ப்ளாக்கர் தளம் சமீபத்தில் Threaded Comments
என்னும் புதிய கருத்துரை வசதியை தந்தது. அதாவது வாசகர்கள் கருத்திடும்
போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத்திடும் வசதி. (எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? காப்பி & பேஸ்ட் from ப்ளாக்கர் நண்பன்). ஆனால் இந்த வசதி மற்ற தளங்களின் டெம்ப்ளேட்களில் (Custom Templates) சில நேரம் வருவதில்லை.
பொதுவாக ப்ளாக்கரில் Threaded Comments கொண்டுவர இரண்டு விசயங்களை செய்ய வேண்டும் என்று ப்ளாக்கர் தளம் சொல்கிறது. ஒன்று கருத்திடும் வசதியை Embed முறையில் வைப்பது, இன்னொன்று செய்தியோடையை (RSS Feed) முழுவதுமாக தெரிய வைப்பது. ஆனால் இரண்டாவதை செய்ய வேண்டிய அவசியமில்லை.
கருத்துரை வசதியை Embed முறையில் வைப்பதற்கு Blogger Dashboard => settings => Posts and comments பகுதிக்கு சென்று அங்கு Comment Location என்ற இடத்தில் Embedded என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
சில Custom Template-களில் இதனை செய்தாலும் Threaded Comments வராது. அந்நிலையில் Threaded Comments கொண்டுவர பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று, அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.
2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. பிறகு Expand Widget Templates என்பதில் டிக் செய்யுங்கள்.
4. பிறகு பின்வரும் நிரல்களை தேடுங்கள்.
<b:include data=’post’ name=’comments’/>
</b:if>
5. மேலுள்ள நிரல்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பின்வரும் நிரல்களை சேர்க்கவும்.
<b:if cond=’data:post.showThreadedComments’>
<b:include data=’post’ name=’threaded_comments’/>
<b:else/>
<b:include data=’post’ name=’comments’/>
</b:if>
</b:if>
<b:if cond=’data:blog.pageType == "item"’>
<b:if cond=’data:post.showThreadedComments’>
<b:include data=’post’ name=’threaded_comments’/>
<b:else/>
<b:include data=’post’ name=’comments’/>
</b:if>
</b:if>
6. பிறகு Save Template என்பதை சேர்க்கவும்.
பிறகு உங்கள் ப்ளாக்கை பாருங்கள். அப்போதும் சில டெம்ப்ளேட்களில் அந்த வசதி வந்திருக்காது. ஏனெனில் Step-4-ல் சிவப்பு நிறத்தில் உள்ள நிரல் இன்னொரு முறையும் வந்திருக்கும்.
7. தற்போது
<b:include data=’post’ name=’comments’/>
</b:if>
என்ற நிரலை தேடுங்கள். அதனை நீக்கிவிட்டு Step-5-ல் உள்ள நிரல்களை இன்னொருமுறை சேருங்கள்.
8. பிறகு Save Template என்பதை சேர்க்கவும்.
அவ்வளவு தான்! இனி ப்ளாக்கில் Threaded Comments வசதி வந்திருக்கும்.
Reply என்னும் எழுத்து சின்னதாக இருக்கிறதே? அதற்கு பதிலாக பட்டன் வைத்தால் நன்றாக இருக்குமே? என்று சொல்கிறீர்களா? (அப்படி சொல்லவில்லை என்றாலும்) ப்ளாக்கரில் புதிய Reply Button வைக்க என்ற பதிவை பார்க்கவும்.
ஏற்கனவே படித்துவிட்டேனே? என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால் மீண்டும் ஒருமுறை அந்த பதிவை பாருங்கள். பட்டன் கலரையும், அளவையும் மாற்றுவது குறித்து தற்போது இணைத்துள்ளேன்.
நான் எதுவும் சொல்லவில்லையே? என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால் கீழிருக்கும் ஓட்டு பட்டைகள் மூலம் உங்கள் சனநாயக கடமையை செய்யுங்கள். 😀 😀 😀
நன்றி அப்துல்பாசித் சார்
என்னுடைய பிளாக்கில் நன்றாக தொழில்படுகிறது பாசித் சார்..! உதவிக்கு நன்றி..!
ரொம்ப நன்றி…..
விளக்கப் படம் போட்டு, என் பெயரை நன்றாக விளம்பரம் செய்ததற்கு நன்றிகள் நண்பரே 🙂 🙂 🙂 அடுத்த முறை போட்டோ அனுப்பி வைக்கிறேன் 😉
மின்னல் வரிகளில் இதைச் செயல்படுத்தினேன் பாஷித். இப்போது கருத்துப் பெட்டியும் ரிப்ளை பட்டனுமாக பார்க்கவே அழகாக இருக்கிறது. என் இதயம் நிறைந்த நன்றி.
Mighavum nanri nanbarae……
எனது டெம்ப்பிளேட்டில் இவ்வாறு உள்ளது என்ன செய்ய வேண்டும்
எனக்கு html பற்றி சுத்தமாக தெரியாது.
நீங்கள் மாற்ற சொன்ன
வரியை ctrl+f கொடுத்து தேடினால் இல்லை என்கிறது.
ஆனால்
இவ்வாறு இருக்கிறது.
என் மின்னஞ்சல் முகவரி
vanmathimaran[@]gmail.com
உதவுங்கள்….நன்றி
மின்னஞ்சல் உதவிக்கு மிகவும் நன்றிகள்..
சனநாயக கடமையை ஆத்திட்டேன் 😀
காணமல் போனவர் பட்டியலில் போடப்படும்…
ஹி ஹி நம்ம ஆளுக நல்ல டெவலப்மெண்ட்டு தான் ., ஒட்டு போட்டதை என்னா சூசகமா சொல்லுராங்கப்பா 😀
நன்றி., நானும் மாற்றி விட்டேன்.
பயனுள்ள பதிவு நண்பா.
நல்ல விளக்கம்…
நன்றி!
இதனைக் காலைக்குள் முடித்திடணும்,,
தூங்கப் போகும்…
அறியச் செய்தமைக்கு நன்றி பற்பல..
முதல் வழியிலே நல்ல முறையில் முடிந்து விட்டன.