தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் (23/10/13) நடந்த முக்கிய மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.
விண்டோஸ் 8.1:
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் எட்டு இயங்குதளத்தின் முதல் அப்டேட்டாக பல புதிய வசதிகளுடன் Windows 8.1 பதிப்பை வெளியிட்டுள்ளது. அதிகமான பயனாளர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த பதிப்பில் Start பட்டனை மீண்டும் கொண்டுவந்துள்ளது. விண்டோஸ் 8 பயனாளர்கள் இந்த பதிப்பை Store அப்ளிகேசனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
பேஸ்புக் செயலிழந்தது!
கடந்த திங்கட்கிழமை பேஸ்புக் தளம் சில மணி நேரங்கள் செயலிழந்தது. இதனால் அதிகமானவர்களுக்கு நிலைத்தகவல்களை பகிரவோ, மற்றவர்களின் பகிர்வுகளை விருப்பமிடவோ முடியாமல் இருந்தது. பராமரிப்பு செய்யும்போது பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக பேஸ்புக் செய்தியாளர் கூறினார்.
நோக்கியாவின் முதல் டேப்லட்:
நேற்று அபுதாபியில் நடைப்பெற்ற Nokia World
நிகழ்ச்சியில் நோக்கியா நிறுவனம் 6 இன்ச் அளவிலான Nokia Lumia 2520 என்ற தனது முதல்
டேப்லட்டை வெளியிட்டுள்ளது. இத்துடன் 20MP கேமராவுடன் கூடிய Lumia 1520 என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது. இவைகள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படுகிறது.
மேலும் விண்டோஸ் மொபைல்கலுக்கான Instagram அப்ளிகேசன் விரைவில் வரவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
புதிய பேஸ்புக் லைக் பட்டன்:
பேஸ்புக் நிறுவனம் புதிய லைக் பட்டனை சோதித்து வருகிறது.
புதிய ஆப்பிள் ஐபேட்கள் மற்றும் ரெடினா மேக்புக் ப்ரோ:
ஆப்பிள் நிறுவனம் நேற்று நான்காம் தலைமுறைக்கான புதிய ஐபேடினை (iPad Air) அறிமுகம் செய்தது. இது முன்பைவிட மெல்லியதாகவும், எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் Retina திரையுடன் கூடிய புதிய ஐபேட் மினியையும் (iPad Mini) அறிமுகம் செய்தது.
மேலும் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் அளவிலான இரண்டு Retina MacBook Pro மடிக்கணினிகளையும் அறிமுகம் செய்துள்ளது.
இவைகள் பற்றிய முழுவிவரங்களுக்கு www.apple.com
BBM for iOS & Android:
ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான Blackberry Messenger அப்ளிகேசன் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. வெளியான எட்டுமணி நேரத்தில் ஐந்து மில்லியன் பயனாளர்களுக்கு ஆக்டிவேட் செய்துள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் முன் உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்ய வேண்டும்.
இந்த வார சிரிப்பு படம்:
அனைத்து தகவல்களுக்கும் நன்றி…
நல்ல தொழில்நுட்பத் தகவல் தொகுப்பு.. பகிர்வினிற்கு நன்றி. !
சகோதரரின் தகவலுக்கு நன்றி!
ஏற்கனவே விண்டோஸ் 8 பயன்படுத்தவில்லை என்றால் விண்டோஸ் 8.1 நேரடியாக இறக்கிகொள்ளமுடியுமா?
thanks for the information thala
விண்டோஸ் எட்டை இணையத்தில் வாங்கினால் நேரடியாக WINDOWS 8.1-ஐ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்டோஸ் 8 சிடியாக கடைகளில் வாங்கினால் அதை நிறுவிய பிறகு அப்டேட் செய்துக் கொள்ளலாம்.