ஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம்

சுமார்  63 மொழிகளில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்ய உதவும் Google Translate பற்றி ஏற்கனவே தமிழாக்கம் செய்ய கூகிளின் புது வசதி என்னும்  பதிவில் பார்த்தோம். அந்த பதிவு ப்ளாக்கர் நண்பன் தளத்தின் பிரபலப் பதிவுகளில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆப்பிள் ஐபோன்களிலும் தமிழாக்கம் செய்யும் வசதியை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிள்  ஐபோன்களுக்கான Google Translate Application-ஐ கடந்த பிப்ரவரி மாதம் கூகிள் அறிமுகப்படுத்தியது. அப்போதே ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளை மொழிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த பட்டியலில் தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளை இணைத்துள்ளது.

ஒரு வார்த்தையை மொழிமாற்றம் செய்தால் அதனுடைய அகராதியையும் காட்டுகிறது. மேலும் மொழிமாற்றம் செய்த வார்த்தைகளை ஆடியோவாக கேட்கும் வசதியும் உள்ளது. ஆனால் இந்த இரண்டு வசதிகளும் குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டும் தான். மேலே உள்ள படத்தை பார்க்கும் போது தமிழ் மொழிக்கு இந்த வசதிகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதிலும் தமிழ் உள்பட சில மொழிகள் சோதனை முறையில் தான் உள்ளது. அதனால் தமிழாக்கம் செய்யும் போது பிழைகள் அதிகம் வரலாம்.

ஐபோன், ஐபோட் டச் (iPod touch), ஐபேட் (iPad)  ஆகியவற்றில் இதனை பயன்படுத்தலாம். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.


படங்கள்: கூகிள் மொபைல் மற்றும் ஆப்பிள்

ஐபோன் கூத்து:
அமெரிக்காவில் அவசர உதவிக்காக பயன்படும் 911 சேவைக்கு ஒருவர் ஐந்து முறை தொடர்புக்கொண்டு “தனது ஐபோன் வேலை செய்யவில்லை”  என்று புகார் அளித்துள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பட உதவி: http://iphone911.webs.com/

இந்தியாவில் ஐபோன் 4S:



ஆப்பிள் ஐபோனின் புதிய பதிப்பான ஐபோன் 4S இந்தியாவில் இம்மாதம் 25-ஆம் தேதி ஏர்செல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மூலம் அறிமுகமாகிறது. இந்தியாவில் இதன் விலை 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட உதவி: Aircel Facebook Page
இதையும் படிங்க:  பேஸ்புக்கில் பிடிக்காத செய்திகளை ஓரங்கட்டலாம்

9 thoughts on “ஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம்”

  1. சூப்பர் தகவல் எப்போ நம்ம நாட்டுக்கு வரும் என பார்த்துகொண்டு இருந்தேன் உங்கள் முலம் தெரிந்து கொண்டேன் தகவலுக்கு நன்றி அண்ணா…

  2. கைபேசி பிரியர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவல். தமிழ் ஆர்வளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல். நன்றி நண்பரே!