இணையத்தைப் பொருத்தவரை “இலவச சேவை” என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு இலவசத்திற்கும் நாம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ விலைக் கொடுக்கிறோம். அதிலும் அதிகமாக நாம் கொடுக்கும் விலை, நம்முடைய தனியுரிமை (Privacy). சரி, இனி இந்த வாரம் (19/12/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்..பைட்…மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.
பேஸ்புக்கில் வீடியோ விளம்பரம்:
பேஸ்புக் தளத்தில் நண்பர்களின் பகிர்வுகளுக்கு இடையில் விளம்பரம் வருவதைப் பார்த்திருப்பீர்கள். இன்னும் ஆறு மாதங்களில் தானாக ஓடக்கூடிய விளம்பரங்கள் (Auto-Play Ads) பேஸ்புக்கில் வரவிருக்கிறது. தற்போது விளம்பரம் மூலம் வருமானம் பெறும் முனைப்பில் பேஸ்புக் மும்முரமாக இருக்கிறது.
அறக்கட்டளைக்கு ஐநூறு மில்லியன் டாலர்:
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் பதினெட்டு மில்லியன் பேஸ்புக் பங்குகளை சிலிக்கான் வேளியில் உள்ள அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். அதனுடைய தற்போதைய மதிப்பு ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்களாகும் . கடந்த 2010-ஆம் ஆண்டு அவர் தனது சொத்துக்களில் பெரும்பாலானவற்றை தானம் செய்வதாக உறுதியேற்றார். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள பொது பள்ளிக்கூட அமைப்பிற்காக (Public School System) நூறு மில்லியன் டாலர் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோனுக்கான கூகுள் மேப்:
கடந்த வாரம் கூகுள் நிறுவனம் ஐபோன் உள்ளிட்ட ஐஒஎஸ் சாதனங்களுக்கான கூகுள் மேப் அப்ளிகேஷனை வெளியிட்டது. வெளியிட்ட 48 மணி நேரங்களில் நூறு மில்லியன் தடவைகள் அந்த அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த அப்ளிகேசன் வந்த ஏழு மணி நேரத்திற்குள், அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட இலவச அப்ளிகேசன் (Top Free iPhone App) பட்டியலில் முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சோனி மொபைல்களில் ஜெல்லி பீன்:
சோனி மொபைல் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில எக்ஸ்பீரியா (Xperia) மாடல் ஆண்ட்ராய்ட் போன்களில் வரும் பிப்ரவரி மாதம் முதல் ஆண்ட்ராய்ட் லேட்டஸ்ட் பதிப்பான ஜெல்லி பீனைக் கொண்டு வரப்போகிறது. அவைகள்:
Xperia T, Xperia TX, Xperia V, Xperia P, Xperia J, Xperia go, Xperia S, Xperia SL, Xperia ion and Xperia acro S
18.4 மில்லியன் ஆண்ட்ராய்ட் மால்வேர்:
Lookout என்னும் ஆண்டிவைரஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் 2012-2013 ஆகிய இரண்டு வருடங்களில் 18.4 மில்லியன் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் மால்வேர் என்னும் தீம்பொருளால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இது மொத்த ஆண்ட்ராய்ட் பயனாளர்களில் ஒரு சதவீதம் ஆகும்.
பேஸ்புக்கில் ரகசிய படங்கள்:
Snapchat என்பது மொபைலில் செய்தி அனுப்பவும், படங்களை அனுப்பவும் பயன்படும் அப்ளிகேசன் ஆகும். அதுவும், அனுப்பப்பட்டவர்கள் பார்த்த சில நிமிடங்களில் தானாக அழிந்துவிடக் கூடிய ரகசிய படங்களை அனுப்பும் வசதியாகும். இதற்கு போட்டியாக இன்னும் சில வாரங்களில் பேஸ்புக்கில் இது போன்ற புதிய வசதி வரவுள்ளதாக செய்தி நிலவுகிறது.
வாரம் ஒரு கார்டூன் (ஹிஹிஹிஹி):
பதிவுக்கு நன்றி !
கூகிள் பிளஸின் மூலம் நண்பர்களுக்கு நாம் எழுதிய பதிவுகளை ஷேர் செய்யும் முன் மின்னஞ்சலில் அவற்றை அனுபவதற்காக Also send email to your circles என்பதை கிளிக் செய்தால் 'You can't send email to that many people.' என்பதாகச் சொல்கிறது !? காரணம் என்ன ? மாற்று வழிமுறைகள் ஏதேனும் உண்டா ?
அறிந்தவர்கள் – அறியத்தரலாம்
சக்கர்பெர்க்கின் செயல் பாராட்டப் பட வேண்டியது.
18.4 ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் // இது மில்லியனில் தானே ?
பகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ .
அறியாத பலதகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
Nice bits 🙂
அறியாத பல விபரங்கள் தெரிந்து கொண்டேன் !
தகவல்களுக்கு நன்றிங்க….
பேஸ்புக் பற்றிய தகவல்கள் அருமை, எனக்கு நிச்சயம் உதவும்… கார்டூன் செம கலக்கல்….
அறிய பல தகவல்கள் இலவசமாக கிடைபாதே யாம் பெற்ற பாக்கியம் தானே
அறியாத பலதகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!