கூகுள் தளம் அவ்வப்போது அன்றைய தினங்களுக்கு ஏற்ப தனது முகப்பு பக்கத்தை சிறப்பு டூடுல்களால் (Doodle) அலங்கரித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். அதே போல இன்று ஸ்டார் ட்ரெக் (Star Trek) தொலைக்காட்சி தொடரின் 46-ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி அனிமேசன் டூடுலை வைத்துள்ளது.
ஸ்டார் ட்ரெக்:
ஸ்டார் ட்ரெக் என்பது அமெரிக்க தொலைக்காட்சியில் 1966-ஆம் ஆண்டு வெளிவந்த அறிவியல் தொடர் ஆகும். அமெரிக்காவில் மிகப்பிரபலமான இந்த தொடர் 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி தொடங்கியது. 46 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று டூடுல் வெளியிட்டுள்ளது.
இது ஆடியோவுடன் கூடிய அனிமேசன் டூடுல் ஆகும். இது பற்றி நான் பதிவு செய்த வீடியோ:
யூட்யூப் வருமானம்:
சமீபமாக நான் வீடியோ பதிவுகள் அதிகம் பதிவு செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணம் சகோ. பிரபு கிருஷ்ணா அவர்களின் Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற பதிவு தான்.
தற்போது என்னுடைய “The Spider Tech” யூட்யூப் சேனலுக்கு ஆட்சென்ஸ் விளம்பரம் கிடைத்துள்ளது. மேலுள்ள வீடியோவைப் பார்த்தால் அதில் விளம்பரம் வருவதை காணலாம்.
நீங்களும் உங்களுக்கென்று தனி சேனலைஉருவாக்கி வருமானம் ஈட்டலாம். அதற்கு கொஞ்சம் சிரமப்பட வேண்டும்.
திரையில் தெரிவதை வீடியோ ரெகார்டிங் செய்ய: உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம்
நிறைய வீடியோக்களை சேர்த்து, நிறைய views, Subscribers பெற்று Youtube Partner ஆக வாழ்த்துகள். :-)))
வாழ்த்துக்கள் … (தகவலுக்கு நன்றி)
இங்கே ரெண்டு இடத்தில் உங்கள் தளம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது அதற்குரிய விளம்பர தொகையை மறக்காமல் சகோதரர் பாஸித் அக்கௌன்ட்டில்… அது என்ன பால் ஆங்.. பேய்பால் மூலம் போட்டுவிடவும்! 😀
காசோலையாக செலுத்த விரும்பினால் 'வரலாற்று சுவடுகள்' ப்ளாக் ஓனரை அணுகவும்! 🙂
புதுமையான தகவல் நன்றி.
அருமையான பகிர்வு
பதிவாக்கி தந்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள் தொடருங்க
இன்று என் தளத்தில்
''நேற்று போட்டது தான்"
நான் காசை ஓலை மூலம் பெற விரும்புகிறேன்.. என்ன செய்யணும்? 😀
ஏனோ டூடில்களின் (Doodle) ஒலி எனது கணிணியில் கேட்கவில்லை.. உங்கள் வீடியோ மூலம் ரசித்தேன்.
நன்றி!
This comment has been removed by the author.
congrats basith…
அப்பிடின்னா முதல்ல தென்னந்தோப்புக்கு தான் போகணும்
@ ஹாரி
மச்சி நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை! 🙂 🙂
வாழ்த்துக்கள் நண்பா….
தகவலுக்கு நன்றி !!
@ வரலாற்று சுவடுகள் நீங்களும் தான்…
@ ஹாரி தென்னந்தோப்புக்கு போனா பனை ஓலை கிடைக்குமா? (நாங்களும் போடுவோம்ல!!)
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் நடக்குது போல, நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்.
🙂 🙂 🙂
நன்றி நண்பா!
தங்களுடைய பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். நன்றி!
மிக்க மகிழ்ச்சி நண்பா!
Thank you friend!
@ ஹாரி..,
@ ஆளுங்க அருண்
நாம மூணு பேருமே இங்க இருக்க வேண்டிய ஆட்கள் கிடையாது அதுனால..வாங்க மூணு பேரும் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துகிட்டு செவ்வாய்-க்கு போயிருவோம்!
பெட்ரோல் செலவை சகோ. பாஸித்திடம் வாங்கிக்கொள்வோம்! உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்.. சகோ. பாஸித் செவ்வாயில் இருந்துதான் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகிறார்! 🙂
@ வரலாற்று சுவடுகள்
//சகோ. பாஸித் செவ்வாயில் இருந்துதான் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகிறார்//
அப்படியா நான் ஏதோ உயிர்கோளம் 3 றை உங்களோடு சேர்ந்து உருவாக்கி அதில் இருந்து தான் அப்டேட் பண்ணுகிறார் என்றல்லவா நினைத்தேன்
@ ஆளுங்க அருண்
இல்லை நண்பா தென்னை கெப்லர் குடும்பத்திலிருந்து 3000 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதால் இப்போது வாழை ஓலை மட்டுமே வருகிரதாம்
அப்புறம்செவ்வாய் போயிட்டு ஒரு வீடியோ எடுத்து அனுப்புங்க. பிளாக்கர் நண்பன்ல போட்டுடலாம். 🙂
தமிழ்மணம் டாப் 10-இல் நுழைந்ததிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙂
@ blade
நீங்களும் சீக்கிரத்தில் நுழைந்துவிடுவீர்கள் நண்பரே.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! 🙂
@ abdul
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா.. எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம் தான். 🙂
@வரலாற்று சுவடுகள்
நீங்களும் சீக்கிரத்தில் நுழைந்துவிடுவீர்கள் .. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணே! 🙂