தமிழில் பேசி தமிழில் தேடுங்கள் – கூகுள் தமிழ்

கூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே! அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறியும் கூகுள் இந்திய மொழிகளுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போது குரல் தேடல் (Voice search) தயாரிப்பில் தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளையும், சிங்கள மொழியையும் சேர்த்துள்ளது.
google tamil
இதன் மூலம் தட்டச்சு செய்வதற்கு பதிலாக குரல் மூலமாகவே தமிழில் பேசி தமிழில் தேடலாம்.
மேலும் உங்கள் ஆண்டிராய்ட் மொபைல்களில் GBoard அப்ளிகேசன் மூலம் தமிழில் பேசி தமிழில் தட்டச்சலாம். விரைவில் இவ்வசதி கூகுள் ட்ரான்ஸ்லேட் மற்றும் பிற தயாரிப்புகளில் கொண்டுவரப்படும் எனவும் கூகிள் தெரிவித்துள்ளது.
இது தொடக்கம் என்பதால் குரல் வழி தேடல்/தட்டச்சில் பிழைகள் வரலாம். ஆனா போகப்போக இவ்வசதி மேம்படுத்தப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இது பற்றிய செய்தியை படிக்க: Type less, talk more
இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-17]

4 thoughts on “தமிழில் பேசி தமிழில் தேடுங்கள் – கூகுள் தமிழ்”