கூகுள் சேவைகளுக்கு மூடுவிழா

தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது “Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

Google Talk Chatback:

இது வலைத்தளங்களில் Google Chat Widget-ஐ வைக்கும் வசதியாகும். இதன் மூலம் இணையதள உரிமையாளர்கள் தங்கள் வாசகர்களுடன் கூகுள் சாட்டில் உரையாடலாம். இந்த ப்ளாக்கை தொடங்கிய சில மாதங்களில் இந்த வசதி பற்றி பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் எழுதவில்லை. தற்போது இந்த வசதியை கூகுள் நிறுத்தப்போகிறது. இதற்கு பதிலாக கூகுள் சமீபத்தில் கையகப்படுத்திய MeeboBar-ஐ பயன்படுத்த பரிந்துரை செய்கிறது. இறைவன் நாடினால் இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.

iGoogle:

iGoogle என்பது கூகுள் முகப்பு பக்கத்தை நமக்கு பிடித்தவாறு மாற்றிக் கொள்ளும் வசதி.  இதில் பல்வேறு Gadget-களை வைத்துக் கொள்ளலாம். இந்த வசதியை அடுத்த வருடம் (2013) நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நிறுத்தப்போகிறது.


Google Video:

கூகுள் நிறுவனம் யூட்யூப் நிறுவனத்தை 2006-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அதற்கு முன் கூகுள் வீடியோ என்ற பெயரில் வீடியோ சேவை இருந்தது. 2009-ஆம் ஆண்டிலிருந்து கூகுள் வீடியோ தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை நிறுத்திய கூகுள், வரும் ஆகஸ்ட் 20 முதல் அங்குள்ள அனைத்து வீடியோக்களையும் யூட்யூப் தளத்திற்கு மாற்றப்போகிறது.

Symbian Search App:

சிம்பியன் இயங்குதள மொபைல்களுக்கு இருந்து வந்த Google Search அப்ளிகேசனையும் நிறுத்தப் போகிறது. அதற்கு பதிலாக மொபைல் உலவியில் கூகுள் தளத்தை முகப்பு பக்கமாக வைக்க சொல்கிறது.

மேலும் கூகிள் மினி (Google Mini) என்னும் தேடுதலுக்கான வன்பொருள் சாதனத்தையும் இம்மாதம் 31-ஆம் தேதி நிறுத்தப் போகிறது.

டிஸ்கி: கூகிளும் என்னை போலத் தான் என்று நினைக்கிறேன். நான் எப்படி பல ப்ளாக்ஸ் தொடங்கி பிறகு சிலவற்றை நீக்கிவிடுகிறேனோ, அதே போல கூகிளும் செய்கிறது.

இதையும் படிங்க:  உங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

21 thoughts on “கூகுள் சேவைகளுக்கு மூடுவிழா”

  1. கூகிள்காரன் என்ன தான் நினைத்து கொண்டு உள்ளனர் முதலில் எல்லாத்தையும் தொடங்கி விட்டு எங்களால் சமாளிக்கக் முடியலை என்று ஒன்னு ஒன்னா மூடிகிட்டு வருகின்றனர் போற போக்கில் கூகிள் முடி விட்டு GOOGLE BYE BYE என சொல்ல போறானுங்க

    டிஸ்கி:-உங்களை பார்த்து தான் கூகிள் இதை போல் மூடு விழா நடத்துறான் போல எதோ ஒரு FUNCTION நடக்கனும் அதுக்கு எதையாவது முடுறான்….. என்னைக்கு ஆன்ட்ராய்டுக்கு மூடு விழா(சும்மா)

  2. //டிஸ்கி: கூகிளும் என்னை போலத் தான் என்று நினைக்கிறேன். நான் எப்படி பல ப்ளாக்ஸ் தொடங்கி பிறகு சிலவற்றை நீக்கிவிடுகிறேனோ, அதே போல கூகிளும் செய்கிறது.//

    ஹா..ஹா..ஹா…

  3. தலைப்பை படித்ததும் பயந்துவிட்டேன்…இப்படிலாமா தலைப்ப போடுறது பாஸ். …..உங்கள் கட்டுரை பயனுள்ளதாக உள்ளது……

    என் தளத்திற்கும் வாங்க,உறுபினராகுங்கள்….உங்கள் கருத்தை மறக்காமல் சொல்லுங்கள்…..

    புதிய வரவு:7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery)

  4. நண்பா நானும் தலைப்பை பார்த்தவுடன் பயந்துட்டேன்..நண்பா…புதிய தகவலுக்கு நன்றி நண்பா..

  5. வணக்கம்! முதலில் உங்களது பணிக்கு நன்றி! நான் இணைய உலகிற்குப் புதியவன். பிளாக் தொடங்கும் முயற்சியில் இறங்கினேன். இதுவரை எல்லாம் சரியாகவே இருக்கிறது. ஆனால்,ஒரு சந்தேகம் தீர்க்கவும். பிளாக் தொடங்கியாகிவிட்டது. http://www.blogger. create your free blog -போய், அதில் email, password அடித்தால் டாஷ்போர்டு வருகிறது. அதில் வலைப்பதிவை காண்க- போனால் பிளாக் வருகிறது. இப்படித்தான் பிளாக்கிற்குள் நுழைய முடியுமா? blogspot முகவரி வராதா? blogspot எங்கே இருக்கும்.? அதை எங்கே போய்
    அடித்தால் பிளாக்கிற்குள் போகமுடியும்? அதாவது ந்ண்பர்களிடம் எப்படிச்
    சொன்னால் எனது பிளாக்கைப் பார்ப்பார்கள்? விளக்கவும். காத்திருக்கிறேன்.

  6. //வலைப்பதிவை காண்க- போனால் பிளாக் வருகிறது.//

    மேலே Address Bar-ல் பார்த்தால் உங்கள் ப்ளாக் முகவரி இருக்கும். முடியும் போது .com என்பது நீங்கள் இருக்கும் நாட்டைப் பொறுத்து வேறுபடும்.

    உதாரணத்திற்கு,

    http://blogname.blogspot.com

    http://blogname.blogspot.in

    http://blogname.blogspot.fr

  7. நல்ல தகவல்…

    சரிவராத சேவைகளைத் தொடர்ந்து கொண்டு கஷ்டப்படுவதற்கு மூடிவிடுவது எவ்வளவோ மேல் தானே??