைவன் உங்களுக்கு அருள்புரிய என் துவாக்கள்… என் ப்ளாக்கரில் உங்கள் பங்கும் முக்கியமானது. ஜசாக்கல்லாஹ் அன்புடன் உங்கள் நண்பன் முகம்மது யூசுப் http://tirupurrtntj.blogspot.in/

    Reply

Leave a Reply