புகைப்படங்களை அழகாக்க ஐந்து தளங்கள்

சமூக வலைத்தளங்களின் அதிகம் செய்யப்படும் செயல்களில் ஒன்று புகைப்படங்களை பகிர்தல். பேஸ்புக் தளத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 250 மில்லியன் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இதனால் புகைப்படங்களை திருத்தம் செய்து அழகுபடுத்தும் வசதியை பல தளங்கள் தருகின்றன.

புகைப்படங்களை அழகுப்படுத்த உதவும் ஐந்து தளங்கள் பற்றி சகோ. சின்னமலை அவர்கள் இங்கு பகிர்கிறார்.


இந்த தளம் ADOBE PHOTOSHOP மூலம் இயங்குகிறது. இதில் நம்முடைய இமேஜ்
UPLOAD செய்து கொண்டு தேவையானதை மாற்றம் செய்து கொள்ளலாம். மாற்றம் செய்ததை அப்படியே SHARING செய்யலாம்.

நீங்கள் புகைப்படத்தை அப்லோட் செய்த பிறகு உங்கள் புகைப்படத்தின் முகவரி http://prntscr.com/c3zm4 என்பது போல கிடைக்கும். அதனை எடிட் செய்ய அதன் பக்கத்தில் /edit என்று சேர்த்து கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு http://prntscr.com/c3zm4/edit . தனிப்பட்ட படங்களை இதன் மூலம் பயன்படுத்த வேண்டாம்.


2. Online-Image-Editor.com

இதில் உங்கள் இமேஜ் UPLOAD செய்து கொள்ளலாம் அல்லது URL முலம்
கொடுக்கலாம். இதில் CROP செய்யலாம், ANIMATED TEXT ADD
செய்யலாம், மின்னும் நட்சத்திரங்கள் சேர்க்கலாம். இன்னும் பல வசதிகள் இருக்கிறது.

3. Aviary.com

இது மற்றதை விட அதிக அளவு FEATURES உள்ளது. நீங்களே தளதில் சென்று
பார்த்து புரிந்து கொள்ளவும். இது ANDROID மற்றும் APPLEக்கு APPLICATION
ஆக கிடைக்கிறது.

4. Fotoflexer.com

இதுவும் அனைத்தை விடவும் மிகவும் சிறந்தது. இதில் நம்முடைய
BODY அதிகம் ஆக்கி அல்லது குறைத்தும் கொள்ளலாம். நம் முகத்தில் உள்ள
சுருக்கத்தை மறைக்கலாம்.இன்னும் ஏராளம்.

இது மற்றதை போல தான் RESIZE, CROP செய்து கொள்ளலாம். இதில்
பலூன் கமெண்ட்ஸ் கொடுக்கலாம், பலவிதமான EFFECTS கொடுக்கலாம்.

சின்னமலை
About the Guest Author:
அஜித் ரசிகரான சகோ. சின்னமலை அவர்கள் தல போல வருமா? என்னும் தளத்தில் தொழில்நுட்பம் பற்றியும், சினிமா பற்றியும் குழந்தைத்தனமான பேச்சு நடையில் எழுதி வருகிறார். மேலும் Tamilan Tablet என்னும் ஆங்கில தளத்திலும் எழுதி வருகிறார். (படத்தில் இருப்பது அவர் அல்ல)

நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

இதையும் படிங்க:  ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு

12 thoughts on “புகைப்படங்களை அழகாக்க ஐந்து தளங்கள்”

  1. பயனுள்ள பதிவு பகிர்ந்த உங்களுக்கும் எழுதிய சின்னமலை அவர்களுக்கும் நன்றி

  2. நான் எழுதிய பதிவை வெளியிட்ட பிளாக்கர் நண்பன் அவர்களுக்கு மிக்க நன்றி…..நீங்க படங்களை இணைந்த பின்னர் பார்க்கவே நல்லா உள்ளது…

  3. //நீங்களே தளதில் சென்று பார்த்து புரிந்து கொள்ளவும்//
    முடியாது, நீங்களே விளக்கமாக சொல்லவும்! 😀

    என்னதான் இருந்தாலும், இவை ஆன்லைன் எடிட்டர்கள் என்பதை நினைவில் கொண்டு பெர்சனல் புகைப்படங்களை அப்லோட் செய்து எடிட் செய்வதை தவிர்த்தல் நலம் என்பது என் கருத்து நண்பரே! 🙂

  4. இதே மாதிரி.., நாம எழுதுற பதிவுகளையும் டிங்கரிங் பிங்கரிங் பன்னி கரெக்ட் பண்ணிகொடுக்குறதுக்கு ஏதாவது தளங்கள் இருந்தால் அல்லது சாப்ட்வேர் இருந்தால் உடனே பகிரவும்.., எங்களை மாதிரி ஆளுகளுக்கு ரொம்ப உதவியாக ஹி ஹி ஹி.!

    வாழ்த்துக்கள் சின்னமலை.. கலக்குங்க 🙂