ப்ளேட்பீடியா பதிவும், ப்ளாக்கர் SEO வசதியும்

ப்ளாக்கர் நண்பன் தளத்தில் நண்பர் ப்ளேட்பீடியா கார்த்திக் அவர்கள் Search Engine Optimization (SEO) பற்றிய ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற விருந்தினர் பதிவை பகிர்ந்திருந்தார். அதனை ப்ளாக்கர் தளம் படித்ததோ, என்னமோ? அவர் சொன்ன முறையை எளிமையாக செய்வதற்கான வசதியை தற்போது அளித்துள்ளது.

நண்பர் கார்த்திக் சொன்னது:

நீங்கள் Avengers படத்தின் விமர்சனம் எழுதி, பதிவின் தலைப்பை ‘The Avengers – 2012 – Movie Review’ என வைத்தால், பதிவின் URL தலைப்பு “avengers-2012-movie-review.html” என பொருத்தமாக வந்திடும்!


நீங்கள் பதிவின் பெயரை தமிழில் வைத்தால் கூகிள் ப்ளாக்கர் – தன்னிச்சையாக ஏதாவது ஒரு முகவரியை தெரிவு செய்யும்! முகவரிகளின் தலைப்பிற்கும், உங்கள் பதிவில் உள்ள தகவலிற்கும் எந்தவொரு தொடர்பும் இன்றி “1.html”, “blog-post_19.html” என்று உபயோகமில்லாத ஒன்றாய் இருக்கும்!

இதற்கு  தீர்வாக பதிவின் தலைப்பில் ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பதிவிட்டு உடனடியாக ஆங்கில வார்த்தைகளை நீக்குமாறு சொல்லியிருந்தார்.

தற்போது ப்ளாக்கர் தளம் அவ்வாறு சிரமமில்லாமல் நமக்கு விருப்பமான பெயர் வைக்க Permalink என்னும் புது வசதியை அளித்துள்ளது.

பதிவெழுதும் பக்கத்தில் வலதுபுறம் Post Settings என்பதற்கு கீழே Permalink என்ற வசதி இருக்கும்.

Automatic URL – நம் தலைப்பை வைத்து தானாக ப்ளாக்கர் எடுத்துக் கொள்ளும்முகவரி. தமிழில் உள்ளதால் blog-post_27.html என்று முடிகிறது. (Screenshot எடுக்கும் போது SEO என்னும் வார்த்தையை சேர்க்கவில்லை)

Custom URL – நமக்கு விருப்பமானமுகவரியை கொடுக்கலாம்.

Custom URL என்பதை கிளிக் செய்து நமக்கு விருப்பமான தலைப்பை கொடுக்கலாம். இடைவெளி விடக் கூடாது. பிறகு Done என்பதை கிளிக் செய்யவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகள் என்றால் Hyphen சேர்க்கவும். இல்லையென்றால் எல்லா எழுத்துக்களும் ஒரே வார்த்தையாக தேடுபொறிகள் எடுத்துக் கொள்ளும்.

Update: இந்த வசதி ஒரு சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பலருக்கு வரவில்லை.

குறிப்பு: இது ஒரு Exclusive பதிவாகும். ப்ளாக்கர் தளமே இன்னும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. Park Android தளத்திற்காக பதிவெழுதும் போது தான் கவனித்தேன். ஹிஹிஹிஹி…

Update (18/07/2012): தற்போது இந்த வசதி அனைவருக்கும் வந்துள்ளது. இந்த வசதியை பெற நீங்கள் புதிய Dashboard-ஐ பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:  கூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]

34 thoughts on “ப்ளேட்பீடியா பதிவும், ப்ளாக்கர் SEO வசதியும்”

  1. நல்ல பயனுள்ள அப்டேட் நண்பரே!

    //அதனை ப்ளாக்கர் தளம் படித்ததோ, என்னமோ?//
    இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! 😀

    Reply
  2. கலக்குறிங்க ரெண்டாவது பதிவு வேற exclusive பதிவு அப்ப கூகிள் அறிவிக்கும் முன்பே நீங்கள் இனி அனைத்து updates சொல்லிவிடுவீர் போல….

    Reply
  3. அருமையான பதிவு நண்பா.,

    தேடு பொறியில் நம் பதிவுகள் முன்னணியில் வர ஆங்கில தலைப்பு மிகவும் அவசியம்., அந்த வகையில் நம் பதிவுக்கு ஏற்ற தலைப்பை நாமே தீர்மானிப்பது அருமையான விஷயம்

    மிக்க நன்றி பகிர்வுக்கு.!

    Reply
  4. வோர்ட் பிரஸ் ஆரம்பத்தில் இருந்தே உள்ளது .. 'பிளாக்கர் பயனர்களுக்கு நல்ல தகவல் பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே

    Reply
  5. நண்பா பாசித்…. தேவையான விளக்க பதிவு…

    நானும் சில சமயங்களில் URL-க்காக ஆங்கிலத்தில் தலைப்பு கொடுத்து பின் தமிழில் மாற்றியிருக்கிறேன். ஆனால் வார்த்தைகள் கோர்வையாக வர வேண்டுமெனில் நீங்கள் குறிப்பிட்ட வசதி மிகுந்த பயனளிக்கும்.

    பகிர்வுக்கு நன்றி பாசித்.

    Reply
  6. ஹா..ஹா..ஹா… அப்படியெல்லாம் இல்லை தம்பி.. முதல் பதிவு எழுதிய பின் தான் அந்த வசதியை பார்த்தேன். அதனால் தான் இரண்டு பதிவு..

    Reply
  7. ஆம் நண்பா! SEO விசயத்தில் வோர்ட் பிரஸ் தளம் தான் முன்னிலை வகிக்கிறது.

    Reply
  8. ஒரு சிலருக்கு மட்டும் இந்த வசதியை தந்துள்ளது என்று நினைக்கிறேன் தோழா!

    Reply
  9. நன்றி நண்பா!

    முன்பு ஆங்கில வார்த்தை கொடுத்து மாற்றுவது சிரமமாகவே இருந்தது. தலைப்பை மாற்றினாலும் Feedburner-ல் மாறாது. தற்போதுள்ள புது வசதி பயன்படும்.

    Reply
  10. எனக்கு இன்னும் வரல. பிரபல பதிவர்களுக்கு மட்டும் வந்து இருக்கோ? 😉

    Reply
  11. இன்னும் ஒரு மூணு வாரம் கழிச்சு இந்த மாதிரி ஒரு வசதி இருக்குன்னு பிளாக்கர் ப்ளாக்ல வரும்.

    Reply
  12. அருமையான பதிவு ,முந்தைய விருந்தினர் பதிவு படிச்சேன் ஆனால்

    புரியவில்லை இப்ப நல்லாவே புரிகிறது 🙂 🙂 நன்றி நண்பா

    அப்படியே நம்ம எரியா பக்கமும் வாங்க

    உங்கள் தளத்தின் பதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க வேண்டுமா
    http://asathalimelathaniyam.blogspot.com/2012/06/how-to-disable-right-click.html#more

    Reply
  13. இப்ப வருமோ இல்லை எப்போ வருமா…

    பிரபல பதிவர்களுக்கும் மட்டும் வந்துள்ளது….நன்றி நண்பா…விளக்கமான பதிவு…

    Reply
  14. SALAM,
    தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது ..

    புதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

    கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?

    Reply
  15. வழக்கமாக நான் ஆங்கில தலைப்பு வைத்து விட்டு அதனை அழித்து விடுவேன்…
    இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும்!!

    Reply

Leave a Reply