ப்ளாக்கர் தளத்தை கூகுள் ப்ளஸ் தளத்துடன் இணைக்கும் முயற்சியின் முதற்கட்டமாக ப்ளாக்கர் தளத்திற்கும், கூகுள் ப்ளஸ் தளத்திற்கும் ஒரே ப்ரொஃபைல் பக்கத்தை பயன்படுத்தும் வசதி பற்றி கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது அடுத்தக்கட்டமாக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, நாம் புதிய பதிவு பதிவிட்ட பிறகு நமது தளத்திற்கு செல்லாமலேயே, டாஸ்போர்ட் பகுதியில் இருந்தே பதிவுகளை கூகுள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம். மேலும் பழைய பதிவுகளையும் பகிரலாம். இந்த வசதியை பெற நீங்கள் ப்ளாக்கர் ப்ரொஃபைல் பக்கத்திற்கு பதிலாக கூகுள் ப்ரொஃபைல் பக்கத்தை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இவ்வசதி கிடைக்காது.
நீங்கள் கூகுள் ப்ரொஃபைல் பக்கத்தை பயன்படுத்தினால், பதிவை பப்ளிஷ் செய்த பிறகு கூகுள் ப்ளஸ்ஸில் பகிரும் வசதி வரும்.
எந்த சர்க்கிளில் உள்ளவர்களுக்கு பகிர வேண்டும் என்பதனை தேர்வு செய்து Share என்று கொடுத்தால் உங்கள் பதிவுகள் பகிரப்பட்டுவிடும்.
இதில் கூடுதலான செய்தி என்னவென்றால், Description பகுதியில் Meta Tag-ல் உள்ளவைகள் வருவதற்கு பதிலாக பதிவின் முதல் பத்தி வருகிறது. இது பயனுள்ளதாகும்.
இந்த வசதி ஆக்டிவேட் செய்ய,
Blogger Dashboard => Settings => Posts and comments பகுதிக்கு சென்று அங்கு Share to Google+ என்ற இடத்தில் YES என்பதை தேர்வு செய்து Save கொடுக்கவும்.
மேலும் Dashboard => Posts பகுதியில் அனைத்து பதிவுகளுக்கும் கீழே Share என்று இருக்கும். அதனை க்ளிக் செய்தும் பகிரலாம்.
இன்னொரு கூடுதலான செய்தி, ப்ளாக்கர் ப்ரொஃபைல் பக்கமும் மாறியுள்ளது. இது எப்போது மாறியது என்று (எனக்கு) தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் கவனித்தேன்.
மேலும் பல கூகுள் ப்ளஸ் வசதிகள் ப்ளாக்கரில் வரவிருப்பதாகவும் கூகுள் கூறியுள்ளது.
ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்…:
ப்ளாக்கர் நண்பன் தளம் இனி www.bloggernanban.com என்ற புதிய முகவரியிலும் இயங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் நாடினால் இதனைப் பற்றி பிறகு விரிவாக பதிவிடுகிறேன்.
Image Credits: www.techsute.com/
புதிய விஷயங்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி நன்பரே !
நன்றி சகோதரம்…
அன்புச் சகோதரன்…
ம.தி.சுதா
இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்
ஸலாம் சகோ.அப்துல் பாஸித்……….
டாட் காமுக்கு நன்றி..!
அப்புறம், இந்த நியுசை நான் ஏற்கனவே என் கூகுள் பிளசில் மதியமே பகிர்ந்துவிட்டேனே..!
வணக்கம் நன்பரே
நானும் காலையில் தான் கவனித்தேன்
இந்த வசதியும் ஈஸியாகத்தான் உள்ளது..
தகவலுக்கு நன்றி
தங்கள் தகவலுக்கு நன்றி
அப்துல் பஷித் நீங்கள் அனைத்து வகையான தொழில்நுட்ப பதிவுகளையும் எழுதுவதால் ப்ளாகர் நண்பன் என்றில்லாமல் பொதுவான பெயரை வைத்து இருக்கலாம் என்று தோன்றியது.
.com இற்கு மாறியதுக்கு , வாழ்த்துக்கள் நண்பா!
அன்புள்ள அப்துல் பஷித்,
எனது ப்ளாக்கில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. தீர்விருந்தால் கூறவும்!
நான் உபயோகிப்பது SIMPLE TEMPLATE.
1. FACEBOOK LIKE பட்டனை ஒவ்வொரு பதிவிற்கும் வைக்கும்போது அது ப்ளாக்கின் மொத்த LIKE-கை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தனியாக LIKE வருவதில்லை. இதனால் ஒருமுறை பதிவை LIKE பண்ணியவர்கள் மற்றொரு பதிவை LIKE பண்ண முடிவதில்லை. (EXAMPLE http://nilapennukku.blogspot.com/2011/12/blog-post_13.html)
2. அதேபோல் பதிவை FACEBOOK SHARE பண்ணும்போது ஒவ்வொரு பதிவின் தலைப்புக்கு பதிலாக ப்ளாக்கின் தலைப்பும், சம்பந்தமில்லாத ஒரு விளக்கமும் வருகிறது. (Example : மேலுள்ள லிங்கை ஷேர் பண்ணி பார்க்க!)
அன்புடன்,
நிலவன்பன்.
பயனுள்ள தகவல்! நன்றி நண்பரே!
.com இற்கு மாறியதுக்கு , வாழ்த்துக்கள் நண்பா!
.com ற்கு மாறியமைக்கு வாழ்த்துக்கள் நண்பா…!