புதிய பொலிவுடன் யாஹூ தேடல்

இணையத்தில் ஜாம்பவனாக திகழ்ந்துக் கொண்டிருந்த யாஹூ தளம் கடந்த சில வருடங்களாக அடி வாங்கத் தொடங்கியது. கூகிள் VS யாஹூ என்று நடந்துக் கொண்டிருந்த போட்டி தற்போது கூகிள் VS பேஸ்புக் என்று மாறிவிட்டது. சமீபத்திய யாஹூவின் தோல்வியால் அதனை மைக்ரோசாப்ட், கூகிள், ஏ.ஓ.எல் போன்ற நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சித்தன. இந்நிலையில் யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

Yahoo Recipes!

சமீபத்தில் எப்படி சமைப்பது? கூகிளில் தேடலாம்! என்ற  பதிவில் கூகிள் தேடலில் ரெசிபிகளை தேடும் வசதியை பற்றி பார்த்தோம் அல்லவா? அந்த வசதியை கொஞ்சம் கூடுதல் மாற்றங்களுடன் யாஹூ தளம் கொண்டுவந்துள்ளது. யாஹூவில் சமையல் குறிப்புகளை தேடினால் பின்வருமாறு புகைப்படங்களுடன் காட்டுகிறது.

தேடும் போது recipe என்பதனையும் சேர்த்து தேட வேண்டும். இதன் மூலம் நாம் தேடும் ரெசிபிகளை எளிதாக கண்டுக் கொள்ளலாம். மேலும் அந்த படத்தில் “Show Ingredients & Time” என்பதை க்ளிக் செய்தால் அந்த ரெசிபியை செய்ய தேவையான பொருட்களையும் , எவ்வளவு நேரம் ஆகும் என்பதனையும் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் அந்த ரெசிபிகளில் நமக்கு பிடித்தவைகளை பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் தந்துள்ளது. Add to Share என்ற பெட்டியில் தேர்வு செய்து எத்தனை ரெசிபிகளை வேண்டுமானாலும் பேஸ்புக்கில் பகிரலாம்.

கவனிக்க: ரெசிபிகளை தேடுபொறியில் தேடும்போது “தேவைப்படும் பொருட்கள், நேரம்” போன்றவற்றை தேடல் முடிவில் காட்டுவதை யாஹூ கூகிள் தளத்தை காப்பி அடித்துள்ளது என்று நினைக்க வேண்டாம். கூகிள், யாஹூ, பிங் போன்ற முன்னணி தேடுபொறிகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட Schema என்ற நுட்பத்தில் ரெசிபிகளை கண்டுபிடிக்கும் வழி உள்ளது. . இது Html tag போன்ற நிரல்களால் ஆனது. அது குழப்பும் என்பதால் அதை பற்றி விரிவாக பார்க்க வேண்டாம். அதை பற்றி நீங்கள் அறிய விரும்பினால் Schema.org என்ற தளத்தைப் பார்க்கவும்.

Yahoo Shopping!

யாஹூ தேடலில் ஏதாவது தேடும் போது அது தொடர்பாக இணையத்தில் வாங்குவதற்கான தளங்களை தேடல் முடிவில் காட்டுகிறது. இதிலும் Recepe போலவே படங்களாக காட்டுகிறது.

பேஸ்புக்கில் பகிரும் வசதியுடன் சேர்த்து, ஒன்றுக்கும் மேற்பட்டவைகளை ஒப்பிடும் வசதியும் தந்துள்ளது. நமக்கு பிடித்தவைகளை தேர்வு செய்து Compare என்பதை க்ளிக் செய்தால் ஒப்பீட்டையும், Share என்பதை க்ளிக் செய்தால் பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் காட்டுகிறது.

Yahoo (?) Videos!

யாஹூவில்  வீடியோ ஏதாவது தேடினால் அது தொடர்பான வீடியோக்களை தேடல் முடிவில் காட்டும். அதில் நமக்கு பிடித்த வீடியோக்களை க்ளிக் செய்தால் அதே பக்கத்திலேயே வீடியோவை முழு அளவில் பார்க்கலாம்.

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், யூட்யூப் போன்ற மற்ற வீடியோத் தளங்களில் உள்ள வீடியோக்களைப் பார்க்கலாம்.

இந்த மாற்றங்களைப் பற்றி யாஹூவின் Senior Vice President, Shashi Sheth

“நாங்கள் புதிய வகையான தேடலை நோக்கி செல்ல முயற்சிக்கிறோம். (பயனாளர்களுக்கு) பதில்களை கொடுக்கிறோம், இணைப்புகளை அல்ல.”


தமிழாக்கம் புரியவில்லையெனில் அவர் சொன்னவை ஆங்கிலத்தில்,

“We’re trying to go towards a new kind of search, providing answers, not links.”

இந்த மாற்றங்கள் மூலம் யாஹூ தளம் மீண்டும் முன்னணியில் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

15 thoughts on “புதிய பொலிவுடன் யாஹூ தேடல்”

  1. பயனுள்ள தகவல் நண்பரே! முக்கியமாக சமையல் பற்றிய யாகூவின் புதிய அம்சங்கள், பெண்களுக்கும், ஆண்களுக்கும்?!… பயனுள்ளதாக இருக்கும்.

  2. வணக்கம் சகோ..

    எனக்கு தேவையானவற்றை இதுவரை கூகுளில் மட்டுமே தேடிப்பெற்றேன்..

    தங்கள் உதவியால் இனி யாகூ-விலிம் தேடிப்பெறுகிறேன்

    பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி