கூகிள்+ பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்க..

கூகிள் பிளஸ் தளம் அறிமுகப்படுத்தியுள்ள கூகிள்+ பக்கத்தை பற்றியும், அதனை நம் தளத்திற்கு உருவாக்குவது எப்படி? என்றும் கடந்த பதிவில் பார்த்தோம். தற்போது பேஸ்புக் லைக் பாக்ஸ் போன்ற கூகிள்+ பேட்ஜ் (Google+ Badge) நமது தளத்தில் எப்படி வைப்பது? என்று பார்ப்போம். இதன் மூலம் கூகுள் பிளஸ் பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்கச் செய்யலாம்.

1. முதலில் கூகிள் கணக்கில் உள்நுழைந்து https://developers.google.com/+/plugins/badge/preview என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

2. அங்கு Link to this Google+ page என்ற இடத்தில் உள்ள பெட்டியில் உங்கள் கூகிள்+ பக்கத்தின் ஐடி நம்பரை கொடுக்கவும்.

உதாரணத்திற்கு  உங்கள் பக்க முகவரி https://plus.google.com/106500982876401475287/ என்று இருந்தால் அதில் 106500982876401475287 என்பது உங்கள் ஐடி எண் ஆகும்.

3. ஐடி எண்ணை கொடுத்ததும் Preview காட்டும். அதன் கீழே உங்களுக்கான இரண்டு நிரல்களை காட்டும்.

<!– Place this tag in the <head> of your document–>

<link href=”https://plus.google.com/106500982876401475287″ rel=”publisher” /><script type=”text/javascript”>
(function()
{var po = document.createElement(“script”);
po.type = “text/javascript”; po.async = true;po.src = “https://apis.google.com/js/plusone.js”;
var s = document.getElementsByTagName(“script”)[0];
s.parentNode.insertBefore(po, s);
})();</script>

<!– Place this tag where you want the badge to render–>
<g:plus href=”https://plus.google.com/106500982876401475287″ size=”badge”></g:plus>

<!– Place this tag in the <head> of your document–> என்பதற்கு கீழே உள்ள நிரல்களில் ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை இணைக்க வேண்டாம். அதை இணைத்தால் வேலை செய்யவில்லை. நீல நிறத்தில் உள்ள நிரலை மட்டும் உங்கள் ப்ளாக்கில் Edit Html பகுதிக்கு சென்று <head> என்பதற்கு பின்னால் அல்லது </head> என்பதற்கு முன்னால் பேஸ்ட் செய்து Save Template பட்டனை க்ளிக் செய்யவும். மாற்றம் செய்வதற்கு முன்னாள் உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு <!– Place this tag where you want the badge to render–> என்பதற்கு கீழே உள்ள நிரலை காப்பி செய்து, உங்கள் ப்ளாக்கில் Layout பகுதிக்கு சென்று, Add a gadget என்பதை க்ளிக் செய்து, Html/JavaScript என்பதை தேர்வு செய்து அங்கு பேஸ்ட் செய்து Save பட்டனை க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான்! இனி உங்கள் ப்ளாக்கில் கூகுள் ப்ளஸ் பேட்ஜ் தெரியும்.உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் அதனை பார்த்து எளிதாக இணைந்துக் கொள்வார்கள்.

இந்த பேட்ஜில் உங்கள் பக்கத்தை +1 செய்தவர்களின் படங்களை மட்டும் தான் காட்டும். இணைந்தவர்களின் படத்தை காட்டாது.

இதையும் படிங்க:  இலவசமாக பதிவேற்ற Google Sites

இதன் அளவை மாற்றும் வசதியை தற்போது தரவில்லை. பிறகு தரலாம்.

கவனிக்க: வழக்கம் போல இதை சோதனை முறையில்  மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் ப்ளஸ் தளம் அறிமுகமானபோது Google platform-preview என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது. அதில் இணைந்தவர்களுக்கு கூகிள் ப்ளஸ் புதுவசதிகளை சோதனை முறையில் காட்டும். இந்த கூகிள்+ பேட்ஜ் வசதியையும் அதில் உள்ளவர்களுக்கு மட்டும் தற்போது சோதனை முறையில் காட்டுகிறது. உங்கள் தளத்தில் இதனை வைத்திருந்தாலும் கூடஅது எல்லாருக்கும் தெரியாது.

Google platform-preview-ல் இணைய https://www.google.com/+/learnmore/platform-preview/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் மின்னஞ்சலை இணைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் https://groups.google.com/group/google-plus-developers என்ற முகவரிக்கு சென்று அதன் கூகுள் குரூப்பிலும் இணைந்துக் கொள்ளுங்கள். புதுவசதி வந்தால் உடனடியாக மின்னஞ்சல் அனுப்புவார்கள்.

Sidebar-ல்கூகிள் ப்ளஸ் பேட்ஜ் வைத்துள்ளேன். உங்களுக்கு தெரிகிறதா என்று சொல்லவும்.  விருப்பமிருந்தால் https://plus.google.com/106500982876401475287/ என்ற முகவரிக்கு சென்று ப்ளாக்கர் நண்பன் பக்கத்தில் இணைந்து +1 செய்யவும்.

15 thoughts on “கூகிள்+ பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்க..”

  1. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்… தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்… வாழ்வு செழிக்கட்டும்… மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்… வெற்றிகள் குவியட்டும்… மனம் கனிந்த வாழ்த்துக்கள்…

  2. //Sidebar-ல்கூகிள் ப்ளஸ் பேட்ஜ் வைத்துள்ளேன். உங்களுக்கு தெரிகிறதா என்று சொல்லவும். //

    நண்பரே கூகுள் APPLICATIONS ல் வாசிப்பவர் இணைந்திருக்கும் போது மட்டுமே இந்த badge வேலை செய்கிறது.

    அப்படி இல்லாத பட்சத்தில் தெரியவில்லை (உங்களுக்கும் அப்படிதான் கூகுளுக்கு வெளியில் இருக்கும் போது தெரிவதில்லை)

    எனக்கும் கூட இதே ப்ராப்ளம் உள்ளது.எனினும் நானும் முன்னரே உறுப்பினர் என்பதால் இதுபற்றிய அறிவிப்பு கூட மெயிலில் வந்தது..

  3. //வே.சுப்ரமணியன். said… 3

    பயனுள்ள ஆலோசனை. அனுபவ பகிர்வுக்கு நன்றி!//

    நன்றி நண்பா!

  4. //மாய உலகம் said… 4

    பயனுள்ள குறிப்பு… பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா!
    //

    நன்றி நண்பா!

  5. //சம்பத் குமார் said… 6

    பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே..
    //

    ///Sidebar-ல்கூகிள் ப்ளஸ் பேட்ஜ் வைத்துள்ளேன். உங்களுக்கு தெரிகிறதா என்று சொல்லவும். //

    நண்பரே கூகுள் APPLICATIONS ல் வாசிப்பவர் இணைந்திருக்கும் போது மட்டுமே இந்த badge வேலை செய்கிறது.

    அப்படி இல்லாத பட்சத்தில் தெரியவில்லை (உங்களுக்கும் அப்படிதான் கூகுளுக்கு வெளியில் இருக்கும் போது தெரிவதில்லை)

    எனக்கும் கூட இதே ப்ராப்ளம் உள்ளது.எனினும் நானும் முன்னரே உறுப்பினர் என்பதால் இதுபற்றிய அறிவிப்பு கூட மெயிலில் வந்தது..//

    விரிவான தகவலுக்கு நன்றி நண்பரே!