தேடுவது எப்படி? பாடம் நடத்தும் கூகுள்

நல்லா பாருங்க, கூகுள்காரங்களே ஆப்பிள் லேப்டாப் பயன்படுத்துறாங்க..

தேடு இயந்திரங்களில் முன்னிலையில் இருக்கும் கூகுள், தனது பயனாளர்கள் கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை நடத்துகிறது. இலவசமாக நடைபெறும் இந்த பாடத்தில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழையும் வழங்குகிறது.

இந்த பாடத்தில் நீங்கள் சேர்வதற்கு www.powersearchingwithgoogle.com/register என்ற முகவரியில் உங்கள் கூகுள் கணக்கு மூலம் பதிவு செய்ய வேண்டும்.

  • 50 நிமிட அமர்வுகளாக ஆறு வகுப்புகள் (வீடியோ மூலம்) நடைபெறும்.
  • புதிய திறன்களை அறிந்துக் கொள்வதற்காக பரிமாற்ற நடவடிக்கைகள் (Interactive Activities) மூலம் பயிற்சி அளிக்கப்படும்
  • Google Groups, Google+ மற்றும் Google+ Hangout மூலம் மற்றவர்களுடன் தொடர்புக் கொல்லும் வசதி
  • பாட இறுதியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அச்சிடக் கூடிய சான்றிதழ்கள் (Printable Certificate) மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
பாடங்கள் (Updated):
  1. Introduction
  2. Filter Image Results by Image
  3. How search works
  4. The art of keyword choices
  5. word order Matters
  6. Finding text on web page

இந்த பாடத்திட்டத்தில் பதிவு செய்ய ஜூலை  16 கடைசி தேதியாகும். இதன் முதல் வகுப்பு நேற்று தொடங்கியது. புதிய வகுப்புகள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் தொடங்கும்.

இந்த பாடத்திட்டம் ஜூலை 23-ஆம் தேதி முடிவடைகிறது.

இதையும் படிங்க:  உங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

14 thoughts on “தேடுவது எப்படி? பாடம் நடத்தும் கூகுள்”

  1. ///நல்லா பாருங்க, கூகுள்காரங்களே ஆப்பிள் லேப்டாப் பயன்படுத்துறாங்க..///இன்னும் கூகிள் லேப்டாப் உருவாக்கவில்லை உருவாக்கிய பின்னர் அவங்க லேப்டாப்பை பயன்படுத்துவாங்க…உடனே வேற நிறுவன லேப்டாப் பயன்படுத்த வேண்டியது தானே என்று கேட்க்க கூடாது…எதிரியை கவர எதிரியின் பொருளையே பயன்படுதுறான் போல…