விகடன் தந்த அங்கீகாரம் – குட் ப்ளாக்

 நாம் எழுதும் பதிவுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படும். அதனால் நல்ல பதிவுகளை அதிகம் எழுத வேண்டும் என்ற ஊக்கமும் ஏற்படும். அதுவும் அந்த அங்கீகாரம் ஒரு பெரிய மீடியாவிடமிருந்து கிடைத்தால்…? அப்படி தான் இருந்தது எனக்கும், விகடன் தளத்தில் இருந்து அங்கீகாரம் கிடைத்த போது…!

விகடன் தளத்தில்
யூத்ஃபுல் விகடன் என்ற பகுதி இருப்பது அதிகம்பேருக்கு தெரியும். இளைய சமுதாயத்தவர்களுக்காக பல்வேறு பகுதிகளுடன் வலம் வரும் அந்த தளத்தில் நல்ல பதிவுகளை ஊக்கப்படுத்தும் விதமாக “குட் ப்ளாக்ஸ்” என்றொரு பகுதியும் உள்ளது. அந்த பகுதியில் சமீபத்தில் ப்ளாக்கர் நண்பனில் பகிர்ந்த தமிழ் என்ற பதிவு தற்போது இடம்பெற்றுள்ளது. மிகப்பெரிய ஒரு தளத்தில் எனது பதிவு இடம்பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் விகடன் குழுமத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சின்ன கொசுவர்த்தி (Flashback):

2010-ஆம் ஆண்டே யூத்ஃபுல் விகடன் பற்றி தெரிந்துக் கொண்டதால் அப்போது அவர்களுக்கு ப்ளாக்கர் நண்பன் தளத்தை சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தேன். ப்ளாக் தொடங்கி ஒரு சில மாதங்களே ஆனதால் அப்போது என் பதிவுகள் இடம்பெறவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு எனது பதிவு இடம்பெற்றதில் ரொம்ப சந்தோசமாக உள்ளது.

“தமிழ்” பதிவைப் பற்றி:

தமிழ் என்னும் பதிவில் நான் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று “தமிழ்” என்னும் தலைப்பில் பதிவிட்ட சகோ. பிரபு கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி! மேலும் அது போன்ற பதிவுகளை ப்ளாக்கர் நண்பன் தளத்தில் தனி பக்கத்தில் பகிர முடிவெடுத்துள்ளேன். நண்பர்கள் அந்த பக்கத்தில் தாங்கள் எழுதிய பதிவை குறிப்பிட்டால் அதனையும் சேர்க்க முயற்ச்சிக்கிறேன்.

அந்த பக்கம்: தமிழ் பதிவுகள்

இதையும் படிங்க:  TechMinar.com - கடலில் ஒரு துளி

45 thoughts on “விகடன் தந்த அங்கீகாரம் – குட் ப்ளாக்”

  1. மனப்பூர்வமான பாராட்டுக்குத் தகுதி உடையவர் நீங்கள்.
    விகடனுக்கு முன்பே நாங்கள் உங்களை அங்கீகரித்திருக்கிறோம்.
    எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.

  2. சலாம் சகோ…வாழ்த்துக்கள்.குடிகெடுக்கும் டாஸ்மாக்- அரசுக்கு சில யோசனைகள்….என்ற என் பதிவும் அதில் இடம்பெற்றிருந்தது. குட் பிளாக்கில் நம் பதிவு இடம்பெற நாம் ஏதுமே செய்ய தெவையில்லை. நன்றாக எழுதினாலே போதும். அவர்களே தொகுத்துக்கொள்வார்கள்.

  3. வாழ்த்துக்கள் நண்பரே!இன்னும் பல உயரங்கள் உங்களுக்கு காத்துக்கிடக்கின்றன, இது எனக்கு நன்றாகவே தெரிகிறது. கூகுள் தேடலில் எந்தவொரு தமிழ் வார்த்தையை இட்டு தேடினாலும், அதற்கு புனிதமான தமிழ் வார்த்தைகளையே முதன்மையாக கொண்டு வருவதே.. இனிமேல் எனது வலைப்பதிவு லட்சியமாக கொள்கிறேன்! தங்களது சேவை தொடரட்டும்!

  4. வாழ்த்துக்கள். குட் ப்ளாக் என்று சொல்வதற்கான எல்லா தகுதியும் உங்கள் ப்ளாக்கிற்கு உண்டு

    நீங்கள் ப்ளாக் தொடங்குவது எப்படி என்பதை பற்றி இடும் பதிவுகளை படித்து தான் நான் என்னுடைய ப்ளாக்கை ஆராம்பித்தேன்.
    இப்போதும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் ப்ளாக்கை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

    மேன்மேலும் பணிகள் தொடரட்டும்

  5. அனைத்தும் மிகவும் பயனுள்ள பதிவுகள்
    குட்ப்ளாக்ஸ் பகுதியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

  6. வாழ்த்துக்கள் நண்பா..மேலும் சிறப்பான பதிவுகளை தந்து உங்கள் வலையுலகப்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் …நண்பா..

  7. உண்மைதான் சகோ. நம் பதிவுகளுக்கு இப்படி ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். நானும் இதை அனுபவித்திருக்கிறேன். நான் பதிவெழுத வந்து இரண்டு மாதத்தில் கடந்த 14.12.2011 அன்று இதே அங்கீகாரத்தை விகடன் எனக்கு தந்தது. நண்பர் ஒருவர் படித்து விட்டு மெசேஜ் அனுப்பிய பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அப்பப்பா என்ன சந்தோஷம். அலுவலகத்தில் ஒரே பாராட்டு மழைதான் போங்க. உங்க பதிவு அந்த நினைவுகளை மீண்டும் எழுப்பியது. நன்றி! மேலும் பல வெற்றிகளை குவிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

  8. நல்ல தளங்களுக்கு அங்கீகாரம் தானே வரும். இன்னும் பல விருதுகள் தங்களுக்கு கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மேன்மேலும் பல முத்திரைகளைப் பதிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  9. மிகவும் நல்ல செய்தியை எங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
    மிகவும் சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள் சகோ///

  10. நண்பர்களின் கருத்துக்களுக்கு REPLY அனுப்ப முடியவில்லை உங்கள் உதவி வேண்டும்.

    என்னுடைய பதிவிற்கு யாராவது, எப்போதாவது ஒரு கருத்தை தெரிவித்தால்
    அவர்களுக்கு நன்றி சொல்லக்கூட முடிவதில்லை

    இந்தப்பிரச்சினை இடையில் ஏற்பட்டதே…………