சாப்ட்வேர் இல்லாமல் ஃபைல்களை மறைக்க

நம்முடைய கணினிகளில் பலவிதமான ஃபைல்களை வைத்திருப்போம். அவற்றில் முக்கியமான சிலவற்றை மற்றவர்கள் பார்க்க முடியாதவாறு மறைத்து வைக்க நினைப்போம். அப்படி தேவையான ஃபைல்களை அல்லது ஃபோல்டர்களை எளிதாக மறைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

இது  ஒரு வீடியோ பதிவு. கீழுள்ள வீடியோவில் ஃபைல்களை மறைப்பதற்கான வழிமுறைகளை பார்க்கவும்.

வீடியோவில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள்:

1. மறைக்க நினைக்கும் ஃபைல் அல்லது ஃபோல்டரை Select செய்து Right Click செய்யுங்கள்.

2. அதில் Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. அங்கே General Tab-ல் Hidden என்னும் சிறிய பெட்டியில் கிளிக் செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.

தற்போது அந்த ஃபைல் அல்லது ஃபோல்டர் மறைக்கப்பட்டு விடும். மறைக்கப்பட்ட ஃபைல் சில நேரம் மங்கலாக தெரியும். அப்படி தெரிந்தால் பின்வருபவற்றை செய்யுங்கள்.

4. மேலே Menu Bar-ல் Tools => Folder options கிளிக் செய்யுங்கள்.

5. அங்கே View Tab-ஐ கிளிக் செய்யுங்கள்.

6. அங்கே Hidden files and folders என்பதற்கு கீழே Show hidden files, Dont show hidden files என்று இருக்கும்.

Show hidden files – மறைக்கப்பட்ட ஃபைல்கள் மங்கலாக தெரிவதற்கு
Dont show hidden files – மறைக்கப்பட்ட ஃபைல்கள் தெரியாமல் இருப்பதற்கு

இதில் Dont show hidden files என்பதை தேர்வு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு நீங்கள் மறைத்த அனைத்து ஃபைல்கள், ஃபோல்டர்களும் யாருக்கும் தெரியாது.

இது எளிமையான வழியாகும். இதில் உள்ள குறைபாடு, இது பற்றி தெரிந்த யாரும் நீங்கள் மறைத்த ஃபைல்களை பார்க்கலாம். ஆனால் பல நேரம் இது பயன்படும்.

Update: மறைத்த ஃபைலை மீண்டும் தெரிய வைப்பதற்கு, ஸ்டெப் 6-ல் உள்ளதில் Show hidden files என்பதை தேர்வு செய்து, ஸ்டெப் 3-ல் செய்த டிக்கை எடுத்துவிடவும்.

டிஸ்கி: இது ஒரு சோதனை பதிவு. (ஆமாம்! எங்களுக்கு சோதனையான பதிவு தான்! என்று சொல்லக் கூடாது!!!)

Update 2: சோதனை தோல்வி!

Update 3 (22/08/12): வீடியோ மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  அன்னையர் தினம் - அழகிய கூகுள் டூடுல்

34 thoughts on “சாப்ட்வேர் இல்லாமல் ஃபைல்களை மறைக்க”

  1. மறைத்த பைல்களை மீண்டும் பார்ப்பதற்கான வழியை சொல்லவில்லையே.

  2. 🙂 🙂 🙂

    ஏற்கனவே ஒரு சோதனை பதிவு தோல்வி அடைந்துவிட்டது. இது வெற்றி அடைகிறதா? என்று பார்ப்போம். 🙂

  3. @Anonymous

    நன்றி நண்பரே! தற்போது பதிவில் அதனை சேர்த்துள்ளேன்.

    @Prabu Krishna

    நன்றி சகோ.!

  4. இன்னொரு எளிய வழி!
    ரொம்ப முக்கியமான பைல்களை, தனி partition-இல் போட்டு – disk management மூலம் அந்த partition-இன் டிரைவ் லெட்டரை எடுத்து விடலாம்! தேவைப்படும்போது மட்டும் டிரைவ் லெட்டர் assign செய்து கொள்ளலாம்! 🙂

  5. இன்னும் சில கோல்மால்கள் செய்தால் கோப்பு இருக்கும் தடம் தெரியாமலும் மாற்றி விடலாமென்று நினைக்கின்றேன்.

  6. //பல வித்தை கத்து வச்சு இருப்பீங்க போல…..//

    அவர் பதினைந்து வருடம் கணினி துறையில் தானே பணிபுரிகிறார், இன்னும் நிறைய தெரியும் அவருக்கு..

  7. இது மிகவும் எளிய வழிதான்.
    டிரைவை திறக்கும் போது அல்லது போல்டரை திறக்கும் போது கீழே உள்ள ஸ்டேட்டஸ் பாரில் எத்தனை பைல்கள் அல்லது போல்டர்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளது என காண்பிக்கும். எனவே இந்த முறையை பயன்படுத்தும் நண்பர்கள் ஸ்டேட்டஸ் பார் ஆப்சனை நீக்கி விடுவது நல்லது..

  8. //எனக்கு கடினமான வழி போல தெரியுது!!! //
    அட, ஆமா இல்லே! 😉 சரி இப்படி மாத்திருவோம்!

    ஒரு எளிய "வலி"!

    😀

  9. நண்பா எனக்கு ஒரு கேள்வி உள்ளது அதை நீங்கள் வரும் பதிவுகளில் தெளிவு படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்
    நிறைய பதிவர்கள் தளத்தில் GOOGLE FRIEND CONNECT தமிழில் வருவதை பார்கிறேன் ..அதே நேரம் என் தளத்தை LANGUAGE OPTIONஐ தமிழில் மாற்றினால் GOOGLE FRIEND CONNECT மறைந்து விடுகிறது …
    நம் ப்ளாக்ல் தமிழில் GOOGLE FRIEND CONNECT வர வைப்பது எப்படி ????

    ////உண்மையில் நீங்கள் சொல்லும் FILE HIDDEN OPTION இன்றைய சூழ்நிலையில் சின்ன குழந்தை கூட கண்டு பிடித்து விடும் எனவே நாம் FILE HIDING software பயன்படுத்தலாம் என்பதே என் கருத்து

  10. பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .
    இன்னும் தமிழ்மணத்தை இணைக்கவில்லை
    அதன் நிரலியுடன் கூடிய முன்போல்
    ஒரு இலகு வழியை எனக்குத் தருவீர்களா?….

  11. இதெல்லாம் ஒகே. எங்க காலேஜ்ல நிறைய தளங்களையும் ப்லாக் செய்துள்ளனர்…இதுக்கு ஏதாவது வழி சொல்லுங்களேன்…….

  12. இன்னும் ஒரு வழி இருக்கு… அப்படியே Regedit சென்று Folder Option க்குரிய binary 1 ஐ 2 என்று மாற்றுவதன் மூலம் யாரும் இலகுவில் மறைக்கப்பட்ட நமது Files களை பர்ர்க்க முடியாது.