பதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி?

நாம் எழுதும் பதிவுகளில் மகிழ்ச்சி 🙂 , சோகம் 🙁 , கோபம் X( என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அப்படி பகிரும்போது நம்முடைய உணர்வுகளை படங்களாக வெளிப்படுத்துவதற்கு Emoticons பயன்படுகிறது. இதற்கு Smileys என்றும் பெயர். அதனை ப்ளாக்கர் பதிவுகளில் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று, அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.

2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. பிறகு

]]></b:skin>

என்ற Code-ஐ கண்டுபிடித்து அதற்கு முன்னால்

img.bnsmly {
    height: auto !important;
    vertical-align: middle !important;
    width: auto !important;
    border:0px !important;
}

என்ற Code-ஐயும், அதற்கு பின்னால்

<script src=’http://bloggernanban.googlecode.com/files/bnsmileys.js’ type=’text/javascript’/>

என்ற Code-ஐயும் Paste செய்யுங்கள்.

4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்! பிறகு நீங்கள் பதிவு எழுதும் போது உங்களுக்கு பிடித்த Emoticon-களின் குறியீடுகளைக் கொடுத்தால் அதற்கான படம் பதிவில் வந்துவிடும். இவைகள் Yahoo Emoticons ஆகும்.

Emoticon-களும் அதன் குறியீடுகளும்:

நீங்களும் பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 

 


 

 
 
 
 
 
 

 

 
 

Update: இதனை இணைப்பதனால் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது. 

இதையும் படிங்க:  எப்படி சமைப்பது? கூகிளில் தேடலாம்!

19 thoughts on “பதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி?”

 1. நண்பா கோடிங் -கில் சின்ன திருத்தம்

  ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங்கை

  முடிக்க வில்லை < / script >

  ….

  பகிர்வுக்கு நன்றி நண்பா ..

 2. நான் இணைத்தேன். சரியாக வந்தது நண்பா! ஸ்மைலிஸ் குறியீடுகளுக்கு முன்னும் பின்னும் இடைவெளி இருக்க வேண்டும்.

 3. என்னுடைய வலைத்தளத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில பிரச்சனைகள் இருக்கிறது, அவற்றை சரிசெய்ய எண்ணுகிறேன், தங்களின் உதவி இருந்தால் தான் சாத்தியம் என எண்ணுகிறேன்.

  பிரச்சனைகள் …,

  1. Embedded Comments Box-ஐ பதிவிற்கு கீழே வரவைக்க இயலவில்லை

  2. Blogger Header Image-ஐ நீக்க முயற்ச்சிக்கிறேன் இயலவில்ல (நானா வைத்திருக்கும் image-ஐ நீக்க இயல்கிறது ஆனால், நான் வைத்திருக்கும் Template-கென்று ஒரு image-இருக்கிறது அதை நீக்க முடியவில்லை.

  3. Comments Reply வசதியை ஏற்படுத்திட முயன்றேன் இயலவில்ல.

  4. Footer Section-ல் Rectangle line ஒன்று தோன்றுகிறது அதனை அழிக்க வேண்டும்.

  மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்வதற்காக வருந்துகிறேன், தங்களின் ஓய்வு நேரத்தில் என்னை அழைத்தால் மகிழ்வேன்.

  என்றென்றும் நட்புடன்..,

 4. அது அனைத்து யாஹூ emoticons படம். ஆனால் பதிவில் உள்ள Javascript Code-ல் தற்போது உள்ள படத்தில் உள்ளவைகள் மட்டும் தான் உள்ளது. அதனால் தான் மாற்றிவிட்டேன்.

 5. வணக்கம் நண்பரே பிளாக்கர் நண்பன் அளவுக்கு தீர்வு சொல்ல முடியா விட்டாலும் எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.

  1. இது நீங்கள் பயன்படுத்தும் Template பொறுத்து. வேறு Template முயற்சித்து பாருங்கள் அப்போது வரும். முக்கியமாக Predefined Templates from blogger.

  2. You have to remove it from you template. (Edit Template. first find out the url of the image and then remove it in template. thats all)

  3. You must enable Embedded Comment option. (Try from another tempalte)

  4. அது Footer Widget களுக்கானது. Footer-இல் ஏதேனும் widget வைத்து பாருங்கள். அது அழகாக மாறிவிடும்.

 6. @Prabu Krishna

  பதில் அளித்தமைக்கு நன்றி சகோ.!

  //பிளாக்கர் நண்பன் அளவுக்கு தீர்வு சொல்ல முடியா விட்டாலும்//

  அவ்வ்வ்வ்.. இது கொஞ்சம் அதிகம். 🙂 🙂 🙂

 7. @வரலாற்று சுவடுகள்

  நண்பா! தங்கள் கேள்விகளுக்கு பிரபு சகோ பதில் அளித்துள்ளார்.

  1. நீங்கள் comment box-ஐ embed முறையில் வைக்கவில்லையே?

 8. நண்பருக்கு வணக்கம். நான் தங்கள் தளம் முழுமையும் படித்து முடித்தேன். தமிழ் தளங்களில் கூகிள் அட்சென்ஸ் அப்ரூவ் இல்லை என்று கூறி உள்ளீர்கள். ஆனால் இன்று தங்கள் தளத்தில் விளம்பரங்கள் தெரிகின்றனவே அது எப்படி?

 9. நண்பரே! தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் கிடையாது. அதில் எந்தவித மறுப்பும் இல்லை. ஆங்கில தளங்களுக்கு வாங்கிய ஆட்சென்ஸ் விளம்பரத்தை தமிழில் வைத்துள்ளேன். பலரும் இப்படித் தான் வைத்துள்ளார்கள். அப்படி வைக்க அனுமதியில்லை தான்.

  தமிழ் பதிவுகளாக இருந்தாலும் ஆட்சென்ஸ் விளம்பரம் பயனாளர்களின் இடத்தை வைத்து விளம்பரம் தருவதால் விளம்பரதாரர்களுக்கோ, கூகிளுக்கோ நஷ்டம் எதுவும் இல்லை. இது தொடர்பாக கூகிளை தொடர்புக்கொள்ள பல வாரங்களாக முயற்சிக்கிறேன். இதுவரை சரியான பதில் இல்லை. அதனால் தற்போது விளம்பரம் வைத்துள்ளேன்.