எச்சரிக்கை! ஸ்கைப்பில் பரவும் மால்வேர்

ஸ்கைப் (Skype) பற்றி அதிகமானவர்கள் அறிந்திருப்பீர்கள். நம் நண்பர்கள், உறவினர்களுடன் இலவசமாக பேசுவதற்கும், வீடியோ சாட் செய்வதற்கும் பயன்படுகிறது. வெளிநாடுகளில் உள்ளவர்களால் அதிகம் பயன்படுத்தும் ஸ்கைப்பில் அடிக்கடி மால்வேர் பரவும். தற்போதும் புதுவகையான மால்வேர் பரவிவருகிறது.

இந்த மால்வேர் பற்றி பார்ப்பதற்கு முன், Bitcoin பற்றி தெரிந்துக் கொள்வோம்.


Bitcoin என்றால் என்ன?

Bitcoin என்பது Virtual நாணயம் ஆகும். இது 2009-ஆம் ஆண்டு Satoshi Nakamoto என்ற தனி நபரால் அல்லது ஒரு குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது திறந்த மூலம் (Open Source) ஆகும். இந்த நாணயங்கள் கணினி-மொபைல்கள் மூலம் பரிமாறப்படுகிறது. இதற்கென்று எந்த ஒழுங்குமுறைகளும் கிடையாது.

கடந்த ஜனவரி மாதம் 13.50 அமெரிக்க டாலராக இருந்த ஒரு பிட்காயின் மதிப்பு தற்போது 140 டாலராக உயர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் BitCoin நாணயத்தை அங்கீகரித்துள்ளன. இந்த நாணயங்கள் மூலம் நீங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம்.

பிட்காயின்களைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று விலைக் கொடுத்து வாங்கலாம், இரண்டாவது Bitcoin Miner மென்பொருள்கள் மூலம் நீங்களே உருவாக்கலாம்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபற்றி விரிவாக என்னால் சொல்ல இயலாது.

ஸ்கைப் மால்வேர்:

பொதுவாக மால்வேர் பரப்புபவர்கள் வித்தியாசமான செய்திகளுடன் சுட்டியை இணைத்து அனுப்புவார்கள். இதை ட்விட்டரில் பரவும் வைரஸ் – எச்சரிக்கை
என்ற பதிவில் கூட பார்த்தோம்.

  •  Hey some person is making terrible rumors about you… tinyurl.com/83zexxf 
  • This video with you in it had me dying lol  t.co/xxxxx
  • when did you make this video? its hilarious, cant stop laughing lol bit.ly/xxxx

தற்போது ஸ்கைப்பிலும் இப்படி தான் மால்வேர் சுட்டிகளை அனுப்புகிறார்கள். இதை நம்பி அந்த சுட்டிகளை க்ளிக் செய்தால் உங்களுக்கு தெரியாமலேயே Bitcoin Miner மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிடும். இந்த அப்ளிகேசன் உங்கள் கணினி மூலம் பிட்காயின்களை மால்வேரை அனுப்பியவருக்கு உருவாக்கி அனுப்பும்.

இந்த மென்பொருள் இயங்குவதால் உங்கள் கணினி வேகம் குறைந்துவிடும், சில சமயம் உங்கள் கணினி இயங்காமலேயே போக வாய்ப்புண்டு.

இந்த மால்வேர் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள: Skypemageddon by bitcoining

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

எப்போதும் சொல்வதைத் தான் இப்போதும் சொல்கிறேன். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்….! விவேகம் இல்லாத ஆர்வம் உங்களை ஆபத்தில் சிக்கவைக்கும். எந்தவொரு வித்தியாசமான சுட்டியையும் க்ளிக் செய்வதற்கு முன் பல தடவை யோசித்து செயல்படுங்கள்.

இதையும் படிங்க:  ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம்

9 thoughts on “எச்சரிக்கை! ஸ்கைப்பில் பரவும் மால்வேர்”

  1. // எந்தவொரு வித்தியாசமான சுட்டியையும் க்ளிக் செய்வதற்கு முன் பல தடவை யோசித்து செயல்படுங்கள். //

    பல தடவை யோசிச்சு கிளிக் பண்ணினா மால்வேர் தாக்காதா பாஸித்??? டவுட்டு…

  2. //பல தடவை யோசிச்சு கிளிக் பண்ணினா மால்வேர் தாக்காதா பாஸித்???//

    அப்படி யோசிச்சா க்ளிக் பண்ண மாட்டீங்க…

  3. எதற்கு இப்படி செய்கிறார்கள்? அவர்களுக்கு என்ன லாபம்? எச்சரித்ததற்கு நன்றி அப்பு!

  4. ஆக மொத்தம், ஸ்கைப்பை வழக்கம்போல் பயன்படுத்துவதால் இந்த நச்சுநிரல் வராதில்லையா? ஸ்கைப்பில் ஏதாவது ஒரு சுட்டியைச் சொடுக்கினால்தானே வரும்?