பதிவர்களில் யாரும் தங்கள் வாசகர்களை பற்றிய விவரங்களை (Stats) அறியாமல் இருந்திருக்க மாட்டார்கள். தங்கள் ப்ளாக்கிற்கு எங்கிருந்து வருகிறார்கள்? எந்த தளங்கள் நமக்கு பரிந்துரை செய்கிறது? தேடுபொறியில் எந்த வார்த்தைகளை தேடுவதன் மூலம் வருகிறார்கள்? என்பதனை தெரிந்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ப்ளாக்கை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
அவ்வாறு தெரிந்துக் கொள்வதற்கு Blogger Stats பயன்படுகிறது. ஆனால் அதில் உள்ள குறைபாடு, முதல் பத்து விவரங்களை மட்டும் தான் காட்டும். முழு விவரங்களை பார்ப்பதற்கு கூகிள் அனலிடிக்ஸ் தளம் நமக்கு பெரிதும் உதவுகின்றன. உங்கள் ப்ளாக்கை அதில் இணைக்க ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவை பார்க்கவும்.
தற்போது கூகுள் அனலிடிக்ஸ் தளம் நமது தளத்தில் ஆன்லைன் வாசகர்களின் விவரங்களை உடனுக்குடன் பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு Real-Time (Beta) என்று பெயரிட்டுள்ளது. தன்னுடைய மற்ற தளங்களை போல அனலிடிக்ஸ் தளத்தின் தோற்றத்தையும் மாற்றியுள்ளது கூகிள். இந்த Real-Time வசதி புதிய தோற்றத்தில் மட்டும் தான் இருக்கும். பழைய தோற்றத்தில் நீங்கள் இருந்தால், மேலே New Version என்பதை க்ளிக் செய்து புதிய தோற்றத்திற்கு மாறிக் கொள்ளுங்கள்.
அந்த பக்கத்தில் மேலே Dashboards என்னும் Tab-ஐ க்ளிக் செய்து, Sidebar-ல் Real-Time என்பதற்கு கீழே Overview என்பதை க்ளிக் செய்யுங்கள்.
மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று விவரங்களை காட்டும். இதன் மூலம் பின்வரும் தகவல்களை நாம் அறிந்துக் கொள்ளலாம்.
மேலே உள்ள படத்தில் பார்ப்பது என்னுடைய இருப்பிடம் (அப்படீன்னு கூகுள் சொல்கிறது). படத்தில் உள்ள +25.271139 +55.307484 என்பது Latitude & Longitude ஆகும். இதன் மூலம் தான் உலக வரைப்படத்தில் ஒரு இடத்தை கணிக்க முடியும். இந்த எண்களை + குறியையும் சேர்த்து maps.google.com தளத்தில் தேடினால் இருப்பிடத்தை காட்டும்.
இந்த வசதியால் வாசகர்கள் (தற்போது) பயப்பட வேண்டாம். ஏனெனில் நாம் இருக்கும் நாட்டினை சரியாக சொன்னாலும், இருக்கும் இடத்தை தவறாகவே சொல்கிறது.
Traffic Sources:
வாசகர்கள் எங்கிருந்து நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்ற விவரங்களை காட்டுகிறது.
Content:
தற்போது எந்த பக்கத்தில் வாசகர்கள் இருக்கிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? என்ற விவரங்களை காட்டுகிறது.
வழக்கம் போல கூகிள் தளம் இந்த வசதியை சிலருக்கு மட்டும் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லைஎன்றால், இங்கே க்ளிக் செய்து பதிவு செய்துக் கொள்ளுங்கள். நான் கடந்த மாதம் 29-ஆம் தேதி பதிவு செய்தேன். நேற்று தான் இவ்வசதி எனக்கு வந்தது.
எனக்கு இந்த வசதி பிடித்துள்ளது. உங்களுக்கு?
சலாம் சகோ! அருமை.
//எனக்கு இந்த வசதி பிடித்துள்ளது. உங்களுக்கு?// ரொம்பவே பிடிச்சிருக்கு 🙂 நன்றி சகோ.
//இந்த வசதியால் வாசகர்கள் (தற்போது) பயப்பட வேண்டாம். ஏனெனில் நாம் இருக்கும் நாட்டினை சரியாக சொன்னாலும், இருக்கும் இடத்தை தவறாகவே சொல்கிறது//
அது ஒண்ணுதான் கொஞ்சம் குறையாக உள்ளது. இருக்கும் இடத்தையும் சரியா சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். கள்ளப் பேர்வழிகள்தான் பயப்படணும் 🙂 நாமெல்லாம் பயப்பட எதுவுமில்லை.
எனக்கும் பிடித்துள்ளது.நல்ல அருமையான தகவலை தருகிறீர்கள்.
இண்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது நண்பரே
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..
எனக்கு இன்னும் activiate ஆகவில்லை.பதிவு செய்து வைத்துள்ளேன்.பொறுத்திருந்து பார்க்கிறேன்
நன்றியுடன்
சம்பத்குமார்
சகோதரர் வைரை சதீஷ்,
சலாம்…
வோட் எண்ணுக்கு கீழே உள்ள "இன்டலி" என்ற எழுத்தின் மீது சுட்டுங்கள். உங்கள் username, password கேட்கும். கொடுங்கள்..அவ்வளவுதான், உங்கள் ஒட்டு பதிவு செய்யப்பட்டுவிடும்.
முன்பு போல, ஒரு எண்ணை காட்டி (eg.2) பின்பு அதன் மேல் சுட்டியவுடன் 3 என்று மாறுமே, அப்படி இல்லை இப்போது.
"இன்டலி" என்ற எழுத்தின் மீது சுட்டினாலே உங்கள் வோட்டு பதிவு செய்யப்பட்டு விடும், இன்ஷா அல்லாஹ்..
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
நல்ல தகவல்…
நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொள்ள இத்தகவல் துணைபுரியும்..
நன்றி
Useful Info..
Thanks for Sharing…
பயனுள்ள தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி… இதே போன்ற வசதியை http://histats.com என்ற தளமும் தருகிறது.. இது ஆன்லைன் வாசகர்களை காட்டும் மற்ற வசதிகளில் கூகிள் அனலிடிக்ஸ் அளவுக்கு இருக்கிறதா என தெரியவில்லை ஏனெனில் நான் கூகிள் அனலிடிக்ஸ் பயன்படுத்தியதில்லை இந்த தளத்தை தான் பயன்படுத்துகிறேன்…
very useful
நண்பா அவசியம் இது தேவையான பதிவு…பகிர்வுக்கு நன்றி நண்பா…. ஃபீட்ஜிட் வித் லொக்கேசனோட வருகிறதே நண்பா… அது வேறையா..
பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் தகவல் ….
நன்றி நண்பரே ….
//இருக்கும் இடத்தை தவறாகவே சொல்கிறது.//
என்ன ஒரு வில்லத்தனம் 🙂
ஆஹா பயனுள்ள தகவல் நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே
பயனுள்ளதாக இருக்கிறது
nice information Basith… I was using google analytics sometime before and stopped it when I was fine-tuning the wesbite. I get most of the information from Blogger Stats itself…
I will definitely use, Google Analytics when I move to a self-hosted domain. 🙂
Thanks Bro.
அற்புதமான தகவல்களை தேடித்தரும் பிளாக்கர் நண்பனுக்கு நன்றி!
கூகிள் அக்கோண்ட் மூலமா பிலாக்கர் மூலமா கமெண்ட் போட முடியல
முன்புள்ள் அனானி கமெண்ட் நான் தான் போட்டேன்
ஜலீலா
முன்பு இதை அடிக்கடி பார்த்து கொண்டே இருப்பேன்,
ஆனால் இப்ப அவ்வளவா செக் பண்ணுவதில்லை
//வைரை சதிஷ் said… 1
எனக்கும் பிடித்துள்ளது.நல்ல அருமையான தகவலை தருகிறீர்கள்.
//
நன்றி நண்பா!
//இண்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது நண்பரே//
//
பதில்:
//வோட் எண்ணுக்கு கீழே உள்ள "இன்டலி" என்ற எழுத்தின் மீது சுட்டுங்கள். உங்கள் username, password கேட்கும். கொடுங்கள்..அவ்வளவுதான், உங்கள் ஒட்டு பதிவு செய்யப்பட்டுவிடும்//
//அஸ்மா said… 2
சலாம் சகோ! அருமை.
//எனக்கு இந்த வசதி பிடித்துள்ளது. உங்களுக்கு?// ரொம்பவே பிடிச்சிருக்கு 🙂 நன்றி சகோ.
//இந்த வசதியால் வாசகர்கள் (தற்போது) பயப்பட வேண்டாம். ஏனெனில் நாம் இருக்கும் நாட்டினை சரியாக சொன்னாலும், இருக்கும் இடத்தை தவறாகவே சொல்கிறது//
அது ஒண்ணுதான் கொஞ்சம் குறையாக உள்ளது. இருக்கும் இடத்தையும் சரியா சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். கள்ளப் பேர்வழிகள்தான் பயப்படணும் 🙂 நாமெல்லாம் பயப்பட எதுவுமில்லை.//
நன்றி சகோதரி! நீங்க சொல்றதும் சரி தான்..
🙂 🙂 🙂
@Aashiq Ahamed
வ அலைக்கும் ஸலாம்.
தங்கள் விளக்கத்திற்கு நன்றி சகோ.!
//சம்பத்குமார் said… 4
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..
எனக்கு இன்னும் activiate ஆகவில்லை.பதிவு செய்து வைத்துள்ளேன்.பொறுத்திருந்து பார்க்கிறேன்
நன்றியுடன்
சம்பத்குமார்//
நன்றி நண்பரே!
//விக்கியுலகம் said… 5
நன்றி//
நன்றி நண்பா!
//கவிதை வீதி… // சௌந்தர் // said… 6
நல்ல தகவல்…
நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொள்ள இத்தகவல் துணைபுரியும்..//
நன்றி நண்பா!
//Heart Rider said… 7
பயனுள்ள தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி… இதே போன்ற வசதியை http://histats.com என்ற தளமும் தருகிறது.. இது ஆன்லைன் வாசகர்களை காட்டும் மற்ற வசதிகளில் கூகிள் அனலிடிக்ஸ் அளவுக்கு இருக்கிறதா என தெரியவில்லை ஏனெனில் நான் கூகிள் அனலிடிக்ஸ் பயன்படுத்தியதில்லை இந்த தளத்தை தான் பயன்படுத்துகிறேன்…//
தகவலுக்கு நன்றி நண்பா!
அருமையான வசதி. கூகிள் பீட்டா புரொகிராமில் பதிந்திருக்கிறேன். தங்கள் வலைப்பூ அனைத்து தமிழ் வலைப் பதிவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமெனச் சொன்னால் அது மிகையாகாது.
/..முன்பு போல, ஒரு எண்ணை காட்டி (eg.2) பின்பு அதன் மேல் சுட்டியவுடன் 3 என்று மாறுமே, அப்படி இல்லை இப்போது.
ada ivlo thaana. thanks for info.