பிட்.. பைட்… மெகாபைட்….! (10/04/2013)

இந்த வாரம் (10/04/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.

Facebook Home:

 பேஸ்புக் நிறுவனம் ஆண்ட்ராய்டுக்கான அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையே மாற்றி அமைக்கக் கூடிய மென்பொருள் ஆகும். வரும் வெள்ளி அன்று இந்த அப்ளிகேசன் கூகுள் ப்ளே தளத்தில் கிடைக்கும். ஆனால் இது HTC One X, HTC One X+, Samsung Galaxy S III, Samsung Galaxy Note II ஆகிய மொபைல்களுக்கு மட்டுமே! அதுவும் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே! மற்ற மொபைல், நாடுகளுக்கு பின்னர் கொண்டுவரலாம்.

HTC நிறுவனத்துடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் Home வசதியுடன் கூடிய HTC First மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் எனக்கு விருப்பமே இல்லை! இதன் மூலம் நம்முடைய அதிகமான தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் பெற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்ளும்.

Google Play மாற்றம்:

Google Play அப்ளிகேசன் தோற்றத்தை மாற்றியுள்ளது கூகுள். இன்னும் சில வாரங்களில் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல், டேப்லட்டிலும் மாறிவிடும்.

EA – அமெரிக்காவின் மோசமான நிறுவனம்:

வீடியோ கேம்களை தயாரிக்கும் Electronic Arts நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது வருடமாக “அமெரிக்காவின் மோசமான நிறுவனம்” விருதைப் பெற்றுள்ளது.

அக்டோபரில் ஐபேட் 5?

ஆப்பிள் ஐபேடின் அடுத்த பதிப்பாக iPad 5 வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தயாரிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Google & Whatsapp:

மொபைல்களில் இலவசமாக செய்திகளை அனுப்ப உதவும் Whatsapp அப்ளிகேஷனை கூகுள் விலைக்கு வாங்கப்போவதாக வதந்தி பரவியது. ஆனால் Whatsapp நிறுவனம் இதனை மறுத்துவிட்டது.


ட்விட்டர் Vine – முதலிடம்:

அமெரிக்காவில் ஐபோன் அப்ளிகேசன்கள் பட்டியலில் ட்விட்டரின் Vine அப்ளிகேசன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் தான் அந்த அப்ளிகேஷனை ட்விட்டர் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வார சிரிப்பு படம்:

Log out!
இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (26/09/2012)

10 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (10/04/2013)”

  1. புதிய தகவல்கள்.
    பேஸ்புக்கின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆபத்தான விடயம்.ஆனால் இளைஞர்கள் மத்தியில் whats app,viber போன்ற mobile apps பேஸ்புக்கிற்கு பெரிய தலையிடியாய் அமையும் என்று கூறப்படுகின்றதே

  2. தகவல்களுக்கு நன்றிங்க…

    சிரிப்பு படத்தில் இருப்பவர் நான் தானோ என்று சந்தேகம் வந்து விட்டது 😉