ப்ளாக் தொடங்கியாச்சு, அடுத்து?

 இது ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடரின் 23-ஆம் பகுதி ஆகும். அனைத்து பகுதிகளிலும் ஒரே தலைப்பாக வைத்தால் வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்ற நண்பர்களின் ஆலோசனையை ஏற்று தலைப்பு அந்தந்த பகுதிகளில் உள்ளவற்றுக்கு ஏற்றவாறு கொடுக்கிறேன். இனி பதிவிற்கு செல்வோம்.

ப்ளாக் தொடங்கியதும் அறிமுக பதிவு ஒன்றை பதிவிடச் சொன்னேன் அல்லவா? அவ்வாறு பதிவிட்டப்பின் நம்முடைய ப்ளாக்கை அழகுப்படுத்தவும், தேடுபொறிகளில் முன்னிலையில் வரவும் சில காரியங்கள் செய்ய வேண்டும். அவற்றைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளதால் அதற்கான சுட்டி மட்டும் இங்கே தொகுக்கிறேன்.

1. ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி?

டெம்ப்ளேட்  தேர்ந்தெடுக்கும் போது சிம்பிளாகவும், எளிதில் Load ஆகும்படியுமாக இருக்கட்டும்.

2. ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா?

உங்கள் ப்ளாக்கை தேடுபொறிகளில் முன்னிலைக்கு கொண்டு வருவதற்கான (Search Engine Optimization) முதல் படி. இதனை அவசியம் செய்யுங்கள்.

3. வாசகர்களை அதிகரிக்க Meta Tags

இதுவும்  தேடுபொறிகளில் முன்னிலைக்கு கொண்டு வருவதற்கான வழியாகும்.

4. பிளாக்கரில் Related Posts Widget வைப்பது எப்படி?

ஒவ்வொரு  பதிவுகளுக்கும் கீழே அது தொடர்புடைய மற்ற பதிவுகளை காட்டுவதற்கு இந்த Widget பயன்படுகிறது. இதனை வைப்பது மூலம் Pageviews அதிகரிக்கலாம்.

5. பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)

நமது  ப்ளாக்கில் பக்க எண்களை கொடுப்பதற்கான செயல்முறைகள்.

மேலும் செய்ய வேண்டியவைகளைப் பற்றிய பதிவுகள்

6. ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி?

7. ப்ளாக்கில் Read More Button-ஐ வைக்க..

8.  எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..

இனி நம்முடைய ப்ளாக்கை மற்றவர்களிடம் பிரபலப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-2]

22 thoughts on “ப்ளாக் தொடங்கியாச்சு, அடுத்து?”

  1. hello sir,

    நமது ப்ளாக் பிரபல படுத்த tamil10.com indli.com, tamilmanam போன்ற வலைத்தளங்கள் உள்ளது.அது போல ஆங்கிலத்தில் எழுதபடும் ப்ளாக் அது போன்ற வலைத்தளங்கள் இருதால் சொல்லவும் நன்றி..

  2. என்னுடைய வலைத்தளத்திற்கு Meta Tags-description என்ன வைக்க வேண்டும் என்பதில் குழப்பமாக உள்ளேன், அறிவுரை தரமுடியுமா நண்பா ?

  3. தொடரின் ஆரம்பத்தில் சொன்னது போல இறைவன் நாடினால் பிறகு வரும் பகுதிகளில் அவற்றைப்பற்றி பகிர்கிறேன் நண்பா!

  4. இந்த ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற தொடரை நானும் தவறாமல் படித்து வருகிறேன்.தங்களின் சேவை அளப்பரியது. புதியவர்களுக்கு அத்தியாவசியமான தளம் உங்கள் தளம்தான். நானும் எனக்குத் தெரிந்தவர்களுக்கு உங்கள் தளத்தை சிபாரிசு செய்து வருகிறேன். உங்கள் சேவை தொடரட்டும். நன்றி.

  5. தங்களின் ப்ளாக் பற்றிய பதிவுகளைப படித்து ஒரு ப்ளாக் தொடங்கி உள்ளேன்.
    tech7hints.blogspot.com.Yr comments pls.

  6. உங்கள் பதிவுகள் அருமையானது! பிளாக்கர் தற்போது டாஷ்போர்டை மாற்றிவிட்டதால் எமது நோக்கியா 5130 மொபலில் இருந்து பதிவு எழுத முடியவில்லை! பிளாக்கில் எனக்கு மொபைலில் இருந்து மட்டுமே எழுதத் தெரிந்த எமக்கு ஒரு வழி சொல்லுங்கள் ! நன்றி http://www.kavithaimathesu.blogspot.com

  7. ஹலோ பாஸ் ,
    உங்கள் பதிவுகளை படித்து படித்து எழுந்த ஆர்வ கோளாறில் ஒரு
    ப்ளாகையும் திறந்துவிட்டேன் அதில் குளறு படியும் செய்து வைத்து
    இருக்கிறேன் அதை இங்கு சொன்னால் இந்த போஸ்ட் ஒரு கட்டுரை
    ஆகிவிடும்( பப்ளிக் பப்ளிக் வேற ) அதனால் முடிந்தால் என் பிளாக்கை பார்வை இட கேட்டு கொள்கிறேன்
    வண்டி ஓடுமா ? குடைசாஞ்சிடுமா ? என்ற தலைப்பில் என் குறையை சொல்லி இருக்கிறேன் என்
    http://poovizi.blogspot.in/

  8. எனக்கு பிளாக்கில் இருக்கும் பிரச்சினைகள்

    1.எனக்கு 4 பேஜ் (page) உள்ளன ஹோம் பேஜ்ஜை தவிர மற்ற பேஜ்களில் ஒரே ஒரு பதிவை மட்டும் தான் எழுத முடிகிறது எனக்கு மற்ற பேஜ்ஜிலும் எனக்கு நிறைய பதிவுகள் இட வேண்டும் லிங்க் க்ளிக் பண்ணி வேற லின்க்கு செல்வது எனக்கு வேண்டாம்

    2. எனக்கு ட்விட்டர் பாலோ பட்டன் வைக்கவேண்டும் எனக்கு HTML தெரியாது அது மூலமாகத்தான் ட்விட்டர் பாலோ பட்டன் வைக்க முடியுமா ? வேறு வழியில்லையா ? அப்படிஎன்றால் எப்படி வைப்பது ?

    3. உங்களின் ஒவ்வொரு பதிவிலும் FB, Twitter, G+, Indly ஷேர் செய்ய பெரிய பட்டன்கள் வைத்திருக்கிறீர்கள் எனக்கும் அது மாதிரி வைக்க வேண்டும் எப்படி வைப்பது ?

    இதற்க்கு னக்கு உதவி கிடைக்குமா?
    அட்வான்ஸ் ஆயிரம் நன்றிகள் சகோ 🙂

    My Blog http://www.harrygowtham.com

  9. 1. Page என்பது தனி பக்கம். அதில் ஒன்று தான் எழுத முடியும்.

    மற்ற கேள்விகளுக்கு உங்களை பேஸ்புக்கில் தொடர்பு கொள்கிறேன் சகோ!

    🙂