கூகிள் +1 பட்டன் – புதிய வேகம், புதிய வசதி

இணையம் என்னும் ஆடுகளத்தில் ஒருவரையொருவர் முந்த பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர். அதன்படி, பேஸ்புக்கின் Like பட்டனுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்ட கூகிள் நிறுவனம், சமீபத்தில் +1 பட்டனை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது Load ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

பொதுவாக ஒரு இணைய பக்கம் Load ஆகும் போது, அதிலுள்ள Java Script, Html போன்ற நிரல்கள் ஒவ்வொன்றாக தான் Load ஆகும். அதில் ஏதாவது ஒரு நிரல் Load ஆக நேரம் எடுத்துக் கொண்டால், அது முடியும் வரை  மற்ற நிரல்கள் Load ஆகாது. அதனால் தான் சமீபத்தில் தமிழ்மணம் ஓட்டு பட்டையின் நிரலில் பிரச்சனை ஏற்பட்ட பொழுது, நமது வலைப்பக்கங்கள் Load ஆக அதிக நேரமானது.

இதே பிரச்சனை தான் கூகிள் ப்ளஸ் ஒன் பட்டனிலும் ஏற்பட்டது. தற்போது அதனை சரி செய்துள்ளது கூகுள். எப்படியென்றால், கூகிள் +1 பட்டன் லோட் ஆகும் அதே சமயத்தில், மற்ற நிரல்களும் லோட் ஆகும். இதனால் நமது பக்கம் லோட் ஆவதில் தாமதம் ஆகாது.

புதிய கூகிள் +1 Button-ஐ நிறுவ:

1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template பக்கத்திற்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.

2. பிறகு Edit Template என்பதை க்ளிக் செய்து, Expand Widget Templates என்ற இடத்தில் Check செய்துக் கொள்ளுங்கள்.

3. பிறகு

<data:post.body/>

என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

<g:plusone></g:plusone>

<script type=”text/javascript”>
  (function() {
    var po = document.createElement(‘script’); po.type = ‘text/javascript’; po.async = true;
    po.src = ‘https://apis.google.com/js/plusone.js’;
    var s = document.getElementsByTagName(‘script’)[0]; s.parentNode.insertBefore(po, s);
  })();
</script>

4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

பிற்சேர்க்கை: இந்த பட்டன் அல்லாமல் உங்களுக்கு பிடித்த பட்டனை வைக்க http://www.google.com/intl/en/webmasters/+1/button/index.html என்ற தளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளவும்.

பழைய Code-ஐ நிறுவியுள்ளவர்கள் செய்ய வேண்டியது:

1. Edit Template பக்கத்திற்கு சென்று

<script src=’https://apis.google.com/js/plusone.js’ type=’text/javascript’/>

என்ற code-ஐ தேடி, அதனை Delete செய்யவும்.
2. பிறகு பின்வரும் நான்கு நிரல்களில் எந்த நிரல் உங்கள் டெம்ப்ளேட்டில்  உள்ளதோ அதனை நீக்கவும்.

<g:plusone></g:plusone>

<g:plusone size=”small”></g:plusone>

<g:plusone size=”medium”></g:plusone>

<g:plusone size=”tall”></g:plusone>

3. பிறகு Save Template என்பதை க்ளிக்செய்யவும்.

இதையும் படிங்க:  ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்..

இப்பொழுது  உங்கள் ப்ளாக்கை பாருங்கள். +1 பட்டன் தெரியவில்லையெனில், முதலில் சொன்னது போல புதிய Code-ஐ நிறுவவும்.


புதிய வசதி:

கூகிள் +1 பட்டனிடம் உங்கள் Cursor-ஐ கொண்டு சென்றால், நீங்கள் +1 செய்துள்ளீர்கள் என்று மட்டும் தான் முதலில் காட்டியது. ஆனால் தற்போது வேறு யார் யார் +1 செய்துள்ளார்கள் என்பதை காடும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் இது சோதனை முயற்சியாக தான் செயல்படுகிறது. இந்த வசதியை பெற நீங்கள் http://www.google.com/+/learnmore/platform-preview/ என்றமுகவரிக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு Confirmation மெயில் வரும். அதன் மூலம் உறுதி செய்தால், நீங்கள் இந்த வசதியை பெறலாம்.

Updated:

மன்னிக்கவும். பலருக்கு கூகிள் ப்ளஸ் ஒன் பட்டன் தெரியவில்லை என்று சொன்னார்கள். அப்படி தெரியவில்லையெனில் கீழ்வரும் Code-ஐ, எந்த இடத்தில் ப்ளஸ் ஒன் பட்டன் வைக்க வேண்டுமோ அங்கு வைக்கவும்.

<script type=”text/javascript” src=”https://apis.google.com/js/plusone.js”></script>
<g:plusone></g:plusone>

33 thoughts on “கூகிள் +1 பட்டன் – புதிய வேகம், புதிய வசதி”

 1. //ஆமினா said… 4

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

  நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!//

  வ அலைக்கும் ஸலாம்.

  நன்றி சகோதரி!

 2. அன்பு நண்பரே !!! நான் கூகுல் + மற்றும் பேஸ்புக்கில் புத்திதாக இணைந்துள்ளேன், எனக்கு அதன் ஆப்பரேட்டிங் தெரியவில்லை அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஏதாவது தளங்கள் உள்ளதா ஆம் எனில் அதன் லிங்க் தரவும்


  ! ஸ்பார்க் கார்த்தி !

 3. ஆஹா கூகுல் போகும் வேகம் பார்த்தால் ஃபேஸ்புக் கிட்ட நெருங்க முடியாது போலருக்குதே .. கூகுலுக்கு வாழ்த்துக்கள் ..உங்களூக்கு நன்றிகள்

 4. //! ஸ்பார்க் கார்த்தி @ said… 19

  அன்பு நண்பரே !!! நான் கூகுல் + மற்றும் பேஸ்புக்கில் புத்திதாக இணைந்துள்ளேன், எனக்கு அதன் ஆப்பரேட்டிங் தெரியவில்லை அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஏதாவது தளங்கள் உள்ளதா ஆம் எனில் அதன் லிங்க் தரவும்


  ! ஸ்பார்க் கார்த்தி !
  //

  கூகிள் ப்ளஸ் பற்றி தெரிந்துக் கொள்ள: http://mashable.com/2011/07/16/google-plus-guide/

  ஃபேஸ்புக் பற்றி தெரிந்துக் கொள்ள: http://mashable.com/guidebook/facebook/

 5. //மாய உலகம் said…
  ஆஹா..தேவையான பதிவு நன்றிகள் நண்பா//

  //ஆஹா கூகுல் போகும் வேகம் பார்த்தால் ஃபேஸ்புக் கிட்ட நெருங்க முடியாது போலருக்குதே .. கூகுலுக்கு வாழ்த்துக்கள் ..உங்களூக்கு நன்றிகள்
  //

  நன்றி நண்பா!

 6. வணக்கம்..
  தங்களுடைய வலைப்பூ மிகவும் நன்றாக உள்ளது. To be in short, it is just user-friendly. Keep going…
  Can you help me in using google +1?

  when i embed the coding, after saving it, the coding changes as below:

  Can u guide me how to rectify this error?.
  I will be thankful if u do so…

 7. //நல்லவன் said… 27

  வணக்கம்..
  தங்களுடைய வலைப்பூ மிகவும் நன்றாக உள்ளது. To be in short, it is just user-friendly. Keep going…
  //

  நன்றி நண்பா!

  // Can you help me in using google +1?

  when i embed the coding, after saving it, the coding changes as below:

  Can u guide me how to rectify this error?.
  I will be thankful if u do so…//

  தற்போது embed code-ஐ கூகிள் ப்ளஸ் support செய்வதில்லை. நீங்கள் குறிப்பிட்ட embed தெரியவில்லை நண்பா!