ப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி

பிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள்ளது. அது HTTPS எனப்படும் பாதுகாப்பு வசதி ஆகும்.

பொதுவாக நம் இணையதள முகவரியை கொடுக்கும்போது http (Hypertext Transfer Protocol) என்று தொடங்கும். இவ்வாறு தொடங்கும் தளங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதுவே HTTPS எனத்தொடங்கும் தளங்கள் பாதுகாப்பானதாகும். https தளங்களுக்கும், பயனாளர்களுக்கும் இடையில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கும். இதனால் தான் மின்னஞ்சல்கள், வங்கித் தளங்கள் போன்ற தகவல்/பண பரிமாற்றங்கள் நடக்கும் தளங்களின் முகவரிகள் https என்று தொடங்குகிறது.

பொதுவாக SSL Certificate என சொல்லப்படும் இந்த வசதியை சில டொமைன் விற்கும் தளங்கள் கூடுதல் விலைக்கு விற்கின்றன. தற்போது இவ்வசதியை ப்ளாக்கர் தளம் இலவசமாக தருகிறது.

இவ்வசதியை பெற Blogger தளத்தில் Settings => Basic பகுதிக்கு செல்லுங்கள்.

HTTPS என்பதற்கு கீழே, HTTPS availability என்ற இடத்தில் “Yes” என்பதை தேர்வு செய்யுங்கள்.

HTTPS வசதி Process ஆகிறது என்று வரும். பிறகு உங்கள் தள முகவரியை https உடன் கொடுத்தால் வேலை செய்கிறதா? என்று பாருங்கள். உதாரணத்திற்கு https://www.bloggernanban.com

அப்படி வேலை செய்தால், அதே Settings => Basic பகுதியில் HTTPS redirect என்ற இடத்திலும் “Yes” கொடுங்கள்.

இது எதற்கென்றால், யாராவது உங்கள் http முகவரியை கொடுத்தால் தானாகவே https முகவரிக்கு மாறிவிடும்.



கவனிக்க: தற்போது https முகவரியை பயன்படுத்தினால் தமிழ்மணம் ஓட்டுபட்டை தெரிவதில் பிரச்சனை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் இவ்வசதியை தவிர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் New Post, Home, Older Post -ஐ மாற்ற

4 thoughts on “ப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி”