ப்ளாக் தொடங்குவது எப்படி? – Word Verification [பகுதி – 22]

புதிய ப்ளாக்கர் டாஷ்போர்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வசதிகளையும் பார்த்துவிட்டோம். பழைய டாஷ்போர்டில் உள்ள ஒரு முக்கியமான அமைவு புதிய டாஷ்போர்டில் இல்லை. அதனை பயன்படுத்துவதற்கு நாம் திரும்பவும் பழைய டாஷ்போர்டிற்கு மாற வேண்டும். அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

Update: தற்போது word Verification வசதி புதிய டாஷ்போர்டில் சேர்க்கப்பட்டுள்ளது. Settings => Posts and Comments பகுதியில் உள்ளது.

முதலில் www.blogger.com என்ற முகவரிக்கு செல்லுங்கள். (draft.blogger.com என்ற முகவரிக்கு அல்ல)

டாஷ்போர்டில் வலதுபுறம் Blogger Options பட்டனை க்ளிக் செய்து, Old Blogger interface என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பழைய டாஷ்போர்டிற்கு மாறிவிடும்.

அதில் Settings என்பதை க்ளிக் செய்து Comments என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கு Show Word verification for comments? என்ற இடத்தில் No என்பதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால் வாசகர்கள் நமது பதிவுகளுக்கு கருத்திடும் போது ஒரு படத்தைக் காட்டி அதில் இருக்கும் எழுத்துக்களை டைப் செய்ய சொல்லும். இது வாசகர்களுக்கு சலிப்பைத் தரலாம்.

புதிய டாஷ்போர்டில் இல்லாத வேறு சில வசதிகள் பழைய டாஷ்போர்டில் இருந்தாலும் மற்றவைகள் அவசியமில்லாதது என்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.

மீண்டும்  புதிய டாஷ்போர்டிற்கு மாற டாஷ்போர்டில் வலதுபுறம் மேலே Try the updated Blogger interface என்பதை க்ளிக் செய்யுங்கள்.

ப்ளாக்கரில் உள்ள வசதிகளை ஓரளவு பார்த்துவிட்டோம். இனி அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இறைவன் நாடினால் அதனை அடுத்தப் பகுதியில் பார்ப்போம். அதற்குள் நீங்கள் உங்கள் அறிமுகப்பதிவு ஒன்றை பதிவிடுங்கள். அது உங்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கலாம் அல்லது அதிரடியாக இருக்கலாம். அந்த பதிவைப் படிக்கும் போதே மீண்டும் உங்கள் பிளாக்கிற்கு வாசகர்கள் வருமாறு இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:  ஹேக் செய்யப்பட்ட ஜிமெயில்/கூகுள்

10 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? – Word Verification [பகுதி – 22]”

  1. தேவையான தகவல்களைத் தேவையான நேரத்தில் தேடி எடுத்துத் தந்து கொண்டே இருக்கிறீர்கள்.
    எத்தனை முறை நன்றி சொன்னாலும் திருப்தி கிடைக்காது நண்பரே.