ப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி முடிவுகள்

சமீபத்தில் நமது பிளாக்கை பிரபலப்படுத்துவதற்கான Giveaways என்னும் பரிசுப்போட்டி பற்றி பதிவிட்டிருந்தேன். சோதனைக்காக பரிசுப்போட்டி ஒன்றையும் அறிவித்திருந்தேன். அந்த போட்டி முடிவடைந்துவிட்டது. வெற்றியாளர் யார் என்பதை பார்ப்போம்.

இந்த போட்டியில் என்னையும் சேர்த்து ஒன்பது நபர்கள் கலந்துக் கொண்டார்கள்.

பதிவை Facebook Like செய்தவர்கள் – 8
ப்ளாக்கர் நண்பன் பேஸ்புக் பக்கத்தை Like செய்தவர்கள் – 6
ப்ளாக்கர் நண்பன் ட்விட்டர் பக்கத்தை Follow செய்தவர்கள் – 5
போட்டி பற்றி ட்விட்டரில் பகிர்ந்தவர்கள் – 4


போட்டி காலம் முடிவடைந்தப்பின் தற்போது வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ப்ளாக்கர் நண்பன் தளத்தில் ஒரு மாத இலவச விளம்பரத்தைப் பெற்றுள்ள அந்த வெற்றியாளர்:

வெற்றிப்பெற்ற  நண்பருக்கு ப்ளாக்கர் நண்பன் தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!!!

டிஸ்கி: வெற்றியாளரை  தேர்ந்தெடுக்கும் போது என் பெயர் தான் வந்தது. இரண்டாவது முறையும் என் பெயர் தான் வந்தது. நடுவரின் முடிவின்படி மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர் ஸ்டாலின் அவர்களை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-12]

13 thoughts on “ப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி முடிவுகள்”

 1. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,

  இப்பதிவில் என்னை கவர்ந்த வரிகளுக்கு நான் எனது பின்னூட்டத்தில் பரிசு வழங்கப்போகிகிறேன்..!

  :-))

  பரிசு:
  அந்த வரிகளை என் பின்னூட்டத்தில் 'பெரிய மனதுடன்'… "இலவசமாக"… காபி பேஸ்ட் பண்ணப்போறேன்..!
  இதைவிட பெரிய பரிசு வேறு உண்டா..என்ன..?

  போட்டி முடிவு அறிவிப்பு…………………………………

  மூன்றாம் பரிசு………….. goes to……

  சகோ.அப்துல் பாஸித்….//இந்த போட்டியில் என்னையும் சேர்த்து ஒன்பது நபர்கள் கலந்துக் கொண்டார்கள்.//

  ஆயிரம் பேர்… பத்தாயிரம் பேர் என்றெல்லாம் புருடா விடாமல்… ஒற்றைப்படையில் உண்மையை சொன்னதற்காக…! 🙂

  இரண்டாம் பரிசு………….. goes to……
  சகோ.பரமசிவம்….//உங்களின் நல்ல மனதை எண்ணி மகிழ்கிறேன்.
  பாராட்டுகிறேன்.//

  இவருடைய அப்பாவித்தனத்துக்காக….. ஆனாலும் இவ்ளோ வெகுளியா..! 🙂

  முதல் பரிசு………….. goes to……
  சகோ.Prabu Krishna……..//ஒரே மாதத்தில் ஒரு கோடி ஹிட்ஸ் பெற வாழ்த்துகள் ஸ்டாலின். :D//

  என்ன்ன்ன்ன்ன்ன்ன ஒரு உள்குத்து….!
  இந்த ஒரே குத்தில் ஒன்பது பேரும் காலி..! superb…!

 2. ரொம்ப சந்தோஷமாக இருக்கு நண்பா … .

  என்ன நடக்கிறதென்றே தெரிய வில்லை என்னை தேர்ந்தேடுத்தற்கு ரொம்ப தேங்க்ஸ் சகோ

 3. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோ.! தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.