Children’s Online Privacy Protection Act (COPPA) என்னும் அமெரிக்க சட்டத்தின்படி குழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது யூட்யூப் நிறுவனம். இதன்படி ஏற்கனவே உங்கள் சேனல்களில் இருக்கும் வீடியோக்கள், இனி அப்லோட் செய்யப்போகும் வீடியோக்கள் “குழந்தைகளுக்கானதா? (Made for Kids)” என்று நீங்கள் குறிப்பிடவேண்டும்.
கீழ்வரும் காரணிகள் உங்கள் வீடியோ குழந்தைகளுக்கானதா? என்பதை தீர்மானிக்கின்றன,
- குழந்தைகளுக்கான அல்லது குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள்
- குழந்தைகள் உள்ள வீடியோக்கள்
- குழந்தைகளுக்கான கார்ட்டூன் மற்றும் பொம்மைகள் உள்ள வீடியோக்கள்
- குழந்தைகளுக்கான பாடல்கள் உள்ள வீடியோக்கள்
இதில் குழந்தைகள் என்பது 13 வயதிற்கு உட்பட்டவர்களை குறிக்கும்.
உங்கள் பார்வையாளர்கள் குழந்தைகளா? என்பதை இரண்டுவிதமாக குறிப்பிடலாம். ஒன்று, உங்கள் சேனலை Made for Kids என்று குறிப்பிடலாம். அல்லது ஒவ்வொரு வீடியோக்களிலும் தனித்தனியாக குறிப்பிடலாம்.
உங்கள் சேனல் பார்வையாளர்களை தேர்வு செய்வதற்கு,
1. https://studio.youtube.com/ என்ற முகவரிக்கு சென்று உள்நுழையுங்கள்
2. பிறகு Settings ==> Channel ==> Advanced Settings பகுதிக்கு செல்லுங்கள்.
3. அங்கு Audience என்ற இடத்தில் மூன்று தேர்வுகள் இருக்கும்.
- “Yes, set this channel as made for kids. I always upload content that’s made for kids.”
- “No, set this channel as not made for kids. I never upload content that’s made for kids.”
- “I want to review this setting for every video.”
இதில் சரியானதை தேர்வு செய்யுங்கள்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யுங்கள்.
உங்கள் வீடியோ பார்வையாளர்களை தேர்வு செய்வதற்கு,
நீங்கள் வீடியோ அப்லோட் செய்யும்போது Basic Info என்பதில் Audience என்ற அமைவு இருக்கும். அதில் “Yes, it’s made for kids”, “No, it’s not made for kids” என்று இரண்டு தேர்வுகள் இருக்கும். சரியானதை தேர்வு செய்யுங்கள்.
ஏற்கனவே அப்லோட் செய்த வீடியோக்களில் Edit பகுதிக்கு சென்று தேர்வு செய்யலாம்.
Made for Kids என்பதை தேர்வு செய்ய யூட்யூப் ஸ்டுடியோவில் (https://studio.youtube.com/) மட்டுமே முடியும்.
Made For Kids வீடியோக்களில் வரப்போகும் மாற்றங்கள்:
ஜனவரி 2020 முதல் குழந்தைகளுக்கான சேனல்/வீடியோக்களில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது யூட்யூப்.
Made for Kids வீடியோக்கள்:
குழந்தைகளுக்கான வீடியோ மற்றும் லைவ் வீடியோக்களுக்கு பின்வரும் வசதிகள் இருக்காது.
- Personal advertising
- Comments
- Channel branding watermark
- Donate button
- Info cards or End screens
- Live Chat or Live Chat Donations
- Playback in the Miniplayer
- Super Chat or Super Stickers
- Save to playlist
Made for Kids சேனல்கள்:
உங்கள் சேனலை Made for Kids என்று கொடுத்திருந்தால் பின்வரும் வசதிகள் கிடைக்காது.
- Stories
- The Community tab in the Channel page
- Notification bell
- Save to Watch later
- Save to playlist
- Channel membership (நவம்பர் 2019 முதல்)
- Merch Shelf (நவம்பர் 2019 முதல்)
இதை நீங்கள் செய்ய தவறினாலும், தவறாக செய்தாலும், யூட்யூப் இயந்திர வழி கற்றல் மூலம் கண்டுபிடித்துவிடும். இதனால் உங்கள் கணக்கில் யூட்யூப் நடவடிக்கை எடுக்கலாம்.
யூட்யூபில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட வீடியோக்களில் குழந்தைகளுக்கான வீடியோக்களும் ஒன்றாகும். பல குழந்தைகளுக்கான சேனல்கள் யூடியூப்பில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும். அமெரிக்க சட்டத்திற்கு கட்டுப்பட்டு யூட்யூப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Useful information bro