Hunt For Hint 3 – புதிர் வேட்டை!

2011-ஆம் ஆண்டு டெர்ரர் கும்மி நண்பர்கள் இணைந்து Hunt For Hint என்னும் வித்தியாசமான புதிர் போட்டியினை தொடங்கினார்கள். இரண்டு வருடம் தொடர்ந்து மூன்றாம் வருடமாக தற்போது Hunt For Hint 3 புதிர் விளையாட்டை இன்று தொடங்கியுள்ளார்கள்.

2011 ஆம் ஆண்டு இந்த விளையாட்டு முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந்த போட்டியின்போது தான் இணையத்தில் சக பதிவர்களாய் இருந்த இருவர் சக தோழர்களாக, சகோதரார்களாக மாறினார்கள். 🙂

இந்த போட்டி பற்றிய சிறு விளக்கம் அவர்கள் தளத்திலிருந்து….

  1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் “KLUELESS” விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.
  2. நேரடி கேள்விகள் இருக்காது…. படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்.
  3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்… அதை கண்டுபிடித்து விடை சொல்ல வேண்டும்.
  4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.
  5. விடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்.
  6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்.
  7. அனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.
  8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
  9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.

பரிசு விபரங்கள்:

முதல் பரிசு: 5000 ரூபாய்

இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்

மூன்றாம் பரிசு: 2000 ரூபாய்

இரண்டு ஆறுதல் பரிசு தலா 1000 ரூபாய்.

போட்டி பற்றிய விபரங்கள் அறிய: HUNT FOR HINT-3 – The Game Starts Now
போட்டியில் விளையாட: Hunt For Hint 3

இதையும் படிங்க:  எச்சரிக்கை! ஸ்கைப்பில் பரவும் மால்வேர்

1 thought on “Hunt For Hint 3 – புதிர் வேட்டை!”

  1. இந்த போட்டியின்போது தான் இணையத்தில் சக பதிவர்களாய் இருந்த இருவர் சக தோழர்களாக, சகோதரார்களாக மாறினார்கள். 🙂 //

    அதில் ஒருவர் அதன் பிறகு அந்த போட்டியை விளையாடவே இல்லையாம் 😀