கூகுள் பே மூலம் தங்கம் வாங்கலாம்

கூகுள் பே டிஜிட்டல் வாலட் மூலம் இனி நீங்கள் தங்கம் வாங்கலாம், வாங்கிய தங்கத்தை விற்கலாம்.

பேடிஎம் (Paytm), போன்பே(PhonePe) போன்ற இந்திய ஆன்லைன் கட்டண சேவைகளுக்கு போட்டியாக கடந்த வருடம் Google Pay என்னும் புதிய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம்.

google pay gold

மற்ற சேவைகளைப் போல கூகுள் பே மூலம் நீங்கள் மொபைல் ரீசார்ஜ், மின்கட்டணம், தொலைப்பேசி கட்டணம், டிடிஹெச் கட்டணம் போன்றவற்றை செலுத்தலாம். மேலும் சில ஆன்லைன் தளங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கலாம்.

சமீபத்தில் ரயில் டிக்கெட்களை கூகுள் பே ஆப் மூலம் பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த ஆப் மூலம் 24 கேரட் தங்கம் வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

google pay gold

google pay gold

google pay gold

நீங்கள் வாங்கும் தங்கம் உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த தங்கத்தை நீங்கள் விரும்பிய நேரத்தில் கூகுள் ஆப் மூலமாகவே விற்கலாம். தங்கத்தின் வாங்கும், விற்கும் விலை சந்தை விலைக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே இருக்கும்.

தற்போது மற்ற நிறுவனங்களைவிட கூகுள் பே ஆப்பிள் தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கிறது. நீங்கள் வாங்குவதாக இருந்தால் விலை பார்த்து வாங்கவும்.

கூகுள் பே மூலம் நீங்கள் செய்யும் சில பண பரிவர்த்தனைகளை Cashback மற்றும் ஸ்க்ராட்ச் கார்ட் கொடுப்பார்கள்.

கூகுள் பே ஆப் டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

ஆப்பை நிறுவியப்பிறகு Referral பக்கத்திற்கு சென்று iA50h என்ற (என்னுடைய) referral code கொடுத்தால், நீங்கள் அந்த ஆப்பிள் முதல் பரிவர்த்தனை செய்த பிறகு 51 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க:  பதில் - பிரச்சனை - மன்னிப்பு