பதிவிற்கு தொடர்பில்லாத தலைப்பு

இதனைப் பற்றி எழுத வேண்டும் என கடந்த ஒரு மாதமாக நினைத்து வருகிறேன், ஆனால் இப்போது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. நாம் எதைப்பற்றி எழுதுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல தலைப்பு வைப்போம். பொதுவாக அந்த தலைப்பை க்ளிக் செய்தால் அந்த பதிவிற்கே செல்லும். ஆனால் தலைப்பை க்ளிக் செய்தால் பதிவிற்கு தொடர்பில்லாத வேறொரு முகவரிக்கு செல்லுமாறு வைக்கும் வசதி ப்ளாக்கரில் உள்ளது.

பதிவு எழுதும் போது வலதுபுறம், Links என்பதை க்ளிக் செய்தால், சில அமைவுகள் வரும். அதில் Title Link என்பதற்கு கீழே நீங்கள் எந்த முகவரியை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

பிறகு Done என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்!

பதிவிட்ட பிறகு பதிவின் தலைப்பை க்ளிக் செய்தால், அது நீங்கள் கொடுத்த முகவரிக்கு செல்லும்.

சோதனைக்காக, இந்த பதிவின் தலைப்பில் வேறொரு முகவரிக்கு இணைப்பு கொடுத்துள்ளேன். அதை க்ளிக் செய்து பாருங்கள்.

ஆனால், இந்த வசதியால் பிரச்சனையும் இருக்கிறது. முகப்பு பக்கத்திலிருந்து யாராவது பதிவை முழுவதும் படிப்பதற்காக தலைப்பை க்ளிக் செய்தாலும் அது நாம் கொடுத்துள்ள  முகவரிக்கு சென்றுவிடும்.

இதையும் படிங்க:  யூட்யூப் Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைக்க

17 thoughts on “பதிவிற்கு தொடர்பில்லாத தலைப்பு”

  1. ஒரு பதிவிற்கு மற்றொரு யுஆரெல் முகவரி கொடுப்பதன் பயனை எதற்காக கூகுள் கொடுக்க வேண்டும் என்று யாமும் தேடிக்கொண்டிருக்கின்றோம்..

    தேடுபொறிகளுக்காக இதை அமைக்கவில்லை என்பது மட்டும் உறுதி,,

    தொடருங்கள் சகோ,,