புதிய பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?

தலைப்பை பார்த்ததும் புதிய பதிவர்களுக்கு அறிவுரை கூறப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம். புதிதாக வலைப்பூ தொடங்கியவர்கள் முதலில் தொழில்நுட்பரீதியாக என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்ப்போம். இவைகளில் பல என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் (Frequently asked Questions) ஆகும்.

1. ப்ளாக் தொடங்குங்கள்

ப்ளாக் தொடங்குவது பற்றி புதியவர்களுக்காக ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற நெடுந்தொடர் (இப்படியும் சொல்லலாம்!) எழுதியுள்ளேன். அதில் ப்ளாக் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

பிறகு முதல் பதிவை எழுதுங்கள். அதன் பின் பின்வருபவற்றை செய்யுங்கள்.

2. டெம்ப்ளேட் மாற்றுங்கள்

ப்ளாக்கர் தளத்திலேயே பல்வேறு டெம்ப்ளேட்கள் உள்ளன. அதில் Dynamic Template-களைத் தவிர வேறு ஏதாவது டெம்ப்ளேட்டை பயன்படுத்துங்கள். அதில் எதுவும் பிடிக்கவில்லை என்றால் மற்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அது பற்றி ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி? என்ற பதிவில் பார்க்கவும்.

3. தலைப்பை மாற்றுங்கள்

புதிதாக  ப்ளாக் தொடங்கியவுடன் தலைப்பு குறிச்சொல் (Title Tag) “ப்ளாக் பெயர் >> பதிவு தலைப்பு” என்ற தோற்றத்தில் இருக்கும். அதனை தேடு இயந்திரங்களுக்கு (Search Engines) ஏற்றவாறு “பதிவு தலைப்பு >> ப்ளாக் பெயர்” என்று மாற்ற வேண்டும். இது பற்றி ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா? என்ற பதிவில் பார்க்கவும்.

4. Meta Tags:

Meta Tags என்பது ப்ளாக் பற்றிய தகவல்களை கூகுள் தேடுபொறிகளுக்கு நிரல் மூலம் சொல்வது. இது பற்றி வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆனால் அதை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதில் சொல்லப்பட்ட மூன்று Meta Tags:

Description – நம் தளத்தை பற்றிய குறிப்பு. இது பற்றி ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி META TAG என்ற பதிவில் பார்க்கவும். அல்லது சகோதரி பொன்மலர் அவர்கள் ப்ளாக்கர் புதிய SEO வசதிகள் பற்றி எழுதிய பதிவில் உள்ள Meta Tags பகுதியை பாருங்கள்.

Keywords – தற்போது கூகுள் இந்த Meta Tag-ஐ ஏற்றுக் கொள்வதில்லை.

Author -பதிவு எழுதியவர்கள் பற்றி தேடுபொறிகளுக்கு சொல்வது. இந்த Meta Tag-ற்கு பதிலாக கூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம் என்ற  பதிவில் உள்ளபடி செய்யலாம்.

5. ப்ளாக்கை பிரபலப்படுத்துங்கள்:

நமது பிளாக்கை பிரபலப்படுத்துவது பற்றி நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற குறுந்தொடர் (இப்படியும் சொல்லலாம்!) எழுதியுள்ளேன். அதனையும் பார்க்கவும்.


6. திரட்டிகளை வரிசைப்படுத்துங்கள்

நாம் வைக்கும் திரட்டிகளை சீராக வைத்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இது பற்றி சகோ. பிரபு கிருஷ்ணா அவர்கள் எழுதிய திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி? என்ற  பதிவை பார்க்கவும்.

7. முகவரி மாற்றம்:

ப்ளாக்கர் தளங்களின் முகவரி .com-லிருந்து .co.in, .co.uk, .com.au போன்று அந்தந்த நாடுகளுக்கு தகுந்தவாறு மாறியுள்ளதைப் பற்றி தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் என்ற பதிவில் சொல்லியிருந்தேன். இந்த பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள் உள்ளது. ஒன்று blogspot முகவரியிலிருந்து சொந்த டொமைனுக்கு மாறுவது. அது பற்றி பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி? என்ற பதிவில் பார்க்கலாம். இது அவசியம் இல்லை, விருப்பம் இருந்தால் செய்யலாம். (டொமைன் வாங்கியவர்கள் டொமைன் காலாவதி ஆவதற்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.)

இதையும் படிங்க:  அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்

ப்ளாக்கர் முகவரி மாற்றத்தினால் வரும் முக்கிய பிரச்சனை ஓட்டு பட்டைகள் சரியாக வேலை செய்யாது. அதற்கு தீர்வாக ஓட்டு பட்டைகளில் சில மாற்றங்கள் செய்தால் சரியாகிவிடும். இது பற்றி பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு என்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

இந்த  இரண்டையும்விட எளிமையான தீர்வு .co.in, .co.uk, .com.au என்று எந்த முகவரிக்கு சென்றாலும் நமது தளத்தை .com முகவரிக்கு திருப்பிவிடுவது. இது பற்றி சகோதரி பொன்மலர் அவர்கள் எழுதியுள்ள பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக் என்ற பதிவை அவசியம் பார்க்கவும்.

இன்று இது போதும் என நினைக்கிறேன். இறைவன் நாடினால் பதிவெழுத ஏதும் கிடைக்காத இன்னொரு அரிய சந்தர்ப்பத்தில் மேலும் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
 

36 thoughts on “புதிய பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?”

  1. இது போல பதிவுகள் அனைத்தையும் ஒன்றாக கொடுத்து விட்டால் பயன்படும் சமயத்தில்,template மாற்றிய பின்னர் தேட வேண்டியது இல்லை…

  2. அருமை.. இனி புதியவர்கள் மெனக்கெட்டு தங்களுக்குத் தேவையானதை தேடாமல் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இப்பதிவின் மூலம் வழங்கியிருக்கிறீர்கள்.!

    என்னிடம் புதியவர்கள் ஏதேனும் சந்தேகம் கேட்டால் உங்களுடைய தளத்தைதான் பரிந்துரைக்கிறேன்..! (அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுத உங்களை விட்டால் வேறு யார் இருக்க முடியும்?)

    பகிர்வுக்கு நன்றி..திரு. அப்துல் பாசித் அவர்களே.!

  3. // இறைவன் நாடினால் பதிவெழுத ஏதும் கிடைக்காத இன்னொரு அரிய சந்தர்ப்பத்தில் மேலும் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.//

    ஹ ஹா உண்மை யை சொல்றீங்களே!

    புதியர்களுக்கு மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும்

  4. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ
    இன்னும் எனது தளத்தில் தமிழ்மணம் ஓட்டுப்
    பட்டையை நிறுவி ஓட்டுப் போட வழி தெரியாமல்
    உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன் .

  5. என்னுடைய பதிவு தமிழ் மனதில் இணைக்க முடியவில்லை. தமிழ் வலைப்பதிவுகள் சேர்க்கையளிப்பு நிலவரப் பட்டியல், என்னுடைய பதிவு பட்டியலிடப்பட்டுள்ளது. எப்படி தமிழ் மனத்தில் இணைப்பது? ஆனால், தமிழ் மனதில் இணைக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்து வருகிறது. Your Blog http://kalakalappu.blogspot.sg is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam

  6. //தமிழ் வலைப்பதிவுகள் சேர்க்கையளிப்பு நிலவரப் பட்டியல், என்னுடைய பதிவு பட்டியலிடப்பட்டுள்ளது.//

    தமிழ்மணம் நிர்வாகிகள் தங்கள் தளத்தை அனுமதிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

  7. நன்றி நண்பரே. என்னுடைய பதிவு ஜூன் மாதம் 13 ம் தேதி பட்டியலுக்கு சென்றது. கடந்த ஒரு மாதமாக தமிழ் மனம் நிர்வாகிகள் எதுவுமே செய்யவில்லை. எப்படி அவர்களை தொடர்பு கொள்வது?

  8. அருமையான பதிவு ஒவ்வாரு வார்த்தையும் முத்து முத்தாக இருக்கு என்ன

    மாதிரி படிக்காத அறிவளிகளுகும் உங்க பதிவு தன் ஈசியாக புரிகிறது

  9. வணக்கம்…

    உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்… நன்றி…