கூகுள் தேடுபொறியின் அடுத்த பரிணாமம்

 எத்தனை தேடுபொறிகள் வந்தாலும் முதலிடத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்வது கூகுள் தளம். அதற்கு காரணம் தனது தேடல் முடிவுகளில் புதுப்புது நுட்பங்களை அறிமுகப்படுத்துவது தான். தேடல் முடிவுகளில் பதிவுகளை தனித்துக் காட்டும் Rich Snippets மூலம் அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளது கூகுள் தளம்.

Snippets:

நாம் தேடுபொறியில் ஏதாவது ஒன்றை தேடும் போது அது தொடர்புடைய முடிவுகள் வரும் அல்லவா? அப்படி வரும் பதிவின் கீழே உள்ள விளக்கம் (Description) தான் Snippets எனப்படும்.

Rich Snippets:

Recipes Snippet

கடந்த 2009-ஆம் ஆண்டு தேடல் முடிவுகளில் Rich Snippets என்னும் முறையைக் கொண்டு வந்தது கூகுள். பதிவின் உள்ளடக்கத்தை தேடுபவர்களுக்கு முன்னிலைப்படுத்திக் காட்டுவது தான் Rich Snippets ஆகும். மேலே உள்ள படத்தில் உள்ளது “சிக்கன் பிரியாணி”   பற்றிய  கூகுள் தேடலில் வந்த சமையல்(???)  முடிவாகும். அதில் “பிரியாணியின் படம், சமையல் செய்ய ஆகும் நேரம், உணவில் உள்ள கலோரி” ஆகியவற்றை முன்னிலைப்படுத்திக் காட்டுகிறது. இது Recipes Snippet ஆகும்.

எப்படி சமைப்பது? கூகிளில் தேடலாம்! என்ற பதிவில் பார்த்ததும் இந்த Recipes Rich Snippets முறை தான்.

Rich Snippets வகைகள்:

Rich Snippets முறையில் கீழ்வரும் பதிவுகளை கூகுள் எடுத்துக் கொள்கிறது.

  • Reviews
  • People
  • Products
  • Businesses and organizations
  • Recipes
  • Events
  • Music
  • Video
  • Application

நம்முடைய பதிவுகள் இது போன்ற Rich Snippets முறையில் தானாக வராது. அதற்காக சில நிரல்களை சேர்க்க வேண்டும். இதற்கென்று சில நிரல் முறைகள் உள்ளன. அவைகள்,

இதனால் என்ன பயன்?

கூகிளில் நமது முடிவுகள் வரும் போது இது போல் தனித்து தெரிந்தால் அதிக நபர்கள் அதனை க்ளிக் செய்வார்கள். இதனால் தேடுபொறிகள் மூலம் அதிக வாசகர்கள் கிடைப்பார்கள்.

இந்த  முறை Google.com முகவரியில் மட்டுமே வரும். மற்ற கூகுள் முகவரிகளில் வராது.

இறைவன் நாடினால், இந்த Rich Snippets-ஐ நமது பதிவில் எப்படி சேர்ப்பது? என்பது பற்றி அடுத்தடுத்து பார்ப்போம்.

அதுவரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொண்டு உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் சமைத்து அசத்துங்கள்!!!

இதையும் படிங்க:  கூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்

14 thoughts on “கூகுள் தேடுபொறியின் அடுத்த பரிணாமம்”

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //அதுவரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொண்டு உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் சமைத்து அசத்துங்கள்!!!//

    ஆமா பாஸ்..நீங்க செய்த பிரியாணிய செய்தா நண்பர்களையும், உறவினர்களையும் தான் சமைக்கணும். நல்லா கிளப்புறாங்கையா பீதிய..:)

  2. இன்றைய தத்துவம்,

    சிக்கன் பிரியாணியில மட்டன் பீஸ் தேடுனா இருக்காது,

    மட்டன் பிரியாணியில சிக்கன் பீஸ் தேடுனா இருக்காது,

    அப்துல் பாஸித் சொல்றபடி பிரியாணி செஞ்சா பிரியாணியே இருக்காது (காலி ஆகிடும்னு லாம் காமெடி பண்ணக்கூடாது)

  3. புது தொழில் நுட்பத்தை தேடி அதை படித்து அதை மற்றவர்களுக்கு தெரியபடுத்தனும்கிற உங்க நல்ல எண்ணத்த பாராட்டுறேன்.உண்மையிலேயே உபயோகமான தகவல் தான் (நான் Rich Snippets பத்தி சொன்னேன்).

    சிக்கன் பிரியாணி செய்வது எப்படினு போட்ட பதிவ நிறைய பேர் பாத்திருக்காங்கனு பெருமை பட்டுக்காதீங்க, இப்படிலாம் கூட பதிவ தேத்தலாமானு நக்கல் உடுறதுக்காக கூட பாத்துறக்கலாம். 🙂

    ஒரு தொழில் நுட்பத்துக்கு தேவப்படுற பதிவு சிறந்த பதிவாயிருக்கனும்னு அவசியம் இல்ல, ஆனா குறைந்த பட்சம் மொக்கை இல்லாது இருக்கனும்ங்கிறது அவசியம். :))

    ஈமு கோழி வளர்ப்பது எப்படி, சிக்கன் பிரியாணி செய்வது எப்படினு போஸ்ட போட்டுட்டு, எப்படி வளர்ப்பது/செய்வது அப்படிங்கிறத சொல்லாமயே பதிவ தேத்தறதுக்கும் ஒரு தகிரியம் வேணும் பாஸ்.

    //அதுவரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொண்டு உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் சமைத்து அசத்துங்கள்!!//

    என்னங்க கொலை கேசில உள்ள போக வச்சிருவீங்க போல. கோழி, ஆடு சமைக்கிறது போயி இப்ப உறவினர்களையும் சமைச்சா போலீஸ் பிடிச்சிறாது 🙂

  4. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோவிற்க்கு தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    தொடர்ந்து பதிவிடுங்கள் பயனடைகிறோம்..

    தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளேன் பார்க்கவும்..
    வஸ்ஸலாம்..

  5. நன்றி நண்பரே. இன்று Snippet பற்றி அறிந்து கொண்டேன். மேலும் அறிய ஆவலாக உள்ளேன்