இனி அனைவருக்கும் புது ப்ளாக்கர்

ப்ளாக்கர் தளம் புதிய வடிவில் மாறியிருப்பதை அனைவரும் அறிவீர்கள். இருந்தாலும் பழைய தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதியை ப்ளாக்கர் தளம் இதுவரை தந்திருந்தது. ஆனால் இன்னும் சில வாரங்களில் அனைவருக்கும் புது தளத்தையே தரவுள்ளது ப்ளாக்கர். அதன்பின் பழைய தோற்றத்தை யாரும் பயன்படுத்த முடியாது.

நீங்கள் பழைய தோற்றத்தை பயன்படுத்திவந்தால் உங்கள் டாஷ்போர்ட் பக்கத்தில் பின்வருமாறு காட்டும்.

அதில் Upgrade Now என்பதை க்ளிக் செய்து புதிய தோற்றத்தைப் பயன்படுத்தி பார்க்கலாம். அதை க்ளிக் செய்யாமல் இருந்தாலும் சில வாரங்களில் உங்கள் டாஷ்போர்ட் புதிய தோற்றத்திற்கு தானாக மாறிவிடும்.

புதிதாக சேர்க்கப்பட்ட Word Verification பகுதி:

Word Verification பகுதி முன்பு பழைய டாஷ்போர்டில் மட்டும் தான் இருந்தது. தற்போது புதிய தோற்றத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. Dashboard => Posts and Comments பகுதியில் உள்ளது.

உங்களுக்கு புதிய தோற்றத்தில் குழப்பம், சந்தேகம் இருந்தால் ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடரை பார்க்கவும். புதிய தோற்றத்தைப் பற்றி ஓரளவு பகிர்ந்துள்ளேன்.

*********************************************************************************

கூகிளின் ஆழ்கடல் தேடல்:

ஏப்ரல் ஒன்றிற்காக கூகிள் சீனா ஆழ்கடல் தேடுதலுக்கான ஒரு தளத்தை உருவாக்கியது. அந்த தளத்திற்கு சென்று ஏதாவதை தேடி பாருங்கள். அங்கு இருக்கும் இரண்டாவது பட்டனையும், பிறகு தண்ணீர் பகுதியிலும் க்ளிக் செய்து பாருங்கள். வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும். அந்த தளத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-5]

18 thoughts on “இனி அனைவருக்கும் புது ப்ளாக்கர்”

  1. பழைய இடைமுகத்தில் தானே பல வசதிகள் உள்ளன இனி அதை பயன்படுத்த முடியாதா ??

  2. மாப்ள இந்த புதிய மாற்றத்துக்கு நான் இன்னும் மாறல…இதில் இந்த HTML மற்றும் preview பார்ப்பது சிரமம்னு நெனக்கிறேன்..முடிந்தால் இதை விளக்கி பதிவிடுங்கள்!

  3. சார் எனது ப்ளாக் adsence disapproved என்றே வருகிறது approve செய்ய வைக்க என்ன செய்வது ?