ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் – ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய பதிப்பு நேற்று வெளியிடப்பட்டது. 512MB Ram-ஐக் கொண்ட முதல்நிலை மொபைல்களுக்கு ஏற்றதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட்:
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான கிட்காட் நேற்று வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்ட் பொறுத்தவரை புதிய பதிப்புகள் வெளிவந்தால் அதை அனைத்து மொபைல்களும் பெற முடியாது. சமீபத்தில் வெளிவந்த அதிக மெமரி உள்ள மொபைல்கள் மட்டுமே பெற முடியும். இதனை மாற்றி குறைந்த அளவு 512MB Ram-ஐக் கொண்ட முதல்நிலை மொபைல்களும் பெரும் வகையில் ஆண்ட்ராய்ட் கிட்காட் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது Smart Watches, Smart Glasses போன்ற அணியக்கூடிய நவீன உபகரணங்களுக்காகவும் (Wearable Gadgets) வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
- OK Google – வாய்மொழியால் மொபைலை இயக்க உதவும் Google Voice அப்ளிகேசனை இனி மொபைலை தொடாமலேயே “OK Google” என்று சொல்லி இயக்கலாம்.
- Smarter Caller ID – உங்கள் மொபைல் தொடர்பு பட்டியலில் இல்லாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அந்த எண் கூகுள் மேப்பில் இருந்தால் அதன் விவரங்களைக் காட்டும்.
- Hangout app – கூகுள் Hangout (முன்பு Google Talk) அப்ளிகேசனில் அரட்டை பேச்சுக்களுடன் உங்கள் நண்பர்கள் உங்கள் மொபைலுக்கு அனுப்பிய எஸ்எம்எஸ், எம்எம்எஸ் ஆகியவைகளை ஒரே இடத்தில் பார்க்கலாம்.
- 512 MB Ram – கிட்காட் இயங்குதளத்தில் பின்னணியில் இயங்கும் பல்வேறு சேவைகளை நீக்கியுள்ளது. அதனால் குறைந்தது 512MB Ram-ல் இயங்கும் அனைத்து மொபைல்களிலும் இஹை பயன்படுத்தலாம்.
- வீடியோ ரெகார்டர் – மொபைலில் நாம் செய்பவற்றை வீடியோ ரெகார்ட் செய்யலாம். இது தொழில்நுட்ப பதிவர்களுக்கு பெரிதும்பயன்படும்.
- Emoji – பல்வேறுவிதமான உணர்சித்திரங்களை (Emoticons) கூகுள் கீபோர்டில் சேர்த்துள்ளது.
மேலும் பல வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
எந்தெந்தமொபைல்களில் கிட்காட் பெறலாம்?
நேற்று புதிதாக அறிமுகமான நெக்சஸ் 5 மொபைலில் இந்தபதிப்புதான் இருக்கிறது. மேலும் கூகுள் பலே பதிப்பு மொபைல்களான Nexus (4, 7, 10) Samsung Galaxy S4 and HTC One ஆகியவற்றுக்கு விரைவில் வரவிருக்கிறது.
மற்ற மொபைல்களுக்கு எப்போது?
512MB Ram-ஐக் கொண்ட முதல்நிலை மொபைல்களுக்கு ஏற்றதாகவும் இது உருவாக்கப்பட்திருந்தாலும் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மொபைல் மாடல்களில் எப்போது அறிவிக்கிறதோ அப்ப்போதுதான் பெற முடியும். அநேகமாக எல்லா நிறுவனங்களும் தாங்கள் சமீபத்தில் வெளியிட்ட மொபைல்களுக்கு மட்டும் தான் கிட்காட் கொடுக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.
பயனுள்ள தகவல் நண்பா…கிட்காட் ஏழைகளுக்கும் எட்டும் கனியாக வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது…
தகவலுக்கு நன்றி