![]() |
கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய Captcha (ப்ளாக்கரில் இல்லை) |
ப்ளாக்கரில் வாசகர்கள் பின்னூட்டம் இடும்போது இதை செயல்படுத்தும் வசதி உள்ளது. பெரும்பாலான பதிவர்கள் இந்த வசதியை வைக்க விரும்புவதில்லை.
சமீபத்தில் பிளாக்கர் தளம் பின்னூட்டம் இடும் முறையில் சிறு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது நமது தளத்தில் பெயர் சொல்ல விரும்பாதவர்கள் (அனானிமஸ் 🙂 ) பின்னூட்டம் இடும் வசதியை வைத்திருந்தால், Captcha வசதியை நாம் நீக்கியிருந்தாலும் அனானிமஸ் கண்டிப்பாக Captcha-வை டைப் செய்ய வேண்டும்.
இந்த மாற்றத்தைக் கொண்டு வரும்போது சிறு பிழையும் ஏற்பட்டுள்ளது. பின்னுள்ள படத்தைப் பாருங்கள்.
Comment Location என்பது பின்னூட்டப் பெட்டியின் தோற்றத்தை தேர்வு செய்வதாகும்.
- Embedded – பதிவின் கீழே பின்னூட்டப் பெட்டி இருக்கும். (இத்தளத்தில் இருப்பது போல)
- Full Page – Post a Comment என்பதை க்ளிக் செய்தால் தனி பக்கத்தில் பின்னூட்ட பெட்டி வரும்.
- Pop-up window – Post a Comment என்பதை க்ளிக் செய்தால் Pop-up window-ல் பின்னூட்ட பெட்டி வரும்.
- Hide – இதனை தேர்வு செய்தால் யாரும் பின்னூட்டம் இடமுடியாது.
இதில் Embed என்பதை தேர்வு செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் “Full Page” அல்லது “Pop-up Window” என்பதை தேர்வு செய்தால் தான் பிரச்சனை.
நீங்கள் Captcha வசதியை நீக்கியிருந்தாலும் வாசகர்களுக்கு Captcha தெரியும். ஆனால், Captcha தெரிந்தாலும் வாசகர்கள் Captcha எழுத்துக்களை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதை சிம்பிளாக இப்படியும் சொல்லலாம், “இருக்கு… ஆனா இல்லை….”
இந்த பிழை பற்றி கூகுளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சரியாகும் வரை “Embedded” வசதியை தேர்வு செய்வது தான் இப்போதைய ஒரே வழி.
Update: இந்த பிழை சரி செய்யப்பட்டுவிட்டது.
http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html
நேற்றைய பதிவில் துளசி அம்மா கருத்துரை இட்ட பின்பு தான் சோதனை செய்து பார்த்தேன்…
நீங்கள் சொன்ன வழி தான் சிறந்தது…
சில நாட்களாக வலைப்பூ பக்கம் வரவில்லை! பகிர்வுக்கு நன்றி!
இருக்கு ஆனா இல்லை! 🙂
இப்போது சரியாகிவிட்டது போலும்.
வணக்கம்.மனிதர் அல்லாமல் வேறு யார் பின்னூட்டம் இடுவார்கள்?
தானியங்கியாக விளம்பர பின்னூட்டங்கள் (Spam) இடுவதற்கு மென்பொருள்கள் உள்ளது சகோ.!
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
http://www.kuzhalinnisai.blogspot.fr
ஆகா! எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் வந்திருக்கிறீர்கள்! இப்பொழுதுதான் பார்த்தேன். வருக! வருக!
விண்டோஸ் 10 பற்றிய தங்களது கருத்தை எழுதுங்களேன். என்னைப்போன்று விண்டோஸ் 7 வைத்துள்ளவர்ளுக்கு இலவசமாக கிடைத்திருப்பதால் புதிய O.S க்கு மாறலாமா என மதில் மேல் பூனையாய் இருப்போருக்கு தங்களது ஆலோசனை உதவுமே.
ஐயா வணக்கம்!
இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_7.html
Great Information
http://www.governmentjobsportal.net