கணினியில் மென்பொருளை நீக்க [Video Post]

நம்முடைய கணினிகளில் அதிகமான மென்பொருள்கள் இருந்தால் கணினியின் வேகம் குறைந்துவிடும். அதனால் தேவையில்லாத மென்பொருள்களை அவ்வப்போது நீக்கிவிடுவது நல்லது. எப்படி நீக்குவது? என்று பார்ப்போம்.

இது ஒரு வீடியோ பதிவு ஆகும். வீடியோ பதிவு என்பது…. வேண்டாம், பிறகு அடிக்க வருவீர்கள். கீழே உள்ள வீடியோவை (அவசியம்) பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.

How to remove unwanted softwares on windows 7?

வீடியோ பார்க்க முடியாதவர்களுக்காக (மட்டும்):

1. My Computer சென்று Control Panel பகுதிக்கு செல்லுங்கள்.

2. (Windows 7-ல்) Programs and Features என்பதை தேர்வு செய்யுங்கள்.

3. நீக்க வேண்டிய மென்பொருளை Select செய்து Right Click செய்யுங்கள்.

4. Uninstall என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். அந்த Software நீக்கப்பட்டுவிடும்.

டிஸ்கி: முடிந்தவரை வீடியோ பதிவுகளின் தலைப்பில் Video Post என்று சேர்க்கிறேன். இதனால் வீடியோ பதிவுகள் பிடிக்காதவர்கள் ஏமாறாமல் இருக்கலாம்.

இதையும் படிங்க:  நான் ********** உணர்கிறேன் [Video Post]

13 thoughts on “கணினியில் மென்பொருளை நீக்க [Video Post]”

  1. //
    முடிந்தவரை வீடியோ பதிவுகளின் தலைப்பில் Video Post என்று சேர்க்கிறேன். இதனால் வீடியோ பதிவுகள் பிடிக்காதவர்கள் ஏமாறாமல் இருக்கலாம்.
    //

    இந்த மாதிரி நல்ல மனசு உள்ள பதிவரை வேற எங்கேயாவது பார்க்க முடியுமா? 🙂

  2. நன்றி சகோ.

    //முடிந்தவரை வீடியோ பதிவுகளின் தலைப்பில் Video Post என்று சேர்க்கிறேன். இதனால் வீடியோ பதிவுகள் பிடிக்காதவர்கள் ஏமாறாமல் இருக்கலாம்.//

    :-))))