22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது

LG நிறுவனம் சமீபத்தில் தனது முதன்மை (Flagship) மொபைலாக LG G2 மொபைலை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க மொபைல் ஆப்பரேடரான Sprint நிறுவனம் அடுத்த மாதம் இதனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது.

இந்நிலையில் Louisville நகரத்தில் இருக்கும் Sprint நிறுவனத்திற்காக 22,500 மொபைல்களை ஏற்றிக் கொண்டு ட்ரக் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சிறுநீர் கழிப்பதற்காக வண்டியைவிட்டு ட்ரைவர் இறங்கிச் சென்றுள்ளார். திரும்ப வந்த போது வண்டியை காணவில்லை. யாரோ அதனை திருடிச்சென்றுள்ளனர்.

இந்தியானா மற்றும் லூயிஸ் நகர காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எஃப்.பி.ஐ-யிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  Privacy Policy பக்கம் உருவாக்குவது எப்படி?

6 thoughts on “22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது”

  1. அடப்பாவிங்களா இவ்ளோ பெரிய திருடங்களாம் நாட்டுல இருக்காங்களா…