பிட்.. பைட்… மெகாபைட்….! (06/03/2013)

இந்த வாரம் (06/03/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய “பிட்.. பைட்… மெகாபைட்….!” பகுதியில் பார்ப்போம்.


இன்று கூகுள் ப்ளே பிறந்த நாள்:

கடந்த வருடம் இதே நாள் கூகுள் தனது ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை கூகுள் ப்ளே என்று மாற்றியது. இதைப் பற்றி கூகிளின் புதிய வசதி: Google Play என்ற பதிவில் பார்த்தோம். கூகுள் ப்ளே தளத்திற்கு இன்று முதல் பிறந்தநாள். அதனையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதனைக் காண: Our Gifts To You


 Samsung Galaxy SIV – டீசர் வீடியோ:

வரும் 14-ஆம் தேதி சாம்சங் நிறுவனம் Galaxy SIV மொபைலை வெளியிடவுள்ளதாக பார்த்தோம் அல்லவா? அதனையொட்டி மேலேயுள்ள டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது.


ஜாவா 7 அப்டேட் 17:


தற்போது ஜாவா மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒவ்வொரு முறை ஆரக்கிள் நிறுவனம் ஜாவாவை அப்டேட் செய்தாலும் புதிது புதிதாக பாதுகாப்பு ஓட்டைகள் முளைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது Java 7 Update 17 என்ற பெயரில் புதுப்பித்துள்ளது. ஜாவா பயன்படுத்துபவர்கள் Java.com தளத்திற்கு சென்று அப்டேட் செய்யுங்கள்.

The Croods – ரோவியோவின் புது விளையாட்டு:Angry Birds விளையாட்டை உருவாக்கிய ரோவியோ(Rovio) நிறுவனம், அனிமேசன் படங்களை தயாரிக்கும் DreamWorks Animation நிறுவனத்துடன் இணைந்து The Croods என்னும் அனிமேசன் படத்தை அடிப்படையாகக் கொண்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டுக்கான இலவச விளையாட்டை வரும் 14-ஆம் தேதி வெளியிடவுள்ளது.


மொபைலுக்கான போட்டோஷாப்:
பிரபல போட்டோ எடிட்டிங் மென்பொருளான அடோப் போட்டோஷாப் தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களிலும் வெளிவந்துள்ளது. இதன் விலை 4.99$ ஆகும்.

Photoshop Touch for Android
Photoshop Touch for iPhone

பிகாஸா to கூகுள்+ போட்டோஸ்:

கூகுளின் புகைப்பட தளமான Picasa தளத்திற்கு சென்றால் அது Google+ Photos பக்கத்திற்கு Redirect ஆகிறது. இதன் மூலம் இன்னும் சில மாதங்களில் பிகாஸா தளம் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வார சிரிப்பு புகைப்படம்:

Log Out!
இதையும் படிங்க:  பிட்.. பைட்.. மெகாபைட்..! (30/10/13)

8 thoughts on “பிட்.. பைட்… மெகாபைட்….! (06/03/2013)”

  1. பிக்காசா பத்தி நா எழுதி இருக்கக் கூடாதோ, ஓ மை காட் அப்போ பிளாகரையும் மூடிருவாங்களா…

  2. ஆமாம் கம்ப்யூட்டர் நமது நேரத்தை மிச்சம் தான் படுத்தியது ..

    ஆனால் என்ன … தான் மிச்படுத்தி கொடுத்த நேரத்தை தானே எடுத்தும் கொண்டது