பிட்.. பைட்… மெகாபைட்….! (12/09/2012)

ஐபோன் 5 அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ள அரங்கு

சமீபத்தில் தான் 200-ஆவது பதிவை எழுதியது போல இருக்கிறது, அதற்குள் 250-ஆவது பதிவு வந்துவிட்டது. இந்த பதிவிற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான (???) செய்தியை இறுதியில் கூறுகிறேன். தலைப்பை பார்த்தவுடன் அதிகமானவர்கள் இது எதைப் பற்றியது? என்று ஓரளவு கணித்திருப்பீர்கள். ஆம்… அது தான்… அதே தான்!

250-ஆவது பதிவை முன்னிட்டு இனி வாராவாரம் இணையச் செய்திகளை சுருக்கமாக பகிரலாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதற்கான தலைப்பு தான் பிட்..(Bit) பைட்…(Byte) மெகா பைட்….(MegaByte)!


ஆப்பிள் ஐபோன் ஐந்து (iPhone 5):

ஆப்பிள்  நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று ஐபோனின் புதிய பதிப்பாக iPhone 5-யை அறிமுகப்படுத்தவுள்ளது. பல்வேறு மாற்றங்களுடன், புதிய வசதிகள் பலவும் வரலாம் என தெரிகிறது. மேலும் iOS இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான iOS 6-ஐயும் வெளியிடவுள்ளது.

பழிக்கு பழி?

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் சாதனங்களை காப்பி அடித்ததற்காக 5800 கோடி ரூபாய் அபராதம் பெற்றது. இந்நிலையில் இன்று வெளியாகவிருக்கும் ஐபோனில் 4G LTE (Long Term Evolution) என்னும் அதிவேக தொழில்நுட்பம் பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த LTE தொழில்நுட்பத்திற்கு சாம்சங் நிறுவனம் காப்புரிமை (Patent) வைத்துள்ளது. இதனால் ஆப்பிள் மீது வழக்கு தொடுக்க தயாராகி வருகிறது சாம்சங் நிறுவனம்.

ஐபோனுக்கான  புதிய யூட்யூப் அப்ளிகேசன்:

ஐபோனின் முதல் பதிப்பிலிருந்து ஆப்பிளே உருவாக்கிய “யூட்யூப் அப்ளிகேசன்” இருந்து வந்தது. iOS ஆறிலிருந்து அதனை நீக்கப்போவதாக முன்பே ஆப்பிள் நிறுவனம் அறிவித்துவிட்டது. இந்நிலையில் ஐபோன் மற்றும் ஐபோட் டச் சாதனங்களுக்காக பிரத்யேக யூட்யூப் அப்ளிகேசனை யூட்யூப் அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடியோக்களில் விளம்பரம் காட்டுவதற்கான வாய்ப்பையும் கூகுள் பெற்றுள்ளது. இது கூகுள் நிறுவனத்துக்கு சாதகமாகவே அமையும் என நினைக்கிறேன்.

ஐபோன்களுக்கான யூட்யூப் அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

GoDaddy தளத்தை ஹேக் செய்தார்களா அனானிமஸ் ஹேக்கர்ஸ்?

வெப்  ஹோஸ்டிங் வசதியை தரும் GoDaddy தளம் கடந்த திங்கள் அன்று சில மணி நேரங்கள் முடங்கியது. இதனால் GoDaddy தளத்தின் வெப் ஹோஸ்டிங் வசதியையும், டொமைன் வசதியையும் பயன்படுத்திய மில்லியன் கணக்கான தளங்கள் முடங்கியது. இதில் ப்ளாக்கர் மூலம் GoDaddy டொமைன் வாங்கப்பட்ட பல தளங்களும் அடங்கும்.

இதை நாங்கள் தான் ஹேக் செய்தோம் என்று அனானிமஸ் குழு பெயரில் ட்விட்டரில் செய்தி வந்தது. அந்த ட்விட்டரில் சொல்லப்பட்டது, “இணைய பாதுகாப்பு வசதி பாதுகாப்பாக உள்ளதா? என்பதை சோதிப்பதற்காகவும், மேலும் சில காரணங்களுக்காகவும் ஹேக் செய்தோம்.””

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (03/04/2013)

ஆனால், தங்கள் தளம் முடங்கியதற்கு உள்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்றும், ஹேக் செய்யப்படவில்லை என்றும் அறிவித்துள்ளது GoDaddy தளம்.

இந்த வார வீடியோ (விளம்பரம்):

எந்த இணையப் பக்கத்தையும் கூகிள் க்ரோம் உலவியில் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்கான கூகுள் உருவாக்கிய நீட்சி (Extension). ஸ்க்ரீன்ஷாட் மட்டுமின்றி அதனை எடிட் செய்யும் வசதியும் உள்ளது.

Log out!

250-ஆவது பதிவு (Behind the Post):
250-ஆவது பதிவாக காத்திரமான பதிவு எழுத வேண்டும் என்று ஒரு வார காலமாக யோசித்து, “பேஸ்புக்கில் பறிபோகும் ப்ரைவசி” என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இது குறித்து நண்பர்கள் பலரிடம் “ட்ரைலர்” எல்லாம் காட்டி தொல்லை செய்தேன். ஆனால் சிந்தனை வறட்சியின் காரணத்தால் அந்த பதிவு “ட்ராப்” ஆகிவிட்டது.
இந்த “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதி பற்றிய தங்கள் எண்ணங்களை அவசியம் பதிவு செய்யவும்!

தொடர்பில்லாத பதிவு: வேட்டையாடு… விளையாடு… (பார்ட் 2)

26 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (12/09/2012)”

  1. என்ன வேகம்… என்ன வேகம்…. இதே வேகத்தில் 300 வரட்டும்…. அப்புறம் 500 ….அப்புறம் 1000 அப்டீன்னு போய்கிட்டே இருக்கட்டும்!

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ!

    BTW, ஸ்பெஷல் மீல்ஸ் அருமை! 🙂 🙂 🙂

  2. உங்கள் பதிவுகள் அருமை…….வாழ்த்துக்கள்..

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  3. வாழ்த்துக்கு நன்றி நண்பா!

    ரொம்ப மாதமா அது ரெண்டுலேயே தான் இருக்குது. மாற மாட்டேங்குது!

    😀

    @வரலாற்று சுவடுகள்

    ஹிஹிஹிஹி….

  4. நீங்கள் எழுதுவது எதுவானாலும் அது பயனுள்ளதாகத்தான் இருக்கும்.

    இனியும் எழுதுங்கள்.

    கூகிள் பேஜ் ரேங்க் 2! பெரிய சாதனை.

    வாழ்த்துகள்.

  5. //LTE (Long Term Evolution) என்னும் அதிவேக தொழில்நுட்பத்திற்கு சாம்சங் நிறுவனம் காப்புரிமை (Patent) வைத்துள்ளது. இதனால் ஆப்பிள் மீது வழக்கு தொடுக்க தயாராகி வருகிறது சாம்சங் நிறுவனம்//

    கொஞ்சம் உஷாராக இருங்க பாஸ்! உங்க பதிவின் வேகத்தைப் பார்த்து உங்க மேலயும் சாம்சங் கேஸ் போட்டாலும் போடுவாய்ங்க சூதானமா இருங்க அப்பு.

    250-வது பதிவு விரைவில் 500-வது பதிப்பாக வாழ்த்துகள்.

  6. இருநூற்று ஐம்பதிற்கு வாழ்த்துக்கள் தல

    //பிட்.. பைட்… மெகாபைட்….!// கலக்குங்கள் தலைப்பே அருமை … நான் எல்லாம் டேச்னிகள் நியூஸ் படிச்சி ரொம்ப காலம் ஆகுது… என் போன்ற அப்பாவி இளைங்கர்களுக்கு வழிகாட்டும் பதிவுகள் தல …. நான் சீரியஸா சொல்றேன்…சிரிக்க கூடாது ஆமா

    //தொடர்பில்லாத பதிவு:// ஹி ஹி ஹி

  7. 250 வது பதிவிற்கு வாழ்த்துகள்..

    \பிட்.. பைட்… மெகாபைட்….! \
    வாராவாரம் இப்படி ஏதாச்சும் பிட்டு பிட்டா போடுங்க!