ஆண்ட்ராய்டில் தமிழ் – எழுத & படிக்க

ஆண்ட்ராய்ட் (Android) – கூகுள் நிறுவனத்தின் வெற்றி தயாரிப்புகளில் ஒன்றான மொபைல் மற்றும் டேப்லட்களுக்கான இயங்குதளம். ஐபோன் தொழில்நுட்பத்தை காப்பி அடிப்பதாக விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்க்கு முக்கிய காரணம் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதும், குறைந்த விலையிலேயே கிடைப்பதும் தான்.

இந்தியாவிலும் ஆண்ட்ராய்ட் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் தமிழ் தெரிந்தவர்களுக்கான முக்கிய தேவை “ஆண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதும், தமிழ் எழுத்துக்களை படிப்பதும்” தான்.

ஆண்ட்ராய்டில் தமிழ் படிக்க:

ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த மாற்றமும் செய்யாமலேயே படிக்கலாம்.

அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ப்ரவ்சர் Setting பகுதியில் Language என்ற இடத்தில் “Auto-Detect” என்று மாற்றினால் ப்ரவ்சரில் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.

ஆண்ட்ராய்ட் எந்த பதிப்பாக இருந்தாலும் Opera Mini உலவியில் தமிழ் எழுத்துக்களை படிக்கலாம். அதற்கு நீங்கள் பின்வரும் மாற்றத்தை செய்ய வேண்டும்.

Opera Mini உலவிக்கு சென்று about:config என்று டைப் செய்து Go என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கு Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்து Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு தமிழ் தளங்களை  பார்க்கலாம்.

கவனிக்க: ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பாக இருந்தாலும் பேஸ்புக் உள்ளிட்ட சில அப்ளிகேசன்களில் தமிழ் சரியாக தெரியாமல் இருக்கலாம். அதற்கு அந்த அப்ளிகேசன் தான் காரணம். அதை நம்மால் சரி செய்ய இயலாது.

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத:

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத பல அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில,

Tamil Unicode Keyboard (KM Tamil என்பது இன்னொரு பெயர்) (இது தான் நான் பயன்படுத்துகிறேன்)

Tamilvisai

இன்னும் நிறைய அப்ளிகேசன்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் பாதுகாப்பானவைகள் அல்ல. காரணம் மேலே சொன்ன இரண்டு அப்ளிகேசன்களையும் பயன்படுத்த எந்த அனுமதியும் (Permission) கேட்காது. ஆனால் மற்ற அப்ளிகேசன்கள் தேவையில்லாமல் பல அனுமதிகள் நம்மிடம் கேட்கும். (ஆண்ட்ராய்ட் அனுமதிகள் பற்றி ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா? என்ற பதிவில் பார்க்கவும்).

இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு,  ஆண்ட்ராய்டில் Settings => Language & input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & input methods என்ற இடத்தில் இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.

பிறகு மொபைலில் நீங்கள் எழுதும் போது திரையின் மேலே Select Input என்று இருப்பதை கீழே Swipe செய்து அதில் நீங்கள் நிறுவியுள்ள அப்ளிகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:  ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவுதல்

மீண்டும் இது போன்றே மொபைல் கீபோர்டுக்கு மாறிக்கொள்ளலாம்.

கவனிக்க: இன்டர்நெட் இணைப்பின் அனுமதி கேட்கும் தட்டச்சு அப்ளிகேசன்களால் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை சேகரிக்க முடியும்.

வேறு ஏதும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

43 thoughts on “ஆண்ட்ராய்டில் தமிழ் – எழுத & படிக்க”

  1. மிகவும் உபயோகமான தகவல்! இதுவரை Android Mobile மூலம் தமிழ் எழுத முயன்றதில்லை! பாதுகாப்பான அப்ளிகேஷன்கள் கிடைக்காததே காரணம்!

    //கவனிக்க: இது போன்ற தட்டச்சு அப்ளிகேசன்களால் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை சேகரிக்க முடியும்//
    புரியலியே?!

  2. @கார்த்திக்

    இன்டர்நெட் இணைப்பின் அனுமதி கேட்கும் தட்டச்சு அப்ளிகேசன்களால் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை சேகரிக்க முடியும்.

    என்று மாற்றியுள்ளேன்.

  3. @Anonymous

    செல்லினம் அப்ளிகேசன் தேவையில்லாத பல அனுமதிகள் கேட்கின்றது. இது பாதுகாப்பானது அல்ல.

  4. KM Tamil-ஐ தான் ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறேன். 2.3 – யிலும் சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.

  5. //வேறு ஏதும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.//

    நா யூஸ் பண்ற நோக்கியா 110c போன் ல என்ன அப்ளிகேசன் போட்டா இணைய இணைப்பு கிடைக்கும்…

  6. பதிவ தெளிவா எழுதி இருக்கீங்கன்னு நினைக்கிறேன் பாஸித்.. படம்லாம் போட்டு இருக்கு..
    நான் இன்னும் படிக்கல.. பட் ஓட்டு போட்டுட்டேன்..

    ஏன்னா ஆன்டிராய்ட் மொபைல் நம்மகிட்ட இல்ல… நோகியா 3100 தான் இருக்கு.. ஹி..ஹி.ஹி

  7. போனை அணைக்கு அனுப்பி வையுங்கள். செக் செய்து பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன்.

    🙂 🙂 🙂

  8. சோனி எரிக்சனில் செல்லினம் சொதப்புகிறது. KM விசையும் சிலநேரங்களில் கழுத்தருக்கிறது. தற்போது தமிழ்விசையில்தான் தட்டச்சி உள்ளேன். சிலநேரம் இதுவும் சொதப்புகிறது. சகோ.பாசித். துபையில் எங்கிருக்கிறீர்கள்? adiraiwala@ஜீமெயிலுக்கு உங்கள் தொடர்பு எண்ணை மடலிடவும்.

  9. ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத பல அப்ளிகேசன்கள் இருக்கின்றன.
    அவற்றில் சில:
    1.Tamil Unicode Keyboard (KM Tamil என்பது இன்னொரு பெயர்)
    2.Tamilvisai
    3.முரசு செல்லினம்
    4.MultiLing Keyboard
    இன்றைய (தமிழ்) மொபைல் உலகினருக்கு மிக அவசியமான தகவல்.

  10. அஸ்ஸலாமு அலைக்கும்
    நான் galaxy tab GTP1000 வைத்துள்ளேன்.தமிழ் படிக்க என்ன செய்ய வேண்டும்?எல்லா app ம் download பண்ணிப் பார்த்தும் தமிழ் வாசிக்க முடியவில்லை.pls help me

  11. வ அழைக்கும் ஸலாம்

    உங்கள் டேப்லட்டை Gingerbread பதிப்புக்கு மாற்றிவிட்டீர்களா? பதிவில் சொன்ன ஒபேரா மினி அப்ளிகேசன் பயன்படுத்தி பாருங்கள்.

  12. அஸ்ஸலாமு அலைக்கும்
    மீண்டும் ஒரு உதவி
    android app update எப்படி பண்ணவேண்டும் என்பதையும் தமிழில் எப்படி எழுத வேண்டும் என்பதையும் தயவு செய்து சொல்லவும்.நான் வைத்திருப்பது galaxy tab 1000.பதிலை எதிபார்த்து …அஹ்மத்

  13. thanks…
    இத்தனை நாளும் இதன் தேவை இல்லாமல் இருந்தேன்…
    இப்போ தேவைப்பட்டது…காரணம் நாட்டுக்கு போக இருப்பதால்….

    google play coby (Android 4.0 IceCream Sandwich) .இல் ஸபோட் ஆகவில்லை…
    1 மொபைல் மாகட் டவுன்லோட் பண்ணி…
    Tamil Unicode Keyboard ட்ரை பண்ணினேன்…
    எனக்கு கடிணமாக இருக்கு…
    நான் வழமையாக பாமினியில்தான் டைப் பண்ணுவேன்…

    அப்போ எது டைப்பிட்கு இலகுவானதாக .இருக்கும் சகோ….

  14. அஸ்ஸலாமு அழைக்கும் நான் சாம்சுங் android v2.3.6 build number gingerbread.jplk2 இருக்கு இதில் தமிழ் படிக்கணும் நான் ஒபெரமினி v12 இதிலயும் தமிழ் பொன்ட் வரல seet browser use பன்னுறின் அனால் அது எனுக்கு புடிக்கலா நான் எந்த ப்ரோவேச்ர் use பண்ணலாம்?Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ப்ரவ்சர் Setting பகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் ப்ரவ்சரில் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.இதை மாட்டற முடியல எப்படி பண்ணனும்.pls பதுல்சொல்லுங்க வஸ்ஸலாம்

  15. salaam basith,
    ஆண்ட்ராய்டை பற்றி சொன்னேள் அனால் பெண்ட்ராய்டை பற்றி சொல்லவில்லையே…but really useful tips thnk u jazakallah khaire

  16. நீங்கள் ஆண்ட்ராய்ட் Gingerbread பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒபேரா மினியில் மட்டுமே தமிழ் படிக்க முடியும். Settings சரியாக கொடுத்தீர்களா?

  17. தமிழ் km unicode keyboard பயன்படுத்தினால் this method can collect all of the text you enter ,except passwords,including personal data and credit card numbers.it comes from the app km tamilkeyboard.use any way ? என்று வருகிறது

  18. செல்லினம் பயன் படுத்துகிறேன் ஆண்ட்ராய்டு 4.2.1 போன் யூஸ் பன்றேன் முகநூலில் தமிழ்மொழி செட் செய்ய முடியவில்லை செட் செய்ய முடியுமா?

  19. பயனுள்ள தகவல்கள் பாஸித் அண்ணா ,நான் எழுத்தாணி (eluthani) என்றொரு தமிழ் தட்டச்சு ஆண்ட்ராய்டு செயலி பயன்படுத்தியுள்ளேன் இதுவும் நன்றாக உள்ளது.தேவை இல்லா பெர்மிசன்கள் கேட்பதில்லை,டைப்புவதும் எளிதாக உள்ளது, கூகுள் ப்ளேயில் கிடைக்கிறது. அது சரி பெண்ட்ராய்டு பற்றி சொல்லவே இல்லை 🙂